பா.ரஞ்சித் அளவுக்கு தமிழ் பெண்களை யாரும் கேவலப்படுத்த முடியாது… குடும்பத்துடன் இந்த காட்சியை பார்க்க முடியும்.?

0
Follow on Google News

ஆதி மனித வாழ்க்கைத் தொடங்கி இன்றைய நவநாகரீக வாழ்க்கை வரை மனிதன் கடந்து வந்த பாதையும்., மனித வாழ்க்கை கண்ட கலாச்சார மற்றும் வாழ்வியல் மாற்றங்களும் எண்ணற்றவை. நிச்சயமாக கல்வியலிலும் பற்பல மாற்றங்கள் வந்திருக்கலாம். அதையெல்லாம் யதார்த்தமாக கூறுகிறேன்., பட்டவர்த்தனமாக கூறுகிறேன் என்ற பெயரில் திரையில் வெளியிட்டால் எவ்வளவு கேவலமாக இருக்கும் என்பதற்கு உதாரணம் தான் தங்கலான் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.

புரட்சி என்ற பெயரில் இனிவரும் காலங்களில் இன்னும் என்னெல்லாம் பா.ரஞ்சித் படம் எடுக்க போகிறார் என்கிற ஒரு வித பயம் பலருக்கு ஏற்பட்டுள்ளது. தங்கலான் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சி, அருவருப்பின் உச்சம் என்று சொல்லும் வகையில் அமித்துள்ளது. அந்த கட்சியில் நடித்த துணை நடிகைகள், இந்த படம் வெளியானது, அந்த காட்சியை பார்த்த பின்பு அவர்களின் மன நிலை எப்படி இருக்கும் என்கிற கேள்வி பா.ரஞ்சித்தை நோக்கி எழுந்துள்ளது.

அருவருப்பான காட்சி என்று சொல்ல கூடிய அந்த காட்சியில், யாரோ ஒரு துணை நடிகை தனது மார்பகங்களை தொட்டு வியப்பதுபோல் காட்சிகள், அதில் வரும் வசனங்கள் எல்லாம் குடும்பத்துடன் படம் பார்க்க சென்றவர்களின் முகம் சுழிக்க வைக்கிறது. புரட்சி என்கிற பெயரில், இன்றைய நவீன காலத்தில் எப்படி வேண்டுமானாலும் காட்சி வைக்கலாம் என்பதிலேயே பல்லிளித்துவிட்டது பா.ரஞ்சித் முற்போக்கு சிந்தனை.

தன் படத்தில், தன் சிந்தனை மற்றும் கற்பனையில் கூட அனைவரையும் சமமாக பார்க்க முடியாத ரஞ்சித் தான் சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக குரல் கொடுக்கிறார் என்பது விந்தையிலும் விந்தை என அந்த அருவருக்க காட்சி என்று சொல்ல கூடிய தங்கலான் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குறிய காட்சியை பார்த்தவர்கள் தங்கள் கோபத்தை பகிர்ந்து வருகிறார்கள்.

அதாவது குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த பெண்கள் ஜாக்கெட் அணிவது தடை செய்யப்பட்டும் ஜாக்கெட் அணிந்தால் வரி கட்ட வேண்டும் என்ற நிலையும் ஒரு காலத்திலே இருந்தது, அந்த நிலை மாற்றம் அடையும்போது அதை அனைத்து பெண்களும் உடுத்தும் உரிமை வரும்போது பெண்கள் இடத்திலே இப்படிப்பட்ட மகிழ்ச்சி என்பது வருவது இயல்பானது, ஆனால் அப்படிப்பட்ட மகிழ்ச்சியை அவர்கள் ஆண்களின் மத்தியில் வெளிப்படுத்தி இருப்பார்களா என்பது தான் பா.ரஞ்சித்தை நோக்கி எழுப்பப்படும் கேள்வி.

அதாவது பெண்களுக்கு ஆடை சுதந்திரம் கிடைத்ததை காட்சியில் குறிப்பிடுவதாக இருந்தாலும் பல ஆயிரம் பேர் பார்க்க கூடிய திரைப்படத்தில் இக்காட்சியை வைக்கும் போது இன்னும் கூட கொஞ்சம் நாகரீகத்தோடு ரசிக்கும் படியாக ஆடை சுதந்திரம் பெற்றதை இலைமறைகாயாய் காட்டியிருக்கலாம் . உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் பெண்கள் மேலாடை இல்லாமல் இருந்த காலத்தில் கிடைத்த மேலாடை பெண்களுக்கு கூடுதல் பாதுகாப்பு மற்றும் கிடைத்த கூடுதல் ஆடை சுதந்திரம் என்பதை போல் காட்டி இருக்கலாம்.

அதாவது ஒரு பெண் தன் கணவனிடம் தனிமையில் சொல்வதற்கும் பல ஆண்கள் முன்னிலையில் சொல்வதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது .விடுதலை படத்தில் வரும் ஒரு பாடல் காட்சியில் காதலன் வாங்கி கொடுத்த வளையல்களை போட்டு கொண்டு அவன் காதலை ஏற்றுக் கொண்டதை கண் அசைவுகளிலேயே காட்டி விடுவாள் காதலி இதை விட காதலை வெளிப்படுத்த சிறந்த காட்சியமைப்பு இருக்காது அந்த வகையில் பா.ரஞ்சித்தின் படங்களில் இடம்பெறும் காட்சிகள் கண்ணிய குறைவாக உள்ளது என்கிற குற்றசாட்டு எழுத்துள்ளது குறிப்பிடதக்கது.