ஷங்கர், மணிரத்தினத்தை பின்னுக்கு தள்ளிய லோகேஷ்.. ஒரு படத்திற்கு இத்தனை கோடியா.?

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக தற்பொழுது வலம் வந்து கொண்டிருப்பவர் லோகேஷ் கனகராஜ். அவர் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இன்றைய இளைஞர்களை தன்வசப்படுத்தி வைத்துள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவருடைய படங்கள் அனைத்துமே இன்றைய காலகட்டத்தில் உள்ள இளைஞர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.

கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து தோல்வி படங்களை சந்தித்து தமிழ் சினிமா மிகப்பெரிய சரிவை நோக்கி இருந்த காலகட்டத்தில், விக்ரம் படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து தமிழ் சினிமாவை மீட்டெடுத்தவர் லோகேஷ் கனகராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது நடிகர் விஜய் நடித்துவரும் லியோ படத்தின் படப்பிடிப்பில் மிக விறுவிறுப்பாக செயல்பட்டு வரும் லோகேஷ் கனகராஜ்.

அடுத்து அவர் இயக்கம் இருக்கும் படத்திற்கு தற்போது இருந்தே பல முன்னணி நடிகர்களும் தயாரிப்பாளர்களும் ஒப்பந்தம் செய்வதற்காக போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் நடிகர் ரஜினி நேரில் அழைத்து லோகேஷ் கனகராஜ்யிடம் அடுத்து நம்ம ஒரு படம் சேர்ந்து பண்ணலாம் என்றும் சொல்லி சம்பளமாக 35 கோடி தரப்படும் என ரஜினி பேசியுள்ளார்.

ஆனால் இதற்கு உறுதியான தகவல் எதுவும் லோகேஷ் கனகராஜ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து பாலிவுட் நடிகர் சல்மான்கான் சமீபத்தில் லோகேஷ் கனகராஜை அழைத்து எனக்காக ஒரு கதையை தயார் செய்யுங்கள். நம்ம சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் என்று தெரிவித்து, அதற்காக சம்பளம் 50 கோடி ஆப்பர் கொடுத்துள்ளார் சல்மான்கான்.

இருந்தும் லோகேஷ் கனகராஜ் எந்த ஒரு உறுதியும் தெரிவிக்காமல் இருந்து வருகிறார், இந்த நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களான மணிரத்தினம், சங்கர் போன்றபிரம்மாண்ட இயக்குனர்களை மிகக் குறுகிய காலத்தில் சினிமாவில் அறிமுகமாகி பின்னுக்கு தள்ளி லோகேஷ் கனகராஜ் இந்திய அளவில் மிகப்பெரிய இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.