கல்கியின் குடும்பத்திற்கு கருணை காட்டுவாரா மணிரத்தினம்.. மனசாட்சி ஒன்று இருந்தால் நிச்சயம் செய்வார்..

0
Follow on Google News

சோழ மன்னர்களின் வரலாற்றுக் கதையை, தன்னுடைய கற்பனை கலந்து பொன்னியின் செல்வன் என்கின்ற நாவலை அமரர் கல்கி எழுதியிருந்தார். இந்த நாவல் ஒவ்வொரு தமிழனின் உணர்வில் கலக்கும் வகையில் அவ்வளவு சுவாரசியமாக எழுதப்பட்டிருக்கும். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை படிக்கும் பொழுதே, நம் நினைவுகளில் அதன் காட்சிகள் வந்து செல்லும், அந்த அளவுக்கு ஒவ்வொரு வரியும் சுவாரசியமாக எழுதி இருப்பார் அமரர்கல்கி.

பொன்னியின் செல்வன் நாவலை தழுவி திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று பல முயற்சித்து தோல்வியை தழுவினார்கள். அந்த வகையில் எம்ஜிஆர், கமல்ஹாசன் போன்ற முன்னணி நடிகர்கள் பலர் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க முயற்சித்து கைவிட்ட நிலையில், இயக்குனர் மணிரத்தினம் மிகப் பிரம்மாண்டமாக அதிக பணச் செலவில் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி திரைப்படமாக எடுத்துள்ளார்.

தற்பொழுது அனைத்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தை வெளியிட்ட அனைத்து திரையரங்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்து வருகிறது. பொதுவாக ஒரு படம் வெளியாகி மூன்று நாட்களில் படத்திற்கு சக்சஸ் பார்ட்டி கொண்டாடிவிட்டு அந்த படத்தை மூட்டை கட்டிவிடுவார்கள், ஆனால் பொன்னியின் செல்வன் படம் வெளியாகி நான்கு நாட்கள் முடிந்த நிலையில், அடுத்த ஒரு ஒரு வாரத்திற்கு பல திரையரங்குகளில் டிக்கெட் விற்பனை முடிந்து ஹவுஸ்புலாக உள்ளது.

இதற்கு முக்கிய காரணம் தற்பொழுது ஒரு வாரம் பள்ளி விடுமுறை நாட்கள் என்பதால், குடும்பம் குடும்பமாக திரையரங்குகளில் வந்து பொன்னியின் செல்வன் படத்தை தமிழர்கள் பார்த்து வருகின்றனர். அந்த வகையில் இதற்கு முன்பு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் வசூல் சாதனையை பொன்னியின் செல்வன் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பொதுவாக ஒரு உண்மைச் சம்பவத்தையோ,அல்லது ஒருவர் எழுதிய நாவலையோ திரைப்படமாக எடுக்க வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட அந்த உண்மை கதைக்குச் சொந்தமானவர்கள் அல்லது சம்பந்தப்பட்ட நாவலை எழுதியவர்களுக்கு கதைக்கான காப்பீடு தொகை என்று படத்தின் இயக்குனர் தரப்பிலிருந்து வழங்கப்படும். அந்த வகையில் சு. வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலை தழுவி அடுத்து இயக்குனர் சங்கர் எடுக்கும் வரலாற்று திரைப்படத்தின் கதைக்கான காப்பீடு தொகையாக சில கோடி சு.வெங்கடேசனுக்கு இயக்குனர் சங்கர் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் படத்தின் உண்மை கதைக்கு சொந்தமான குடும்பங்களுக்கு சூர்யா தரப்பில் இருந்து சில லட்சங்கள் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் அமரர் கல்கி எழுதிய நாவலை, தமிழக அரசு இதற்கு முன்பு கல்கியின் குடும்பத்திற்கு சில லட்சங்களை கொடுத்து, அவர் எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அரசுடமை ஆக்கியுள்ளது .

இதனால் பொன்னியின் செல்வன் நாவலை யார் வேண்டுமானாலும் அச்சீட்டு புத்தகமாக வெளியிடலாம். அந்தக் கதையை யார் வேண்டுமானாலும் திரைப்படமாக எடுக்கலாம். ஆகையால் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்தினம் திரைப்படமாக எடுத்திருந்தாலும், சட்டப்படி கல்கியின் குடும்பத்திற்கு, கதைக்கான எந்தவித பணமும் கொடுக்கத் தேவையில்லை.

அதே நேரத்தில் கல்கியின் குடும்பத்தினரும் இந்த நாவல் அரசுடமையாக்கப்பட்டதால், பொன்னியின் செல்வன் கதைக்கான உரிமையும் கொண்டாட முடியாது, இந்த நிலையில் பொன்னியின் செல்வன் இதுவரை 200 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படும் நிலையில்., இனி வரும் நாட்களில் இது விக்ரம் படத்தின் வசூலை முறியடிக்கும் என்று என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் பல கோடி அள்ளி குவிக்க இருக்கும் மணிரத்தினம் மனசாட்சியுடன், ஒரு சிறு தொகையை, அதாவது வசூலில், ஒரு சதவிகிதம் அல்லது இரண்டு சதவிகிதம் பணத்தை கல்கியின் குடும்பத்திற்கு கொடுக்க வேண்டும் என்கின்ற ஒரு குரல் தற்பொழுது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அப்படி அவருடைய குடும்பத்திற்கு கதைக்கான உரிமைக்கான பணம் கொடுக்கவில்லை என்றாலும், கல்கி கிருஷ்ணமூர்த்தி என்கின்ற பெயரில் செயல்படும் அறக்கட்டளைக்கு பண உதவி செய்யலாம் மணிரத்தினம்.

ஆனால் இந்த விஷயத்தில் மனசாட்சியுடன் மணிரத்தினம் நடந்து கொள்வதர்க்கு வாய்ப்பு இல்லை, இதற்கு முன்பு அவருடைய படத்தை வாங்கி வெளியிட்டு தற்பொழுது கடனாளியாக இருக்கும் இயக்குனர் லிங்குசாமியை கூட கண்டு கொள்ளாத இரும்பு மனம் படைத்த மணிரத்தினம். பணம் விஷயத்தில் ரெம்ப காரர் என்கிறது சினிமா வட்டாரங்கள்.