பா.ரஞ்சித் ஆட்டத்ததை அடக்க ஒன்று சேரும் முக்கிய சினிமா பிரபலங்கள்… இனி எங்க ஆட்டம் தான் இங்க..

0
Follow on Google News

அட்டகத்தி, மெட்ராஸ் போன்ற படங்களின் மூலம் பிரபலமான இயக்குனர் பா.ரஞ்சித், ரஜினி நடிப்பில் வெளியான கபாலி படத்தின் மூலம் முன்னணி இயக்குனர் வரிசையில் இடம்பெற்றார். கபாலி படம் வரை அடக்கி வசித்து வந்த பா.ரஞ்சித், அதன் பின்பு பொது மேடைகளில் அவர் பேசிய பேச்சுக்கள் சர்ச்சையாக தொடர்ந்து வெடித்து வந்து கொண்டிருக்கிறது.

என்ன ஆண்ட பரம்பரை, நோண்ட பரம்பரை என பா.ரஞ்சித் மேடையில் பேசியது, ராஜராஜ சோழன் எங்கள் நிலத்தை பிதுக்கிவிட்டார் என்று தமிழ் மன்னரை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் தொடர்ந்து பா.ரஞ்சித் பேசி வந்தது, ஒரு குறிப்பிட்ட தரப்பினர் மத்தியில் ஆதரவு இருந்து வந்தாலும் மற்றொரு குறிப்பிட்ட தரப்பினர் மத்தியில் கடும் எதிர்ப்பும் கிளம்பி வந்தது, இதனை தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பா.ரஞ்சித் குரல் கொடுக்கிறார் என்று ஒரு தரப்பினர் தெரிவித்து வந்தாலும் கூட, குறிப்பிட்ட சில சமூகத்திற்கு எதிராக அவர்களை சீண்டுவது போன்று படத்தில் காட்சிகள் வைப்பது, மேடைகளில் பேசுவது என்கிற குற்றச்சாட்டும் பா.ரஞ்சித் மீது தொடர்ந்து இருந்து வருகிறது.

ஒரு கட்டத்தில் பா.ரஞ்சித் என்ன பேசினாலும், எந்த மாதிரி படம் எடுத்தாலும் சினிமா துறையினர் மத்தியில் எந்த ஒரு எதிர்ப்பும் இல்லாமல் இருந்து வந்த நிலையில், அதே சினிமா துறையில் இருந்து பல சர்ச்சைகளுக்கு மத்தியில் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான திரௌபதி படம் பா.ரஞ்சித் எதிர்ப்பாளர்களை கொண்டாட வைத்தது. திரௌபதியை தொடர்ந்து, ருத்ரதாண்டவம், பகாசூரன் என மோகன் ஜியின் அடுத்தடுத்து படம் அனைவரின் கவனத்தை ஈர்க்க, இப்படியும் படம் எடுத்தால் கூட மக்கள் வெற்றி அடைய செய்கிறார்களா என ஒட்டு மொத்த சினிமா துறையினரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

மேலும் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான திரௌபதி நாடக காதலை மையமாக வைத்தும், ருத்ரதாண்டவம் படம் PCR சட்டம் தவறாக பயன்படுத்தபடுவது பற்றியும், மேலும் அதில் இடம் பெரும் சில காட்சிகள் குறிப்பிட்ட ஒரு அரசியல் தலைவரை மறைமுகமாக தாக்குவது போன்று இருந்தது பெரும் சர்ச்சையாக வெடித்த போது, சினிமா துறையில் இருந்து பிரபல தயாரிப்பாளர் சௌத்ரி தேவர், திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற படங்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தது மட்டுமில்லாமல்.

பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் பார்க்க வேண்டிய படம் இது என பேசியவர், இது போன்ற படங்கள் தொடர்ந்து எடுக்கப்படும், பா,ரஞ்சித் போன்ற இயக்குனர்கள் சினிமா மூலம் தீமைகளை விதைத்து கொண்டிருக்கிறார், அவர்கள் திருந்த வேண்டும், இல்லை என்றால் திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்கள் தான் அவர்களுக்கு மருந்து என பேசி தொடர்ந்து மோகன் ஜி இயக்கும் படங்களுக்கு ஆதரவை தெரிவித்தார் சௌத்ரி தேவர்.

இந்நிலையில் நடிகர் ரஞ்சித் எழுதி இயக்கியுள்ள குழந்தை கவுண்டம்பாளையம் படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, அதில் நாமெல்லாம் மாட்டு கறி சாப்பிட உடம்பு டா, ஒரு தடவை ருசி பார்த்துவிட்டால், நம்ம காலடியிலே கிடப்பாளுக என இடம்பெற்றுள்ள வசனம், மாட்டு கறியை சமீபத்தில் ப்ரொமோட் பண்ணும் விதத்தில் பேசி வரும் சிலரை சீண்டுவது போன்றும், மேலும் நான் ஓ.சி.க மாவட்ட தலைவர் பேசுறேன் என ஒருவர் பேசுவது, மறைமுகமாக தமிழகத்தில் இருக்கும் ஒரு அரசியல் கட்சியை குறிப்பிடுவது போன்று அமைத்துள்ளது என மிக பெரிய சர்ச்சை வெடித்துள்ளது.

இந்நிலையில் குழந்தை கவுண்டம்பாளையம் படத்தின் டீசர் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் தயாரிப்பாளர் சௌத்ரி தேவர் இந்த படத்திற்கு ஆதரவாக இருப்போம் என நடிகர் ரஞ்சித்துக்கு உத்திரவாதம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறதும், மேலும் தமிழ் சினிமாவில் இயக்குனர் பா.ரஞ்சித் போன்றோர் ஆதிக்கம் அதிகம் இருந்து வந்த நிலையில், மோகன் ஜி திரௌபதி படத்தின் மூலம் தொடங்கி வைத்த ஆட்டம்,

தற்பொழுது நடிகர் ரஞ்சித்தின் குழந்தை கவுண்டம்பாளையம், அடுத்து விரைவில் வர இருக்கும் சௌத்ரி தேவரின் தேசிய தலைவர் படங்களால், தமிழ் சினிமாவின் ட்ரெண்டிங் மாற தொடங்கியது மட்டுமில்லாமல், தொடர்ந்து குறிப்பிட்ட ஒரு தரப்பினரை சீண்டும் வகையில் மேடைகளில் பேசுவது, படத்தில் காட்சிகளை அமைப்பதும் என இருந்த இயக்குனர் பா. ரஞ்சித் போன்ற இயக்குனருக்கு பதிலடி தரும் விதத்தில் சினிமா துறையை சேர்ந்த மோகன் ஜி, சௌத்ரி தேவர், நடிகர் ரஞ்சித் போன்றோர் கைகோர்த்துள்ளதாக கூறப்படுவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.