இயக்குனர் சங்கர் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வரும் படம் இந்தியன் 2. ஏற்கனவே நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் பல வருடங்களுக்கு முன்பு வெளியான இந்தியன் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து இயக்குனர் சங்கருக்கு பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் வாங்கிக் கொடுத்த படம் இந்தியன்.
அந்த வகையில் இந்தியன் 2 படத்தை காண எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. மேலும் ஏற்கனவே சங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான எந்திரன் 2 படம் மிகப்பெரிய தோல்வியை அடைந்த நிலையில், தன்னுடைய அடுத்த படைப்பு மிக பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்பதில் மிக தீவிரமாக வேலை செய்து வருகிறார் சங்கர்.
இந்த நிலையில் தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் ஒரு பேன் இந்தியா படமும், கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 ஆகிய இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் எடுத்து வருகிறார் சங்கர். இதில் ராம்சரண் நடிப்பில் உருவாகி வரும் படத்தை பொங்கல் பண்டிகைக்கு தமிழ் தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளார்.
ஆனால் இந்தியன் 2 படத்தை வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளிய வருவதற்கான தேதி உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அக்டோபர் மாதம் லியோ படத்தை வெளியிடுவதற்கு லியோ பட குழுவினர் திட்டமிட்டன் நிலையில், லியோ படம் வெளியான அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் தீபாவளி பண்டிகையை ஒட்டி இந்தியன் 2 படம் வெளியாக இருக்கிறது.
லியோ படம் வெளியாகி அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் இந்தியன் 2 வெளியாகும் பட்சத்தில் லியோ படம் அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் திரையரங்கு எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் குறையும் என்பதால் அந்தப் படத்தின் வசூலும் பாதிக்கப்படும் என்கின்ற தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஏற்கனவே அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்துடன் நேரடியாக மோதிய விஜய் நடித்த வாரிசு படம் வசூலில் மிகப்பெரிய சாதனை படைக்க முடியவில்லை. இந்த நிலையில் விஜய் நடிக்கும் லியோ படத்திற்கு ஆப்பு வைக்கும் விதத்தில் இந்தியன் 2 ரிலீஸ் ஆவது விஜய்க்கு மட்டுமல்ல லியோ பட குழுவினருக்கும் பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது என கூறப்படுகிறது.