பெரும் சர்ச்சைகளுக்கும் எதிப்புகளுக்கும் மத்தியில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படம் வெளியாகியுள்ளது. இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் திரைப்படம் மிக பெரிய ஹிட் அடித்ததை தொடர்ந்து ரஜினிகாந்தை வைத்து அடுத்தடுத்து இரண்டு படங்கள் இயக்கும் வாய்ப்பை பெற்றார், ரஜினிகாந்தை வைத்து படம் இயக்கம் வரை அடக்கி வாசித்த பா.ரஞ்சித் அதன் பின்பு பொது மேடைகளில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி பல தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பை சம்பாரிக்க தொடங்கினார் பா.ரஞ்சித்.
ஒரு குறிப்பிட்ட தரப்பினரை சீண்டும் வகையில் பொது மேடைகளில் பா.ரஞ்சித் பேசி பொதுமக்கள் மத்தியில் மட்டும் எதிர்ப்பை சம்பாரித்தது மட்டுமின்றி சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அங்கே பிரச்சனை உருவாக்கும் வகையில் பேசி தேவையின்றி ஒற்றுமையாக இருக்கும் சினிமா துறையினர் மத்தியிலும் குழப்பத்தை உருவாக்கும் வகையில் பேசி, சினிமா துறையினர் மத்தியிலே கடும் எதிர்ப்புகளை சம்பாரித்து வைத்துள்ளார் பா.ரஞ்சித்.
இப்படி போகிற பக்கமெல்லாம் சர்ச்சை கூறிய வகையில் பேசி கடும் எதிர்ப்புகளை சம்பாரித்து வைத்துள்ள பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகும் படம் தரமான படைப்பாக இருந்தாலும் கூட, ரஞ்சித் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்கிற குரல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அவர் இயக்கும் படங்கள் எப்படி இருக்கும் என்பதை தாண்டி, பா.ரஞ்சித் போன்ற ஆட்களை வீழ்த்த வேண்டும் என்றால் அவருடைய படத்தை புறக்கணிப்பதே ஒரே தீர்வு என்கிற முடிவில் பலரும் ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகியுள்ள தங்கலான்படத்திற்கு எதிராக boycot தங்கலான் என்கிற பதாகைகளை ஏந்தி தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறார்கள்.
குறிப்பாக வட மாவட்டம், கொங்கு மண்டலம், தென் மாவட்டம் போன்ற பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட தரப்பினர் இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகியுள்ள தங்கலான் படத்தை புறக்கணிக்க வேண்டும் என அவர்களின் எதிர்ப்புக்களை பதிவு செய்து வரும் நிலையில் பிரபல சினிமா தயாரிப்பாளர் சௌத்ரி தேவர் தமிழ் சமூகங்களுக்கு இடையில் சாதி பிளவுகளை ஏற்படுத்தும் பா.ரஞ்சித் படங்களை புறக்கணிப்போம், BUYCOTT தங்கலான் என பாதகை ஏந்தி தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
இயக்குனர் பா.ரஞ்சித்தை தொடர்ந்து கடுமையாக எதிர்த்து வரக்கூடியவர் பிரபல தயாரிப்பாளர் சௌத்ரி தேவர். ஆனால் இது போன்று தமிழ் சினிமா துறையினர் மத்தியில் இருந்துள்ள மோதல் போக்கு தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமானது இல்லை , காரணம் சமீபத்தில் நடிகர் ரஞ்சித் இயக்கத்தில் கவுண்டம் பாளையம் படம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது, அதே போன்று இயக்குனர் மோகன் ஜி இதற்கு முன்பு நாடக காதலை மையப்படுத்தி எடுத்த திரௌபதி படம் மிக பெரிய சர்ச்சை ஏற்படுத்தி இருந்தது.
மேலும் தொடர்ந்து பிரபல தயாரிப்பாளர் சௌத்ரி தேவர் அவர் சார்ந்த சமூக மக்கள் மத்தியில் பா.ரஞ்சித் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்கிற பிரச்சாரத்தை தீவிரமாக செய்து வருகிறார். இப்படி தமிழ் சினிமாவில் சாதி சாயத்துடன் படங்கள் கடந்த காலங்களில் வெளியாகி இருந்தாலும் அது ஆரோக்கியமான சினிமாவாக இருந்தது, ஆனால் தற்பொழுது நீ உன் படத்தில் என் சாதியை சீண்டி எடுக்கிறியா, இரு நான் உனக்கு போட்டியாக படம் எடுக்கிறேன் என்கிற நிலையில் தமிழ் சினிமா சென்று கொண்டிருப்பது ஆரோக்கியமான ஒரு விஷயம் இல்லை.
அந்த வகையில் பா.ரஞ்சித் போன்ற இயக்குனர்கள் இனி வரும் காலங்களில், பொது மேடைகளில் பேசும் போதும் கவனமாகவும் , தங்கள் சினிமா காட்சிகளிலும் குறியீடு என்கிற பெயரில் சர்ச்சை கூறிய காட்சிகளை தவிர்த்து வந்தால் சினிமாவுக்கு ஆரோக்கியம், இல்லை என்றால் பா.ரஞ்சித் இயக்கும் படம் சிறப்பாக இருந்தாலும் ரஞ்சித் மீது உள்ள வெறுப்பை அவருக்கு எதிராக பெருகி வரும் எதிர்ப்பாளர்களால் பா.ரஞ்சித் படத்தை புறக்கணிக்க முடிவு செய்வது பா.ரஞ்சித் சினிமா கேரியருக்கு ஆப்பு வைப்பது போன்று அமைந்துவிடும் என பலரும் அட்வைஸ் செய்து வருவது குறிப்பிடதக்கது.