என் மேல இருக்கும் கோபம்… தங்கலான் தோல்வியை நினைத்து புலம்பும் பா.ரஞ்சித்…

0
Follow on Google News

இயக்குனர் பா. ரஞ்சித் மற்றும் நடிகர் விக்ரம் கூட்டணியில் உருவான திரைப்படம் தங்கலான். இந்தப் படம் 140 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம். இந்த படத்திற்கு, பட்ஜெட்டையும் தாண்டி பல கோடிகள் செலவழிந்துள்ளதாகவும், கிட்டத்தட்ட இந்த படத்திற்காக பா ரஞ்சித் 19 கோடிகள் எக்ஸ்ட்ரா செலவழித்துள்ளதாக கூறப்படுகிறது. இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் கடந்த 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.

மேலும் இப்படம் இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வருகிற 30-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய பா.ரஞ்சித், “தங்கலான் திரைப்படம் முக்கியமான விவாதத்தை தமிழ் சமூகத்தில் ஏற்படுத்தியிருப்பது சந்தோஷமாக இருக்கிறது. எனக்குள் இருப்பதை திரைக்கதையின் வாயிலாக மக்களிடன் நான் பேச நினைக்கும் வேட்கைதான் தங்கலான் படம்.

அதை சரியாக புரிந்துகொண்டு கொண்டாடுகிற எண்ணிக்கையில் அடங்காத நிறைய மக்கள், எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் இந்த படம் குறித்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதை பார்க்கும்போது நான் சரியான படத்தைத்தான் எடுத்துள்ளேன் என்று மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த படத்தில் வேலை செய்தவர்கள் கடுமையான உழைப்பை கொடுத்துள்ளனர்.

அது வெறும் காசுக்காக மட்டும் கிடையாது. என்னுடைய படைப்பின் மீதும், என் மீதும் தீராத காதல் உள்ளவர்கள் மட்டும்தான் எனக்காக இந்த அளவிற்கு வேலை செய்ய முடியும். இது எனக்கு தொடர்ந்து உழைக்க வேண்டும் என்ற பெரிய பொறுப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் தரும் அன்புதான் எனக்கு உந்துதலாக இருக்கிறது. சில நேரம் என் மீது வன்மம் வரத்தான் செய்யும். ஆனால் வன்மத்துக்கு பதில் சொல்லும் இடத்தில் நின்றுவிட்டால் காலியாகிவிடுவோம்.

வன்மத்தைவிட என் மீது அன்பு காட்ட நிறைய பேர் இருப்பது மிகவும் சந்தோஷம். என்று பேசி இருந்தார். இதனை ரசிகர்கள் பலரும் தங்கலான் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாததால் தான் ரஞ்சித் இப்படி மேடையில் புலம்பி தனக்கு தானே ஆறுதல் சொல்லுகிறார் என்று கருத்து கூறி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பும் பா. ரஞ்சித் மாரி செல்வராஜ் உடன் இணைந்து அளித்த பேட்டி ஒன்றில் பேப்பர் கப்பும் நவீன தீண்டாமை தான் என பேசியிருந்தார்.

டீ டம்ளரில் சாதிய பாகுபாடு இருப்பதை பரியேறும் பெருமாள் படத்தின் கிளைமேக்ஸில் காட்டி மாரி செல்வராஜ் வைத்து அந்த படத்தை கவனிக்க வைத்தார். இந்நிலையில், அதுதொடர்பாக பேசிய பா. ரஞ்சித் பேப்பர் கப்பும் தீண்டாமையின் வெளிப்பாடு தான் என பேசியிருந்தது கூட சர்ச்சையை கிளப்பியிருந்தது. இதனை ப்ளூ சட்டை மாறன் கலாய்க்கும் வகையில்,

நீங்கள் காபி/டீ சாப்பிடும் கடைகளில் உங்கள் விருப்பப்படி கண்ணாடி டம்ளர் அல்லது பேப்பர் கப்பில் தருகிறார்களா அல்லது ஜாதி பார்த்து தருகிறார்களா?” என்கிற கேள்வியை எழுப்பி ரஞ்சித்தின் பேச்சை கலாய்த்திருந்தார். மேலும், பா ரஞ்சித்-ன் கருத்துக்கு எதிராக ரசிகர்கள் பலரும், இங்கு யாரும் சாதி பார்த்து பேப்பர் கப் தரவில்லை என்றும் உங்களுக்கு எப்போதும் அதே நினைப்பு தான் என்று கமெண்ட்டுகளை குவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும், திரைவிமர்சகர்கள் பலரும் பா. ரஞ்சித்-ன் இந்த பேச்சு தான் தங்களான் படம் சரியாக ஓடாததற்கு காரணம் என கூறி இருந்தனர்.