இதுக்கு தான் இந்த பில்டப்பா… இயக்குனர் மாரி செல்வராஜின் வாழை எப்படி இருக்கு… இதோ சுட சுட விமர்சனம்…

0
Follow on Google News

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வாழை திரைப்படத்தின் கதை, அந்தப் படத்தின் தலைப்பிலே அமைந்துள்ளது. ஒரு வாழை தோட்டத்தை மையமாக வைத்தே இந்த படம் உருவாகியுள்ளது. திருநெல்வேலியில் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள ஒரு தரப்பினர் வாழ்வாதாரமாக அந்த வாழைத் தோட்டத்தில் வேலை செய்கிறார்கள்.

பெரியவர்கள் மட்டுமல்ல பள்ளியில் படிக்கும் சிறுவர்களும் சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் அந்த வாழைத் தோட்டத்தில் வேலை செய்கிறார்கள். ஒரு வாழைத்தாருக்கு ஒரு ரூபாய் என்கின்ற விதத்தில் கூலி கொடுக்கப்படுகிறது. முழுக்க முழுக்க அந்த மக்களுக்கு அந்த வாழைத் தோட்டம் தான் வாழ்வாதாரமே. அந்த வாழை தோட்டத்தில் அந்த மக்கள் படும் கஷ்டத்தை படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார் மாரிசெல்வராஜ்.

சிறுவர்களாக இரண்டு சிறுவர்கள் படத்தில் உள்ளார்கள். அதில் ஒருவர் ரஜினி ரசிகர் மற்றொருவர் கமல் ரசிகர் என 90 காலகட்டத்தில் நடக்கும் கதை ஆக நகர்கிறது. ரஜினி கமல் ரசிகர்கள் இருவரும் சினிமா சார்ந்து ரஜினி பற்றியும் கமல் பற்றியும் பேசுகிறார்கள். கழுத்தில் ரஜினி ரசிகர் ரஜினி டாலர் அணிவது கமல் ரசிகர் கமல் டாலரை அணிந்து கொள்வது. மேலும் பள்ளியில் ரஜினி பற்றிய பேச்சு,

இப்படி 90 காலகட்டத்தில் சிறுவர்களின் கதையை கொண்டு செல்லும் மாரி செல்வராஜ். இதில் அந்த பகுதியில் கமல் படம் ரிலீஸ் ஆகாது, ரஜினி படம் தான் ரிலீஸ் ஆகும் என்பது போன்ற காட்சிகள் மூலம், இந்த படத்தில் ரஜினிகாந்தை மிகப் பெரிய அளவில் மாரி செல்வராஜ் தூக்கிப்பிடிப்பதின் நோக்கம் அடுத்து ரஜினியை வைத்து ஒரு படம் இயக்க ரஜினிகாந்த் எப்படியாவது வாய்ப்பு கொடுத்து விட மாட்டாரா.?

என்கின்ற ஒரு நோக்கத்திற்காக இந்த படத்தில் ரஜினியை மிகப்பெரிய அளவில் தூக்கிப் பிடிக்கிறார் அதற்கான உள்நோக்கமாகவும் கூட இருக்கலாம் என்கின்றது படம் பார்ப்பவர்கள் மத்தியில். சேரு சகதிக்குள் அந்த சிறுவர்கள் வாழையை ஏற்று இறக்கும் காட்சிகள் இப்படி முதல் பாதி கலகலவென்று சென்று கொண்டிருக்கின்றது. இரண்டாம் பாதியில் மாரி செல்வராஜ் இந்த படத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதில் சில தடுமாற்றங்களை சந்திப்பது காட்சிகள் மூலம் வெளிப்படுகிறது.

படத்தின் நாயகன் கலையரசன் வாழை தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு ஒரு தாருக்கு ஒரு ரூபாய் என ககூலியை இரண்டு ரூபாயாக விலை ஏற்ற வேண்டும் என்று போராடுகிறார், ஆனால் முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையில் இருக்கும் புரோக்கர் இதை முதலாளி கவனத்திற்கு எடுத்துச் செல்லாமல் 1.50 ரூபாய் தருகிறேன் என்று பேரம் பேசுகிறார்.ஒரு கட்டத்தில் தொழிலாளிகள் போராட்டத்தை கையில் எடுத்து இரண்டு ரூபாய் கூலி உயர்வை பெறுகிறார்கள்.

அதாவது இந்த படத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் சென்று பார்த்தால் நிச்சயம் ஏமாற்றம்தான் கிடைக்கும். 90 காலகட்டத்தில் நடக்கும் இந்த கதையில் வாழைத்தார் அறுப்பது, வாழையை வண்டியில் ஏற்றுவது, மாடு அடுத்த இடத்தில் மேய்வது இப்படி ஏற்கனவே பல சினிமாக்களில் பார்த்த காட்சியை திரும்பத் திரும்ப வருவதால் படத்தில் சில தோய்வு ஆங்காங்கே ஏற்படுகிறது.குறிப்பாக குழந்தை தொழிலாளர்கள் பற்றி இன்னும் அழுத்தமாக மாறி செல்வராஜ் சொல்லி இருக்க வேண்டும்.

அதை இந்த படத்தில் தவறவிட்டார் என்று சொல்லலாம் மேலும் பொதுவாகவே மாரிசெல்வராஜ் இயக்கும் படம் சாதி சார்ந்த படமாக இருக்கும் என்கின்ற ஒரு கருத்து நிலவி வரும் நிலையில் இந்த படத்தில் சாதியைப் பேசாமல் கம்யூனிசம் பேசி உள்ளார் மாரிசெல்வராஜ். அந்த வகையில் வாழை பழுத்ததா பழுக்கவில்லையா என்பதை நீங்கள் படம் பார்த்திருப்பீர்கள் என்றால் உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.