இயக்குனர் மாரிசெல்வராஜ் செல்வராஜ் மாமன்னன் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் குறித்து தேவர் மகன் படம் குறித்து சர்ச்சை கூறிய வகையில் பேசிய பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது, இந்நிலையில் தேவர் மகன் படத்தினால் தனக்கு மிக பெரிய வலி ஏற்பட்டது எனா பேசிய மாரிசெல்வராஜ், அந்த தேவர் மகன் படத்தின் இசக்கி கதாபாத்திரம் தான் மாமன்னன் என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில், சில இயக்குனர்கள் அவர்கள் சார்ந்த சமுதாயம் பட்ட வலி மற்றும் அவர்கள் பட்ட வலி என அவர்கள் ஒரு பாதையில் படம் எடுத்துக்கொண்டு செல்கிறார்கள், அது அவர்களுடைய விருப்பம்,, ஆனால் அவர்கள் உடைய வழியை சொல்ல வேண்டும், ஆனால் அடுத்தவர்களுக்கு வலிக்கின்ற மாதிரி சொல்ல கூடாது.
இவர்கள் சொல்ல வரும் கருத்துக்களால், மற்றொரு சமுதாயம் இதனால் பாதிக்கப்பட்ட கூடாது, மேலும் நம் பழசையே பேசிக்கொண்டு, நாம் கஷ்டப்பட்டோம், கஷ்டப்பட்டோம் என்று பேசிக் கொண்டிருந்தால், கஷ்டப்பட்டோம் உண்மைதான், சாதிய பிரச்சனைகளை பல சமுதாயங்கள் எதிர்கொண்டார்கள். ஆனால் தற்பொழுது 75 ஆண்டு சுதந்திர இந்தியாவில் 75 சதவீதம் மக்கள் முன்னேறி விட்டார்கள்.
இதற்கு முன்பு இருந்த தமிழக முதல்வர்கள் காமராஜர் தொடங்கி ஜெயலலிதா காலம் வரை பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஏகப்பட்ட சலுகைகளை கொடுத்து அவர்களை உயர்த்தி விட்டார்கள். பல உயர் ஜாதியினர் இன்று அவர்களுக்கு கீழ் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அதனால் பழைய கதையை பேசிக்கொண்டு இருக்கக் கூடாது.
ஆனால் இன்னும் ஒரு 25 முதல் 30 சதவீத மக்கள் பின்தங்கியே அடிமையாக இருக்கிறார்கள் என்பது உண்மைதான், ஆனால் அவர்களும் மேலே எழ வேண்டும், மத்திய அரசும், மாநில அரசும் பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் மிகவும் பிற்படுத்த மக்கள், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அதிகமான சலுகைகளை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள், படிப்பதற்கு அவர்களுக்கு பணமே வேண்டாம், நீங்கள் முயற்சி எடுத்து படித்தால் போதும். இதை அந்த சமுதாயத்தினர் அவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.