உதயநிதி பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட மணிரத்தினம்… விழித்து கொண்ட சினிமா தயாரிப்பாளர்கள்..

0
Follow on Google News

சமீப காலமாக தமிழ் சினிமாவில் பெரும்பாலான படங்களை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தான் தமிழ்நாட்டின் தியேட்டர் ரிலீஸ் உரிமையைப் பெற்று வெளியிட்டு வருகிறார்கள். இந்த தியேட்டர் ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயன்ட்ஸ் மூவீஸ் எந்த ஒரு முதலீடு இல்லாமல் பெற்று கொள்கிறார்கள். ஒரு சினிமாவை இரண்டு வகையில் வெளியீடு செய்வார்கள், ஓன்று விநியோகஸ்தர் முறை, மற்றொன்று தியேட்டர் ரிலீஸ் முறை.

இதில் விநியோக முறை என்பது, ஒரு திரைப்படத்தை விநியோகஸ்தர்களிடம் விற்பனை செய்து விடுவார்கள். விநியோகஸ்தர்கள் திரையரங்குகளில் படத்தை வெளியிடுவார்கள். அடுத்து தியேட்டர் ரிலீஸ் முறை என்பது, நேரடியாக திரையரங்குகளில் வெளியிட்டு அதில் வரும் பணத்தை தியேட்டர் உரிமையாளர் மற்றும் தயாரிப்பாளர்கள் பிரித்து கொள்வார்கள். இதில் பல திரையரங்குகளில் முறையான கணக்கு காண்பிக்கப்படவில்லை என்கிற குற்றசாட்டு இருந்து வந்தது.

இந்த நிலையில் ரெட் ஜென்ட்ஸ் மூவிஸ் சமீப காலமாக தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் திரைப்படங்களை வெளியிட்டு, அனைத்து திரையரங்குகளிலும் முறையான வசூலை தயாரிப்பாளர்களிடம் சமர்ப்பித்து அதிலிருந்து எட்டு சதவீதம் கமிஷனை பெற்றுக்கொள்கிறார்கள். திரையரங்கு உரிமையாளர்கள் ஏமாற்றுப்படுவதை தடுக்க, உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெரும்பாலான படங்களை திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை பெற்று வந்தனர்.

இதனால் எந்த ஒரு முதலீடும் இல்லாமல், ஒவ்வொரு படத்திற்கு 8 சதவிகித கமிஷனை பெற்று வந்தது ரெட் ஜெயன்ட் மூவிஸ். இந்த நிலையில் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தமிழ்நாடு தியேட்டர் ரிலீஸ் உரிமையை முதலில் உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட்ஸ் மூவிஸ் வெளியிடுவதாக இருந்தது, அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது.

ஆனால் பொன்னியின் செல்வன் படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுவது மணிரத்தினத்திற்கு விருப்பம் இல்லை. எந்த ஒரு முதலீடும் செய்யாமல் பொன்னியின் செல்வன் படத்தை வெளியிட்டு 8 சதவிகிதம் கமிஷனை உதயநிதிக்கு கொடுப்பதற்கு பதில், நம்முடைய படத்தை நமே நேரடியாக வெளியிட்டால், 8 சதவிகிதம் நமக்கு மேலும் லாபம் என மணிரத்தினம் தயாரிப்பாளரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்பொழுது உள்ள டிஜிட்டல் முறையை தீவிரமாக கண்காணித்தால் திரையரங்கு தரப்பில் இருந்தும் நம்மை ஏமாற்ற முடியாது என தயாரிப்பாளரிடம் பேச்சுவார்த்தை நடத்திய மணிரத்தினம், பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து உதயநிதி ஸ்டாலினை வெளியேற்றினார். இதனை தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தை நேரடியாக அந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தமிழ்நாடு முழுவதும் திரையிட்டனர்.

தற்பொழுது பொன்னியின் செல்வன் படம் வெளியாகி 10 நாட்களைக் கடந்தும் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்துள்ளது, அதே நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் வசூலிக்கப்படும் தொகை சரியான புள்ளி விவரங்களோடு தயாரிப்பு தரப்பிற்கு காண்பிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு இந்த படத்தை கொடுத்திருந்தால், வரும் லாபத்தில் எட்டு சதவீதம் விதம் பெருந்தொகை சென்றிருக்கும்,

ஆனால் தற்பொழுது அந்த 8 சதவிகிதம் லாபம் நமக்கு கிடைத்துள்ளது என பெரும் மகிழ்ச்சியில் மணிரத்தினம் மற்றும் தயாரிப்பு நிறுவனம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மணிரத்தினத்தின் ஃபார்முலாவை பின்பற்றி அடுத்தடுத்து படங்களை தயாரிப்பாளர்கள் நேரடியாக வெளியிட இருப்பதால், உதயநிதிக்கு பெருமளவில் தியேட்டர் ரிலீஸ் உரிமை குறைய தொடங்கியுள்ளது. இதனால் உதயநிதியின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்டுவிட்டார் மணிரத்தினம் என கூறப்படுகிறது.