பல திறமை வாய்ந்த இயக்குனர்கள் நடிகராக அவதாரம் எடுப்பது தமிழ் சினிமாவில் புதிதல்ல, அந்த வகையில் இயக்குனர் சுந்தர் சி பல இயக்குனராக பல ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும், நடிகராக அவதாரம் எடுத்து நடிப்புத் துறையிலையும் ஜொலித்தவர் சுந்தர் சி. அதே போன்று அந்த வரிசையில் இயக்குனர் அமீர் இயக்குனராக ஜொலித்ததை விட அவர் நடிப்பில் வெளியான வடசென்னை படத்தின் பின்பு நடிகராக அவருக்கு கிடைத்த அங்கீகாரம் அதிகம்.
அதேபோன்று இன்றைய காலகட்டத்தில் இருக்கும் நடிகர்கள் பல நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்கள், இதில் இயக்குனர் ராம் ஹீரோவாகவே ஒரு படத்தில் நடித்தார், ருத்ர தாண்டவம் படத்தின் மூலம் வில்லனாக தனக்கண் முத்திரை பதித்த இயக்குனர் கௌதம் வாசுதேவன் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அதேபோன்று தற்பொழுது விஜய் நடிக்கும் லீ படத்தில் வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடித்து வருகிறார்.
தற்பொழுது பல இயக்குனர்கள் வில்லன் கதாபாத்திரத்தையே விரும்பி நடித்து வருகிறார்கள், இதற்கு காரணம் ஹீரோவாக அறிமுகமாகும் இயக்குனர்கள் சில காலங்களிலேயே காணாமல் போகிறார்கள், ஆனால் வில்லனாக தங்கள் முத்திரையை பறிக்கும் இயக்குனர்கள் நீண்ட நாட்கள் தமிழ் சினிமாவில் இடம் பிடித்து விடுகிறார்கள்.
அந்த வகையில் தற்பொழுது நடிகர் மிஸ்கினுக்கு வில்லன் கதாபாத்திரத்துக்கான வாய்ப்புகள் குவிந்து வருவதாக கூறப்படுகிறது, இந்நிலையில் தற்பொழுது விஜய் நடிக்கும் லீ படத்தில் ஒரு நாள் சம்பளம் 10 லட்சம் ரூபாய் மிஷ்கின் வாங்கி வருவதாகவும், அடுத்த படத்தில் தன்னுடைய சம்பளத்தை மேலும் உயர்த்துவார் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இருந்தும் மிஸ்கின் சம்பளத்தை உயர்த்தினாலும் கூட அவரை தங்கள் படத்தில் புக் செய்வதற்கு பல தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் தயாராக இருக்கிறார்கள்.