பிரபல சினிமா தயாரிப்பாளர் AM சௌத்ரி தேவர் தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித் இருவருக்கும் எதிராக கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வரக்கூடியவர், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படத்தில் பகத் பாசில் நடித்த ரத்தினவேல் கதாபாத்திரத்தை வில்லனாக மாமன்னன் படத்தில் காட்டியிருப்பார் மாரிசெல்வராஜ்.
இந்நிலையில் மாமன்னன் படத்தில் நடித்த வடிவேலுவின் மாமன்னன் கதாபாத்திரம் மிக பெரிய அளவில் பேசப்படும் என்றும், பகத் பாசில் நடித்த ரத்தின வேல் கதாபாத்திரத்தை, இவ்வளவு சாதி வெறி பிடித்த ஒரு மனிதனா என்று மக்கள் மத்தியில் விமர்சனகள் வரும் என இயக்குனர் மாரிசெல்வராஜ் மற்றும் மாமன்னன் பட குழுவினரும் எதிர்ப்பார்த்ததாக கூறப்பட்ட நிலையில் அதை தலைகீழாக மாற்றி, எந்த நோக்கத்திற்க்காக மாரி செல்வராஜ் படம் எடுத்தாரா அதற்கு நேர் எதிராக மாற்றி, மாமன்னன் படத்தில் இடம்பெற்ற ரத்தினவேல் கதாபாத்திரத்தை மக்கள் கொண்டாடும் வகையில் வழி வகை செய்தவர் தயாரிப்பாளர் சௌத்ரி தேவர்.
பொதுவாகவே மாமன்னன் படம் ரிலீஸ் ஆகி பெரிதாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெறாமல் இருந்த நிலையில், மாமன்னன் படத்தில் இடம்பெற்ற ரத்தினவேல் கதாபாத்திரத்தை குறியீடாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மறைமுகமாக தன்னுடைய சினிமா வாயிலாக மாரி செல்வராஜ் வெளிப்படுத்தியுள்ளார் என விமர்சனங்கள் எழுந்த நிலையில், ரத்தினவேல் கதாபாத்திரம் தன்னுடைய தேவர் சமூகத்தை சேர்ந்தவர் என ரத்தினவேல் தேவரை கொண்டாடுவோம் சௌத்ரி தேவர் தொடங்கி வைக்க.
இது பிற சமூகத்தினர் மத்தியிலும் வரவேற்பை பெற்று, ரத்தினவேல் கவுண்டர், ரத்தினவேல் வன்னியர் என அவரவர் சமூகத்தினர் ரத்தினவேல் பெயருக்கு பின்னால் அவர்களுடைய சாதி பெயரை குறிப்பிட்டு கொண்டாட, திரையரங்கில் வெளியாகி மண்ணை கவ்வி இருந்தாலும் OTT தளத்தில் வெளியாண பின்பு ரத்தினவேல் கதாபாத்திரத்திற்காக மக்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றது.
அந்த அளவுக்கு வில்லனான ரத்தினவேலுவை ஹீரோவாக மக்கள் மத்தியில் கொண்டாட செய்த சௌத்ரி தேவர் இனி வரும் காலங்களில், மாரி செல்வராஜ் படத்தில் வரும் வில்லன் கதாபாத்திரத்தை கொண்டாடுவோம் என தெரிவித்தார் சௌத்ரி தேவர், ரத்தினவேல் விவகாரத்திற்கு பின்பு, கொங்கு பகுதி, வடமாவட்டம், தென் மாவட்ட ஆகிய பகுதிகளில் இருக்கும் பெரும்பான்மை சமூகத்தினர் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டு வருகிறார் சௌத்ரி தேவர்.
இந்நிலையில் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் தங்கலான் திரைப்படம் ஜனவரி மாதம் வெளியாகும் என கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே தகவல் வெளியானது, இந்த நிலையில் சௌத்ரி தேவர் எடுத்து வரும் பசும்பொன் முத்துராமலிக்க தேவரின் வாழ்க்கை வரலாறை மய்யமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் தேசிய தலைவர் திரைப்படம் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாக இருக்கும் தங்கலான் படம் வெளியாகும் அதே தேதியில் வெளியிடுவோம் என பகிரங்க சவால் விடுத்திருந்தார் சௌத்ரி தேவர்.
இந்நிலையில் தங்கலான் உடன் தேசிய தலைவர் நேரடியாக மோத இருப்பதை, குறிப்பாக பா.ரஞ்சித்துக்கு இருக்கும் ஹெட்டர்ஸ் மத்தியில் மிக பெரிய வரவேற்ப்பை பெற்றது, தேசிய தலைவர் மூலம் தங்கலானை மண்ணை கவ்வ வைப்போம் என ரஞ்சித் ஹெட்டர்ஸ் சௌத்ரி தேவருக்கு ஆதரவை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தற்பொழுது திடீரென தங்கலான் திரைப்படம் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுவதாகவும் . மார்ச் 29ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு, என்ன ரஞ்சித் பயந்துட்டியா, நீ தான் தைரியமான ஆளாச்சே தேசிய தலைவர் படத்துடன் உங்க தங்கலான் படத்தை ரிலீஸ் செய்து மோதி பாத்திரவேண்டியது தான என நெட்டிசன்கள், பா.ரஞ்சித்தை கிண்டல் செய்து வரும் நிலையில், இது குறித்து சௌத்ரி தேவரை தொடர்பு கொண்டு கேட்ட போது, தங்கலான் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வெச்சாலும், எப்போது பா. ரஞ்சித் தங்கலான் படத்தை ரிலீஸ் செய்கிறாரோ அதே தேதியில் தான் எங்களுடைய தேசிய தலைவர் படத்தை ரிலீஸ் செய்வோம், அந்த வகையில் ரஞ்சித் பின்வாங்கி ஓடினாலும் நாங்க விடமாட்டோம் என தெரிவித்துள்ளார் பிரபல தயாரிப்பாளர் சௌத்ரி தேவர்.