இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் மாமன்னன், இந்த படத்திற்கு ஒரு பக்கம் ஆதரவு, மறுபக்கம் எதிர்ப்பு என கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது, மாமன்னன் படத்திற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தது, மாமன்னன் ஆடியோ வெளியிட்டு விழாவில் மாரிசெல்வராஜ் தேவர் மகன் குறித்து பேசிய சர்ச்சை பேச்சு தான்.
மாரிசெல்வராஜ் தேவர் மகன் குறித்து பேசி பேச்சுக்கான விவாதம் இன்றளவும் தொடர்ந்து கொன்டே இருக்கிறது, இயக்குனர் பேரரசு, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசுகையில், ஜாதி படம் வேண்டாம் என்று சொல்லவில்லை, ஆனால் ஜாதி பற்றுக்கும், ஜாதி வெறிக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும். ஜாதி பற்று என்பது ஒரு இயக்குனர் , ஒரு சாதி சார்ந்த நல்ல விஷயங்களை திரைப்படங்களில் பதிவு செய்வது சாதி பற்று.
ஆனால் மற்றொரு ஜாதியை வெறுப்பது போன்று, மற்ற சாதியை இழிவாக பேசுவது போன்று படம் எடுப்பது தான் ஜாதி வெறி என்று சொல்லப்படும். தன்னுடைய ஜாதியை நீ என்ன வேண்டுமானாலும் உயர்த்திக் கொள், ஆனால் மற்றொரு ஜாதியை நீ அசிங்கப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் அது தான் ஜாதி வெறி. ஆகையால் ஜாதி பற்று இருக்கலாம், ஆனால் ஜாதி வெறி இருக்கக் கூடாது.
மேலும் தேவர் மகன் படத்தில் வரும் வடிவேலுவின் இசக்கி கதாபாத்திரம் தான் மாமன்னன் என்று சொல்வது படத்தை ஓட வைப்பதற்கான விளம்பரம் என்றும், மாமன்னன் படத்தில் வடிவேலுவை போட்டு விட்டார்கள், ஒரு பொய்யான தகவலை உருவாக்கி மக்களை தியேட்டருக்கு கொண்டுவதற்கான வேலைதான் தேவர் மகன் படத்தில் வரும் இசக்கி தான் மாமன்னன் என்று சொல்வது.
எதற்காக பொய் சொல்ல வேண்டும், தேவர் மகன் படத்தில் இசக்கி ஒரு தேவர் சமூகத்தை சார்ந்தவர் என பல காட்சிகள் தேவர் மகன் படத்தில் வெளிப்படுத்துகிறது. அப்படியானால் இசக்கி தான் மாமன்னன் என்று சொன்னால் மாமன்னன் படத்தில் வரும் வடிவேலு தேவர் சமூகமா.? என கேள்வி எழுப்பிய பேரரசு.
மேலும் தேவர் மகன் படம் மிகப் பெரிய வலியை ஏற்படுத்தியது என மாறி செல்வராஜ் பேசியது குறித்து விளக்கம் அளித்த இயக்குனர் பேரரசு, நீங்கள் தேவர் சமூகத்தை ஒரு வெறுப்புடன் பார்த்ததால் தான் தேவர்மகன் தலைப்பே உங்களுக்கு வெறுப்பாக தெரிகிறது, இவர்கள் ஒன்றும் புதிதாக செய்யவில்லை, இதற்கு முன்பு வந்த பல படங்கள் ஆதிக்க சாதியினரை வில்லனாக வெறுப்பாக காண்பித்த பல படங்கள் நான் எடுத்துக்காட்டாக சொல்லலாம்.
ஆனால் இவர்கள் புதிதாக பிரச்சனையை கிளப்புகிறார்கள், இயக்குனர் பாலாஜி சக்தி இயக்கிய காதல் திரைப்படத்தில் பரத் வேற ஒரு ஜாதி, அவர் காதலிக்கு அந்த பெண் வேற ஒரு ஜாதியாக இருக்கும், இறுதியில் அந்த காதலனை அந்தப் பெண்ணின் சமூகத்தினர் ஆணவக் கொலை செய்வது போன்ற காட்சிகளை படமாக்கி இருப்பார் பாலாஜி சக்திவேல், அப்போது அவரை ஏன் யாரும் பாராட்டவில்லை .
காதல் படத்தை அனைத்து சாதியினரும் பார்த்தார்கள், அதனால் தான் ஹிட்டானது. ஏன் அந்த படத்திற்கு எந்த ஒரு ஜாதி பிரச்சனை வரவில்லை . ஒருவன் தன் ஜாதி அடையாளப்படுத்திக் கொண்டு செய்கின்ற செயல் அனைத்துமே தவறு, இயக்குனர் ஒரு பிரச்சனைக்கு தீர்வு வேண்டும் என நல்ல எண்ணத்துடன் ஒரு படத்தை எடுக்கும்போது எந்த ஒரு பிரச்சனையும் வராது, இந்த சமுதாயத்தில் ஏதாவது பிரச்சனை வரவேண்டும் என்று படத்தை எடுத்தால் நிச்சயம் பிரச்சனை வரும் என பேரரசு தெரிவித்துள்ளார்.