சாதி பார்த்து வாய்ப்பு கொடுக்கும் பா.ரஞ்சித்.. பிரபல நடிகையை புறக்கணித்த இவர் சமூகநீதி பற்றி வாய் திறக்கலாமா.?

0
Follow on Google News

இயக்குனர் பா ரஞ்சித், அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார், அவர் இயக்கத்தில் வெளியான இரண்டாவது படம் மெட்ராஸ் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இதன் பின்பு அடுத்தடுத்து தொடர்ந்து இரண்டு படங்கள் ரஜினிகாந்தை வைத்து இயக்கும் வாய்ப்பு பா.ரஞ்சித்துக்கு கிடைத்தது. இந்நிலையில் ரஜினிகாந்தை வைத்து படம் எடுத்த முன்னணி இயக்குனர் வரிசையில் பா ரஞ்சித் இடம் பிடித்திருந்தாலும், அவருடைய படத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்கள் தயக்கம் காட்டி வந்தனர்.

இதற்கு காரணம், பா.ரஞ்சித் சாதிய ரீதியான கருத்துக்களை தெரிவித்து தன்னை ஒரு சாதி வட்டத்துக்குள் அடைத்து கொண்டது தான் என்று கூறப்படுகிறது. மேலும் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்த நடிகர் கார்த்திக் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் குறிப்பிட்ட சில தரப்பினரிடம் இருந்து எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது, இதனால் இதற்கு வம்பு என பல முன்னனி நடிகர்கள் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க தயக்கம் காட்டி வந்தனர்.

ஒரு சில படங்களை மட்டும் இயக்கிய பா.ரஞ்சித் தொடர்ந்து அவருடைய சினிமாவில் சாதிய சாயல்கள் இடம் பெற்றிருக்கும், அதே நேரத்தில் சினிமா தவிர்த்து பொது மேடைகளில் பேசும் பா.ரஞ்சித் சாதிய குறித்து பேசி பெரும் சர்ச்சையில் சிக்குவதும் வழக்கம், அந்த வகையில் அவர் ஒரு முறை தஞ்சையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஒவ்வொரு தமிழனும் கொண்டாட கூடிய ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் அவர் பேசியதாவது.

ராஜராஜ சோழன் காலம்தான் பொற்காலம் என்பார்கள். ஆனால், ராஜராஜ சோழன் ஆண்ட காலம்தான் இருண்ட காலம் என இந்த மண்ணிலிருந்து சொல்கிறேன். ராஜராஜ சோழன் என்னுடயை சாதியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. மிகப்பெரிய சூழ்ச்சியின் அடிப்படையில் எங்களது நிலம் பறிக்கப்பட்டது. அவரது ஆட்சிக் காலத்தில்தான். சாதி ரீதியாக மிகப்பெரிய ஒடுக்குமுறை ஆரம்பிக்கப்பட்டது.

அவரது ஆட்சியிலிருந்துதான் ஜாதி பிழவு கட்டமைக்கப்பட்டது. தேவதாசி முறை அவர்கள் ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது. தற்போது ராஜராஜ சோழன் எங்களின் ஜாதிக்காரர் என்று 8 ஜாதிக்காரர்கள் சண்டையிட்டு கொள்கிறார்கள். ராஜராஜ சோழன் ஆட்சிதான் இருப்பதிலேயே இருண்ட ஆட்சி என்று நான் சொல்வேன் என பா.ரஞ்சித் பேசியது ஒவ்வொரு தமிழர்கள் மத்தியில் அவருக்கு எதிராக கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.

இப்படி தன்னை ஒரு சாதி எதிர்ப்பு போராளி என்று வெளிப்படுத்திக் கொள்ளும் பா ரஞ்சித் தொடர்ந்து சினிமாவில் சாதி ஒடுக்குமுறை இருக்கிறது, இந்த சமூகத்தில் சாதி ஒடுக்குமுறை இருக்கிறது என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி வரும் பா.ரஞ்சித், அவருடைய படத்தில் சாதியின் அடிப்படையில் நடிகை நடிகர்களை தேர்வு செய்த தகவல் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா படத்தில் ரஜினிகாந்த் மனைவியாக நடித்த நடிகை ஈஸ்வரி ராவ் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகை சுகன்யா எனக் கூறப்படுகிறது. ஆனால் நடிகை சுகன்யா ஒரு பிராமண சமூகத்தை சார்ந்தவர் என்பதால் அவரை, இந்த படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பா. ரஞ்சித் கொடுக்கவில்லை என்கின்ற தகவல் ஒன்று சினிமா வட்டாரத்தில் தற்பொழுது வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் பா ரஞ்சித் சாதிய வன்கொடுமைக்கு எதிராக தொடர்ந்து பேசி வரும் நிலையில், தன்னை ஒரு சாதி எதிர்ப்பு போராளி என்று பேசி வரும் பேசி வரும் நிலையில், சாதி பார்த்து ஒரு நடிகைக்கு தன்னுடைய படத்தில் வாய்ப்பு அளிக்க மறுத்த பா.ரஞ்சித் இனி சமூக நீதி பற்றி எப்படி பேசலாம்.? என்கின்ற ஒரு கருத்து நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.