மணிரத்தினம் மனைவிக்கு சரிய சவுக்கடி கொடுத்த இயக்குனர் ராஜமௌலி… இனிமேலாவது திருந்துவார்களா.?

0
Follow on Google News

தமிழ் மன்னர்கள் சோழ சாம்ராஜ்யத்தின் கதையை கருவாக கொண்டு உருவான படம் பொன்னியின் செல்வன்,இந்த படம் வெளியாவதற்கு முன்பு தெலுங்கு மொழிக்கான பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன் நிகழ்ச்சிஆந்திராவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பொன்னியின் செல்வன் படத்தின் இயக்குனர் மணிரத்தினம் மனைவி சுஹாசினியின் பேச்சு ஒட்டு மொத்த தமிழர்களையும் அவமானப்படுத்தும் விதத்தில் அமைத்திருந்தது.

ஆந்திராவில் சுஹாசினி பேசுகையில், பொன்னியின் செல்வன் படம் பெரும்பாலும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் எடுக்கப்பட்டுள்ளது என்று மலர்ந்த முகத்தில் மகிழ்ச்சியாகவும் , தமிழ்நாட்டில் பாண்டிச்சேரியில் வெறும் பத்து நாட்கள் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது சலிப்பாக பேசிய சுஹாசினி, பொன்னியின் செல்வன் படம் உங்களுக்கான படம் என்றும், நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் என்று தெலுங்கு பேசும் மக்கள் மத்தியில் பேசினார் சுகாஷினி.

பொன்னியின் செல்வன் படத்தை பிற மொழியில் ஓட வைப்பதற்காக, அந்த மொழி பேசும் மக்களை கவர்வதற்காக, தமிழ்நாட்டை குறைத்து சுகாஷினி பேசியது, ஒட்டு மொத்த தமிழர்களையும் அவமானப்படுத்தும் செயல் என தமிழர்கள் மத்தியில் அப்போது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதே போன்று ஒரு முறை ஆந்திராவில் நடந்த ஒரு சினிமா நிகழ்ச்சியில் தனக்கு பிடித்த மொழி தெலுங்கு என நடிகர் கார்த்திக் கடந்த காலங்களில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான RRR திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு…’ பாடல் சிறந்த திரை இசைப் பாடலுக்கான பிரிவில் ‘கோல்டன் குளோப்’ என்கிற சர்வதேச விருதை வென்றுள்ளது, இந்த விருதை வென்றுள்ள RRR படக்குழுவினர் உலகம் முழுவதும் சுற்றி வருகிறார்கள், இவர்களிடம் சர்வதேச மீடியா பாலிவூட் படமான RRR குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

அதற்கு ராஜமௌலி, இது பாலிவுட் படம் கிடையாது, ஒரு ரிஜனல் படம் என தன்னுடைய தாய் மொழியான தெலுங்கை மற்றும், அவர் மண் சார்ந்த மக்களையும் பெருமை அடையும் வகையில் உலகம் முழுவதும் குறிப்பிட்டு பேசி வருகிறார் ராஜமௌலி. இதே போன்று காந்தார படத்தின் இயக்குனர் வேறு எந்த ஒரு மாநிலத்திற்கு சென்றாலும், இது கர்நாடக மண் சார்ந்த படம் என பெருமையாக பேசி வருகிறார்.

இந்த நிலையில் சர்வதேச அளவில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில், உலகம் முழுவதும் தன்னுடைய தாய் மொழியையும் தன் சார்ந்த மண்ணையும் பெருமையாக பேசி வரும் ராஜமௌலி போன்றவர்கள் மத்தியில் ஒரு படம் பிற மொழியில் ஓடுவதற்காக அந்த படம் சார்ந்த கதையின் கருவாக அமைந்துள்ள தமிழர்களையும் தமிழ்நாட்டையும் இதற்கு முன்பு குறைத்து பேசிய சுஹாஷினி போன்றவருக்கு ராஜமௌலி வெளிப்படுத்தும் இன உணர்வு சவுக்கடியாக அமைந்துள்ளது என்கின்றனர் தமிழ் உணர்வாளர்கள்.