தமிழ் சினிமாவில் கதை மற்றும் பிற மொழி படங்களில் இருந்து காட்சிகளை திருடுவதில் மிக பிரபலமானவர் இயக்குனர் அட்லி. அவருடைய இயக்கத்தில் முதல் முதலில் வெளியான ராஜா ராணி படம் சுமார் 30 வருடங்களுக்கு முன்பு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான மௌன ராகம் படத்தின் கதையை தழுவியிருந்தது. அதேபோன்று அட்லீ இயக்கத்தில் அடுத்து வெளியான தெறி படம், சில வருடங்களுக்குமுன்பு விஜயகாந்த் நடிப்பில் வெளியான சத்ரியன் படத்தின் சாயலில் இருந்தது.
அடுத்தடுத்து மெர்சல் படம் அபூர்வ சகோதரர்கள் உட்பட பல தமிழ் சினிமாக்களை கலந்து எடுக்கப்பட்ட கதை என்கின்ற சர்ச்சை வெளியானது, மேலும் பொதுவாக அட்லி ஒரு படத்தின் கதையை மட்டும் திருடுவது கிடையாது. அவருடைய படங்களில் இடம் பெற்ற பல காட்சிகள் ஆங்கில படத்தில் இருந்து அப்படியே காப்பி அடித்து அட்லீ மாட்டிக்கொண்ட சம்பவமும் அரங்கேறி உள்ளது. இருந்தும் இதையெல்லாம் அட்லீ பெரிதுபடுத்துவது கிடையாது.
இந்த நிலையில் கதை திருடுவதில் அட்லியை மிஞ்சி மணிரத்தினம் செயல்பட்டதும், மேலும் தனக்கு தானே மகுடம் சூட்டிக்கொள்ள மணிரத்தினம் கேவலமாக செயல்பட்ட மோசடி சம்பவம் ஓன்று அமபலமாகியுள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் பொன்னியின் செல்வன். இந்த படம் ராஜராஜ சோழனின் கதை என்று கூறப்பட்டாலும், அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவியே இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மணிரத்தினம் சுயமாகவோ, தனித்துவமாகவே எதுவும் சிந்திக்காமல் பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதையையும், கல்கியின் எழுத்து வடிவில் நம் கண்முன்னே நிறுத்திய காட்சிகளை அப்படியே படமாக்கி உள்ளார் மணிரத்தினம். இந்த படத்திற்கு வசனம் ஜெயமோகன் என குறிப்பிட்டிருந்தாலும், பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற முக்கால்வாசி வசனங்கள் கல்கியில் பொன்னியின் செல்வன் நாவலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தை கல்கியின் பொன்னியின் செல்வன் என்று தான் குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆனால் கல்கியின் கதை, வசனம் அவருடைய எழுத்து வடிவிலான காட்சிகள் என அனைத்தையும் திருடிய மணிரத்தினம், இந்த படம் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் என்று தனக்கு தானே மகுடம் சூட்டிக்கொண்டார். பொன்னியின் செல்வன் படத்தின் தொடக்கம், அல்லது படம் முடியும் பொழுது,என எந்த ஒரு இடத்திலும் அந்த கதைக்கு சொந்தமான கல்கிக்கு மரியாதை செய்யவில்லை மணிரத்தினம்.
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படம் முடிந்து பின்பு வரும் டைட்டிலில், மூலக்கதை அமரர் கல்கி என்று இடம்பெற்றிருக்கும். இது மணிரத்தினத்தின் உச்சகட்ட மோசடி என்பது அம்பலமாகிறது. அமரர் கல்கியின் கதையை திருடி படம் எடுத்த மணிரத்தினம். அந்தக் கதைக்கு கூட கல்கியின் பெயரை குறிப்பிடாமல், மூலக்கதை அமரர் கல்கி என்று குறிப்பிட்டுள்ளது, எங்கே கல்கியின் பெயரை குறிப்பிட்டால் கல்கிக்கு பெருமை சென்று விடும் என்கிற நயவஞ்சகம் தான் மணிரத்தினத்தின் இந்த செயலுக்கு காரணம் என கூறப்படுகிறது.
கல்கியின் கதையை மட்டும் திருடியது இல்லாமல். அவருடைய தலைப்பான பொன்னியின் செல்வன் என்கிற பெயரையும் திருடி இது மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் என்று கூச்சமே இல்லாமல் கல்கியின் கதைக்கு தன்னுடைய இன்ஷியலை போட்டு கொண்ட மணிரத்தினம் செய்தது போன்று அட்லீ போன்ற இயக்குனர்கள் செய்திருந்தால், அட்லீக்கு திருட்டு பட்டம் கிடைத்திருக்கும், ஆனால் மணிரத்தினத்தின் மோசடிகளை யாரும் கண்டுகொள்ளாதது, மணிரத்தினத்திற்கு ஒரு நியாயம்.?அட்லீக்கு ஒரு நியாயமா.? என்கின்ற கேள்வியும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது