தென் ஆப்பிரிக்காவில் நடு காட்டில் சிக்கி அவதிப்படும் இந்தியன் 2 பட குழுவினர்… என்ன தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் சங்கர் தற்பொழுது ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கி வருகிறார், அதில் ஒன்று ஏற்கனவே அவர் இயக்கத்தில் வெளியான வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த இந்தியன் படத்தின் கதையை தழுவி இரண்டாம் 2 படமும், தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் ஒரு படமும் இயக்கி வருகிறார்.இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் கதை அரசால் புரசலாக வெளியாகியுள்ளது.

இதற்கு முன்பு வெளியான இந்தியன் படத்தில் இந்தியன் தாத்தா பல கொலைகளை செய்துவிட்டு போலீசாரால் தேடப்படும் குற்றவாளியாக இந்தியாவில் இருந்து தப்பித்து வெளிநாட்டுக்கு சென்று விடுகிறார். அத்துடன் வெளிநாட்டிலிருந்து தொலைபேசி மூலம் இந்தியாவில் உள்ள போலீசாரை தொடர்புகொண்டு இந்தியனுக்கு சாவே கிடையாது என்றும் இதை நாட்டு மக்களுக்கு தெரிவியுங்கள் என கமல்ஹாசன் பேசும் அந்த காட்சியுடன் படத்தின் முடிவு இருந்திருக்கும்.

இந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் வெளிநாட்டில் உள்ள இந்தியன் தாத்தா தேடப்படும் குற்றவாளியாக இருப்பதால் விமான மூலம் இந்தியாவில் உள்ள நுழைய முடியாது, அதனால் கடல் மார்க்கமாக இந்தியாவில் உள்ளே நுழைகிறார். ராமேஸ்வரம் தனுஷ்கோடி வழியாக இந்தியன் தாத்தா இந்தியா உள்ளே நுழைகிறார் என கூறப்படுகிறது, இதற்கு முன்பு பனையூரில் ஒரு சண்டைக் காட்சி படமாக்கப்பட்டுள்ளது அதில் இந்தியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் நடக்கும் சண்டை காட்சி போன்று படமாக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது தென் ஆப்ரிக்காவில் உள்ள அடர்ந்த காட்டு பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்று வருகிறது, இந்த பகுதி தென் ஆப்ரிக்காவில் உள்ள நகர் பகுதியில் இருந்து சுமார் 6 மணிநேரம் அடர்ந்த காட்டு பகுதி வழியாக பயணம் செய்து படப்பிடிப்பு நடைபெறும் இடத்தை சென்றடைய வேண்டுமாம்.

அதனால், ஒவ்வொரு நாளும் வருவதற்கு 6 மணிநேரம், திரும்பி செல்வதற்கு 6 மணிநேரம் என 12 மணிநேரம் பயணம் செய்து படப்பிடிப்பு தளத்திற்கு வர முடியாது என்பதால், படப்பிடிப்பு நடைபெறும் அடர்ந்த காட்டு காட்டு பகுதியில் உள்ள அந்த கிராமத்தில் அருகில் உள்ள சிறிய ஹோட்டல்களில் தங்கி பட குழுவினர் படப்பிடிப்பு நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் போதிய வசதியில்லாமல் இயக்குனர் சங்கருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள படக்குழுவினர், அங்கே தென் ஆப்ரிக்காவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியதும் 25நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த உள்ளார்கள், அதற்காக பிரசாத் ஸ்டுடியோவில் மிக பிரமாண்ட செட் அமைக்கும் பனி நடைபெற்று வருகிறது.