விக்ரம் கனவில் மண்ணை அள்ளி போட்ட பா.ரஞ்சித்… இதுக்கா இவ்வளவு கஷ்ட பட்டார் விக்ரம்..

0
Follow on Google News

விக்ரம் 100 சதவீத உழைப்பையும் அர்ப்பணிப்பையும் தங்கலான் படத்தில் கொடுத்திருக்கிறார்.. அதற்கு குறைந்தபட்சம் பா ரஞ்சித் அவருடைய இயக்கத்தில் 10% ஈடு கொடுத்திருந்தாலே படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆகிருக்கும். முதல் பாதி ஓகே.. இரண்டாம் பாதி கேவலம்.. படம் முழுக்க தேவையற்ற இடங்களில் தேவையற்ற கருத்து திணிப்பு. ரஞ்சித்தின் மெட்ராஸ் சார்பட்டா பரம்பரை போன்று இல்லாமல்.

தங்கலான் படத்தில் ரஞ்சித் முழுக்க முழுக்க வேறு திசையில் கற்பனை கதாப்பாத்திரங்களோடு பா.ரஞ்சித்தும் குழம்பி மக்களையும் குழப்பி விட்டார். ரஞ்சித்தை தீவரமாக ரசிப்பபவர்களுக்கு கூட பிடிக்காத படத்தை தந்திருக்கிறார் ரஞ்சித், உண்மைய சொல்லனும் னா ரஞ்சித்தோட புரட்சிய வலுக்கட்டாயமா சில பல இடங்கள் திணிக்காம இருந்துருந்தா படத்தோட அவுட்புட் சூப்பரா வந்துருக்கும்.

நல்லா போயிட்டு இருந்த படத்துல கருத்து சொல்றேன் பாரு னு ஸ்லோ பண்ணிட்டார் ரஞ்சித். பா.ரஞ்சித்துக்கு நல்ல திரைமொழி உண்டு. ஆனால் திரைக்கதை என்பது மெட்ராஸ் சார்பட்டா போல நேரடி அனுபவத்திலிருந்தோ, வரலாற்றிலிருந்து டேட்டா எடுத்தாலோ நன்றாக வரும். ஆனால் தனக்கே ஆழமான அறிவில்லாத நச்சத்திரம் நகர்கிறது , தங்கலான் போன்ற கான்செப்ட்களை எடுக்கும்போது அவருடைய படைப்பு மொக்கை வாங்கிவிடுகிறது.

கடைசி ஒரு 15 நிமிச கதைய வச்சு ஒரு முழு கதைய கர்ணன் மாதிரியே கழுத, குதிர, புத்தர் சிலைன்னு உள்ள வழுக்கட்டாயமா திணுச்சு எழுதியிருக்கார் ரஞ்சித், மேலும் தெரியாத அரசியல எடுக்குறத விட்டுட்டு தெரிஞ்ச வேலைலரஞ்சித் ஒழுங்கா concentrate பண்ணா இன்னும் நல்ல அவுட்புட் வரும் மொத்தத்தில் ஒரே டிக்கெட்டில் ரெண்டு பாலா படம்.. மூணு செல்வராகவன் படம்.. ஐந்து பா.ரஞ்சித் படம் தான் தங்கலான்

கதாநாயகன் தங்கலான் தனது மனைவி, பிள்ளைகள் மற்றும் மக்களுடன் வாழ்ந்து வருகிறார். வெள்ளைக்காரர்களின் அரசாங்கத்தின் கீழ் இருக்கும் மிராசுக்கள், தங்கலானுடைய மக்கள் அனைவரையும் அடிமைபோல் நடத்தி வருகிறார்கள்.இந்த நிலையை மாற்றி தனது மக்களை அடுத்தகட்டத்துக்கு அழைத்து செல்லவேண்டும் என நினைக்கிறார் விக்ரம்.

இந்த நேரத்தில் வெள்ளைக்காரன் Clement மூலம் தங்கம் தேடும் வேலை இவர்களுக்கு வருகிறது. அதனை செய்வதன் மூலம் தங்களுக்கு அதிகம் சம்பளம் கிடைக்கும், அதன்மூலம் மிராசிடம் இருக்கும் தங்களின் நிலங்களை மீண்டும் வாங்கிவிடலாம் என எண்ணி தனது மக்களை தங்கம் தொடும் இடத்திற்கு விக்ரம் அழைத்து செல்கிறார். இதன்பின் என்ன நடந்தது? அங்கு அவர்கள் என்னென்ன சவால்களை எல்லாம் சந்தித்தார்கள் என்பது தான் படத்தின் மீதி கதை.

பாவம் ய மனுஷன்..ஒன்னும் இல்லாத படத்துலயும் உயிர குடுத்து நடிச்சி வைப்பாரு ….. இந்த படத்துலயும் அப்படிதான் நடிப்புல மெரட்டிருக்காரு இதுக்கு மேல இவரால என்னடா பண்ணமுடியும்….. வெள்ளந்தியான மனுஷன் யாரு டைரக்டர் னாலும் குறை வைக்காம நடிச்சி குடுத்துருவாரு…இவ்வளவு திறமை இருந்தும் சரியான Hit குடுக்க முடியல….. ஒரு வேளை விக்ரம் Hollywood ல இருந்தாலும் oscar கூட வாங்கிருக்கலாம்…. தவறான கதை தேர்வு இப்படி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறார் விக்ரம்.