தமிழ் சினிமாவில் 80,90களில் கொடி கட்டி பறந்தவர் இயக்குனர் மணிரத்தினம். இவருடைய இயக்கத்தில் அப்போது வெளியான அனைத்து படங்களுமே மிகப்பெரிய ஹிட் அடித்தது. தமிழ் சினிமாவில் இருக்கும் பெரும்பாலான நடிகர்கள் மணிரத்தினம் இயக்கத்தில் ஒரு படமாவது நடித்து விட வேண்டும் என்கின்ற ஏக்கம் இருக்கும். அந்த வகையில் மணிரத்தினம் படத்தில் நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கதைக்கும் திரைக்கதைக்கும் கவனம் செலுத்தக் கூடியவர் மணிரத்தினம்.
அவர் இயக்கத்தில் சமீப காலமாக வெளியான படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து சினிமாவில் அட்ரஸ் இல்லாமல் இருந்தார் மணிரத்தினம். இதனால் மணிரத்தினத்தின் காலம் முடிந்து விட்டது என்று சினிமா ரசிகர்கள் ஒரு முடிவுக்கு வந்த பின்பு பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் மிகப் பெரிய ஹிட் கொடுத்து தன்னுடைய இருப்பிடத்தை மீண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளார் மணிரத்தினம்.
இந்த நிலையில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக மீண்டும் சினிமாவில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள போராடி வந்த மணிரத்தினத்திற்கு பொன்னியின் செல்வன் கை கொடுத்தது. இதனை தொடர்ந்து பொன்னியின் செல்வன் பாகம் 2 தமிழ் புத்தாண்டுக்கு வர இருக்கிறது. அதேபோன்று அடுத்து கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட இருக்கிறது.
தற்பொழுது மணிரத்தினம் பிஸியாக இருந்து வருகிறார். கொடைக்கானலில் அவருக்கு சொந்தமாக கெஸ்ட் ஹவுஸ் உள்ளது. அடிக்கடி அந்த கெஸ்ட் ஹவுஸிற்கு செல்லும் மணிரத்தினம் சினிமா தொடர்பாக ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளை அங்கே தனியாக அமர்ந்து செய்வது வழக்கம். அந்த வகையில் தற்பொழுது கொடைக்கானலில் தன்னுடைய கெஸ்ட் ஹவுஸில் இருக்கும் மணிரத்தினம் ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் ஈடுபட்டு கொண்டுள்ளார்.
அவருடைய கெஸ்ட் ஹவுஸ்க்கு அருகில் இயக்குனர் சாந்தகுமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்று படப்பிடிப்பு இரவு நேரங்களில் நடைபெற்று வந்துள்ளது. படத்தின் இயக்குனர் மற்றும் அங்கு பணியாற்றுகின்றவர்கள் யாருக்கும் படப்பிடிப்பு நடக்கும் இடம் அருகில் மணிரத்தினத்தின் கெஸ்ட் ஹவுஸ் உள்ளது. அங்கே மணிரத்தினம் தங்கி இருக்கிறார் என்கின்ற எந்த ஒரு தகவலும் அவர்களுக்கு தெரியாது.
இந்த நிலையில் படப்பிடிப்பு அடுத்தடுத்த காட்சிகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், படத்தின் லொகேஷன் மாற்றத்திற்காக லைட்டிங்கை வெவ்வேறு திசையில் மாற்றி காட்சிகள் எடுக்கப்பட்டு வந்துள்ளது. அப்போது லைட்டை திருப்பும் பொழுது அந்த லைட்டின் ஒளி மணிரத்தினத்தின் கெஸ்ட் ஹவுஸ் உள்ளே சென்றுள்ளது. இதனால் டென்ஷனான மணிரத்தினம் உடனடியாக போலீஸ் கம்ப்ளைன்ட் செய்ததாக கூறப்படுகிறது.
தனைத் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வந்த போலீசார் உடனே படப்பிடிப்பை நிறுத்தி இடத்தை காலி செய்ய சொல்லி வலியுறுத்தியுள்ளார்கள். அதன் பின்பு பட குழுவினர்கள் அந்த இடத்தை காலி செய்து வேறு ஒரு இடத்திற்கு சென்றுள்ளார்கள். இந்நிலையில் ஒரு இயக்குனரான மணிரத்தினம் சக இயக்குனரின் கஷ்டங்களை புரிந்து கொள்ளாமல் இவ்வாறு மனிதாபிமானம் இல்லாமல் இப்படி செய்திருக்கக் கூடாது என்கிறார்கள் சினிமா துறையினர்.
மேலும் புகார் தெரிவித்ததற்கு பதிலாக மணிரத்தினமே நேரில் சென்று அந்த இயக்குனரையும் அல்லது அந்த பட குழுவினரிடம் அவருக்கு தொந்தரவு இல்லாமல் படப்பிடிப்பை நடத்த சொல்லியிருந்தால் அவர்களே மணிரத்தினத்திற்கு தொந்தரவு இல்லாமல் செய்திருப்பார்கள் ஆனால் சக சினிமா துறையினரின் கஷ்டங்களை புரிந்து கொள்ளாமல் மணிரத்தினம் இப்படி செய்தது பட குழுவினர் மன வருத்தத்தில் அடைந்ததாக கூறப்படுகிறது.