கோலிவுட்டில் தோல்வியே சந்திக்காத இயக்குனர்களின் பட்டியலில் லேட்டஸ்டாக இணைந்திருப்பவர் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் வெளிவந்த பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய மூன்று படங்களும் தொடர்ச்சியாக ஹிட் அடித்த நிலையில், அவரின் நான்காவது படமான வாழை கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.
தன் வாழ்வில் நடந்த சோகமான தருணங்களையும், மகிழ்ச்சியான தருணங்களையும் சேர்த்து, காண்போரை கண்கலங்க வைக்கும் விதமாக ஒரு அருமையான படைப்பாக இப்படத்தை எடுத்திருந்தார். இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வசூலை வாரிக்குவித்திருந்தது. ஆனால் இவர் இதற்கு முன்பு பெரிய பெரிய நடிகர்கள், பெரிய பட்ஜெட் போட்டு எடுத்திருந்த படங்கள் மூலமாக எல்லாம் இவருக்கு கிடைக்காத பெயரும் புகழும், இப்படத்தில் கிடைத்தற்கான காரணம் என்ன, மேலும் இந்த ஒரே ஒரு படத்தால் மாரி செல்வராஜ் கோடீஸ்வரராக மாறியது எப்படி என பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளது.
வாழை திரைப்படம் வெறும் 6 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் தான். ஆனால் இப்படம் தற்போது பல கோடி ரூபாய் வசூல் மழைகளை பொழிந்து வருகிறது. ஏனெனில் இப்படம் முதல் நாளில், 1.15 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. அதன்பிறகு இப்படத்திற்கு கிடைத்த பாசிட்டிவான விமர்சனங்களை பார்த்து இரண்டாம் நாள் வசூல் டபுள் மடங்காக உயர்ந்தது. அப்போது 2.50 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது.
அடுத்தது மூன்றாவது நாளாக 2.75 கோடி ரூபாய் என முதல் மூன்று நாளிலேயே படத்திற்கு போட்ட பட்ஜெட்டை தாண்டி இப்படம் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில்தான் தற்போது படம் வெளியாகி ஐந்து நாட்களையே கடந்த நிலையில், இப்படம் 15 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது. மேலும் மிகக் குறைந்த பட்ஜெட்டில் இந்த வருடம் வெளியான படங்களில் அதிக வசூல் படைத்த படமாக வாழை திரைப்படம் தான் சாதித்துக் காட்டி இருக்கிறது.
இந்நிலையில் தான் தற்போது வாழைப்படம் மூலம், மாரி செல்வராஜ் மிகப்பெரிய கோடீஸ்வரர் ஆகியிருக்கிறார். அதாவது வாழை திரைப்படம் முதலில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திற்காக தயாரிக்கப்பட்டது. இப்படத்தை நேரடியாக ஓடிடி-யில் ரிலீஸ் செய்யும் நோக்கில் தான் இப்படமும் எடுக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் தியேட்டர் ரிலீஸ்க்கு மாற்றப்பட்டது. இருப்பினும் முதலிலேயே ஹாட்ஸ்டார் நிறுவனம் மாறி செல்வராஜுக்கு 16 கோடி ரூபாய் படத்தின் பட்ஜெட்டுக்காக வழங்கி இருக்கிறது.
ஆனால் 6 கோடியிலேயே மாறி இப்படத்தின் தயாரிப்பை முடித்து விட்டார். இதனால் மீதியுள்ள ரூபாய் 10 கோடியும் மாரி செல்வராஜ்க்கு சொந்தம் ஆகிவிட்டது. அதோடு இப்படம் ரெட் ஜெயன்ட் தலையிட்டால் தியேட்டர் ரிலீஸ்க்கு வந்தது. இந்நிலையில் தியேட்டர் ரிலீஸ் மூலம் கிடைக்கும் பங்கு ,மற்றும் பிற மொழிகளில் வெளியிட்டால் கிடைக்கும் உரிமை, அந்த ரைட்ஸ், இந்த ரைட்ஸ் என பலவற்றிலிருந்து மாரி செல்வராஜுக்கு மேலும் ஒரு பத்து கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது.
அதோடு இப்படத்தை தயாரித்ததே மாரியின் மனைவி என்பதால் அவருக்கும் இதிலிருந்து ஒரு பங்கு சென்று இருக்கிறது. இந்நிலையில் தான் தற்போது, ஒரே ஒரு படத்தால் மாரி செல்வராஜின் வாழ்க்கையே தலைகீழாக மாறி, 20 கோடிக்கும் மேல் லாபம் ஈட்டி, இன்று கோடீஸ்வரராக மாறிஇருக்கிறார். இதனால் மாரி செல்வராஜை தமிழ்த் திரைத்துறையே மாற்றி மாற்றி பாராட்டி வருகிறது. பெரிய பெரிய இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், நடிகர்கள் என பலரும் வாழை படத்தை பாராட்டி வருவதும் கவனிக்கத்தக்கது.