மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் மாமன்னன் திரைப்படம் வழக்கம்போல், எந்த ஒரு சர்ச்சையும் இல்லாமல் ரிலீஸ் ஆகி இருந்தால்,இதற்கு முன்பு மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள், கர்ணன் படங்கள் போன்று அணைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்து, மாரிசெல்வராஜ் சொல்ல வந்த கருத்து அணைத்து தரப்பு மக்களிடமும் சென்றடைந்திருக்கும்.
ஆனால் மாமன்னன் திரைப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்ட கமல்ஹாசனை நேரில் வைத்து கொண்டு தேவர் மகன் படம் குறித்து சர்ச்சை கூறிய வகையில் மாரிசெல்வராஜ் பேசியது இன்று மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மத்தியில் இருந்து மாரி செல்வராஜ்ன் மாமன்னன் படத்திற்கான எதிர்ப்பாக மாரி வருகிறது.
ஒரு படைப்பாளி தன்னுடைய கருத்தை சினிமா மூலம் சொல்லப்படும் போது, அந்த அனைத்து தரப்பினர் மத்தியிலும் சென்றடைந்தால் மட்டுமே அந்த படைப்புக்கு முழுமையான வெற்றி பெற்றதாக அமையும். அந்த வகையில் இதற்கு முன்பு மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்கள் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்ததால் அந்த இரண்டு படங்களும் வெற்றியைப் பெற்றது .
இந்த நிலையில் ஒருவர் சாதிய பிரச்சனை கையில் எடுக்கும் போது மிக கவனமாக கையாள வேண்டும், அப்படி கையாள்வதில் கோட்டை விட்டு விட்டார் மாரிசெல்வராஜ் என்பது போன்று அமைந்து விட்டது சமீபத்தில் கமல்ஹாசன் முன்னிலையில் தேவர் மகன் குறித்து மாரிசெல்வராஜ் பேசிய சர்ச்சை பேச்சு. சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு, அந்த காலகட்டத்திற்கு ஏற்ப எடுக்கப்பட்ட படம் தேவர்மகன்.
அப்படி ஒரு படத்தை தோண்டி துருவி எடுத்து மாரிசெல்வராஜ் பேசியது, அவர் இயக்கத்தில் வெளியாக இருக்கும் மாமன்னன் படத்திற்கு எதிராக திரும்பியுள்ளது. ஒரு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா என்பது அந்தப் படத்திற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சி. அந்த வகையில் ஒரு இயக்குனர் என்பவர் தன்னை நம்பி பணம் போட்டு படம் எடுத்த தயாரிப்பாளரை மனதில் வைத்து மிக கவனமாக பேசி அணைத்து தரப்பினரிடம் அந்த படத்தை கொண்டு சேர்க்க முயற்சிக்க வேண்டும்.
ஆனால், தற்பொழுது மாரிசெல்வராஜ் பேசிய பேச்சு, அவரை நம்பி பெரும் தொகை முதலீடு செய்த தயாரிப்பாளருக்கு இழப்பை ஏற்படுத்தும் வகையில் அமைத்துள்ளது என்கிற விமர்சனம் எழுந்துள்ளது. ஒரு இயக்குனருக்கு அவருடைய கருத்துக்களை சொல்வதற்கான கருத்து சுதந்திரம் நிச்சயம் உண்டு. அதே தன்னை நம்பி முதலீடு செய்த தயாரிப்பாளரை மனதில் வைத்து அந்த படத்தின் இயக்குனருக்கு மிகப்பெரிய பொறுப்பும் கடமையும் உண்டு என்பதை உணர வேண்டும்.
தேவர் மகன் திரைப்படம் எங்கள் சமூகத்திற்கான படம் என, தென் மாவட்டத்தில் பெரும்பான்மையாக இருக்க கூடிய ஒரு சமூகம் கொண்டாடி வரும் சூழலில், தேவர் மகன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி, குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் மத்தியில் இருந்து மாமன்னன் படத்திற்கு எழுந்துள்ள எதிர்ப்பை, எப்படி சரி செய்ய போகிறார்கள் என்கிற குழப்பம் நீடித்து வருகிறது.
இது போன்ற சர்ச்சைக்குரிய வகையில் பேசி சம்பந்த பட்ட தயாரிப்பாளர்களை சங்கடத்தில் ஆழ்த்தும் மாரிசெல்வராஜ் போன்ற இயக்குனர்களை நம்பி துணித்து பெரும் முதலீடு செய்து படம் எடுக்க இனி எந்த தயாரிப்பார்கள் வருவார்கள்.? என்கிற கேள்வி சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளது.