நடிகர் விஜய் நடிப்பில் தற்பொழுது திரையரங்கில் வெளியாகி ஒடி கொண்டிருக்கும் படம் பீஸ்ட். இந்த படம் மிக பெரிய தோல்வியை சந்தித்து. படமா இது என விஜய் ரசிகர்களே வேதனைப்படும் அளவுக்கு அமைத்துள்ளது. விஜய் ரசிகர்களின் மொத்த கோபமும் இயக்குனர் நெல்சன் மீது திரும்பியுள்ளது. இதற்கு முன்பு வெளியான விஜய் படம் மொக்கையாக இருந்தாலும். விஜய் ரசிகர்கள் அந்த படத்தில் உள்ள சில நல்ல காட்சிகளை குறிப்பிட்டு முட்டு கொடுத்தார்கள்.
ஆனால் பீஸ்ட் படத்தில் அது போன்று ஏதும் விஜய் ரசிகர்கள் செய்யாமல், நெல்சன் மட்டும் கையில் கிடைத்தால் என கோபத்தை நெல்சன் பக்கம் திருப்பிவிட்டு. பீஸ்ட் படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். மேலும் தமிழில் வேறு எந்த படமும் வெளியாகவில்லை பீஸ்ட் மட்டும் தனியாக களம் இறங்குவதால் வசூலை அள்ளி குவித்து விடலாம் என அதிக திரையரங்குகளை ஆக்கிரமித்து கொண்டது பீஸ்ட்.
ஆனால் மலையாள நடிகர் நடிப்பில் வெளியான KGF 2 படம் பீஸ்ட் வெளியான அடுத்த நாள் மிக குறைந்த திரையரங்கில் வெளியாகி, மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று. டிக்கெட் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுவதை பார்த்த திரையரங்கு உரிமையாளர்கள் பல திரையரங்குகளில் பீஸ்ட்டை தூக்கிட்டு KGF 2 படத்தை திரையிட்டனர். ஆக மொத்தத்தில் பீஸ்ட் படம் தயாரிப்பாளர்க்கு எதிர்ப்பார்த்து வசூலை பெற்று தரவில்லை என்பதால் கடும் அப்செட்டில் இருக்கிறது தயாரிப்பு நிறுவனம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் பீஸ்ட் படத்தை தயாரித்த சன் பிக்சர் தான் ரஜினிகாந்த் புதிய படத்தையும் நெல்சன் இயக்கத்தில் தயாரிக்கிறது. நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படத்தை பார்த்த ரஜினி கடும் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தனை தொடர்ந்து சன் பிக்சர் தரப்பில் இருந்து ரஜினியை தொடர்பு கொண்டு புதிய படத்தில் நெல்சனை தொடர வைக்கலாமா, அல்லது அவரை தூக்கி விடலாமா என பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
அப்போது தயாரிப்பு நிறுவனம் தரப்பில், சார் உங்க விருப்பம் தான் நெல்சன் உங்களுக்கு ஓகே என்றால் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. அப்படி வேண்டாம் என்றால் அவருக்கு பதில் தேசிங்கு பெரியசாமி அல்லது அட்லீ இவர்களில் யாராவது ஒருவரை முடிவு செய்யுங்கள் என ரஜினி விருப்பத்திற்கே தயாரிப்பு நிறுவனம் விட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதில் என்ன செய்வது என மிக பெரிய குழப்பத்தில் இருந்து வருகிறார் ரஜினிகாந்த் என்றும்.
ஆனால் ரஜினிகாந்த் படத்தை அட்லீ இயக்குவதற்கு வாய்ப்புங்கள் மிக குறைவு தான் என கூறப்படுகிறது. மேலும் நெல்சனை தனது புதிய படத்தில் இயக்குனராக முடிவு செய்வதர்க்கு முன்பு நெல்சன் மற்றும் தேசிங் பெரியசாமி இருவரும் ரஜினியின் விருப்பமாக இருந்துள்ளது. இதில் நெல்சன் இயக்கத்தில் கடைசியாக வெளியான டாக்டர் படம் மிக பெரிய வெற்றியை பெற்று இருந்ததால் நெல்சனை ஓகே செய்தார் ரஜினி, இந்நிலையில் தற்பொழுது தேசிங் பெரியசாமி தான் ரஜினியின் சாய்ஸாக இருக்க முடியும் என சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.