மணிரத்தினம் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு திரையில் வெற்றி நடை போட்டு வசூல் சாதனை படைத்த படம் பொன்னியின் செல்வன். இந்த படத்திற்கு எதிர்மறை விமர்சனம், ஆதரவு விமர்சனம், கலவையான விமர்சனம் என்று மூன்று விதத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளது. இருந்தாலும் எதிர்மறை விமர்சனத்தை ஏற்று கொள்கிறவர்கள் கூட அந்த படத்தில் என்ன இருக்கிறது என்பதை பார்க்க திரையரங்குக்கு படையெடுத்து படத்தை பார்த்தனர்.
சமீப காலமாக தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் பொன்னியின் செல்வன் படத்திற்கு மட்டும் தான் குடும்பம் குடும்பமாக திரையரங்குக்கு மக்கள் வருவதை பார்க்க முடிந்தது . அதே நேரத்தில் இன்றைய இளம் தலைமுறையினருக்கு சோழ மன்னரை கொண்டு சேர்த்துள்ளார் மணிரத்தினம் என்று சொல்லலாம். பல திரையரங்குகளில் இதுவரை விஜய், அஜித், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுக்கு தமிழக இளைஞர்கள் பாலபிஷேகம் செய்து வந்தனர்.
ஆனால் முதல் முறையாக உலகை ஆண்ட தமிழ் மன்னன் ராஜராஜன் சோழன் கட்டவுட்க்கு திரையரங்கு முன்பு தமிழக இளைஞர்கள் பால் அபிஷேகம் செய்வதை பொன்னியின் செல்வன் படம் வெளியான போது பார்க்க முடிந்தது. அந்த வகையில் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தன்னுடைய திரைப்படம் வாயிலாக அடுத்த தலைமுறைக்கு எடுத்து சென்று, அதில் வெற்றியும் பெற்றுவிட்டார் மணிரத்தினம் என்பது சந்தேகமின்றி உறுதியாகியுள்ளது.
பொதுவாக ஒரு திரைப்படம் வெளியானால் அந்த நடிகரின் பெயரை குறிப்பிட்டு விமர்சனம் செய்வார்கள், வாழ்த்து தெரிவிப்பார்கள். ஆனால் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அந்தப் படத்தின் கதாபாத்திரத்தை குறிப்பிட்டு, வந்தியத்தேவன், அருள்மொழிவர்மன், ஆதித்ய கரிகாலன், குந்தவை, நந்தினி, பழுவேட்டையார் என்று குறிப்பிடும் அளவுக்கு அணைத்து கதாபாத்திரமும் மக்கள் மத்தியில் ஆழமாக பாதித்துள்ளது.
பொன்னியின் செல்வன் பாகம் ஓன்று வெளியாகி மிக பெரிய வெற்றியை பெற்று வசூல் சாதனை படைத்துள்ள நிலையில், இம்மாதம் இறுதியில் பொன்னியின் செல்வன் பாகம் 2 வெளியாக இருக்கிறது, ஏற்கனவே பொன்னியின் செல்வன் பார்ட் 1 பார்த்த மக்கள் பார்ட் 2வுக்காக செம்ம வைட்டிங்கில் காத்திருக்கிறார்கள், அந்த வகையில் பொன்னியின் செல்வன் 2 இதற்கு முன்பு வெளியான பொன்னியின் செல்வன் பார்ட் 1யை விட அதிக வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கல்கியின் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் பார்ட் 2வுடன் கல்கியின் நாவலை தழுவி வரும் கதை முடிவுக்கு வருகிறது, ஆனால் பொன்னியின் செல்வன் பார்ட் 2க்கு மக்கள் கொடுக்கும் வரவேற்பை பொறுத்து அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குனரும் பொன்னியின் செல்வன் பார்ட் 3 எடுக்கும் முடிவில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் அருள்மொழி வர்மம் அரியணை ஏறியதும் கல்கியின் பொன்னியின் செல்வன் முடிகிறது, இந்நிலையில் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் பார்ட் 3ல் அருள்மொழி வர்மம் அதாவது ராஜராஜ சோழன் அரியணை எரிய பின்பு, உலகில் பல்வேறு பகுதிகளில் போர் புரிந்து வெற்றி பெற்று புலி கொடியை நாட்டி, ஆசியா கண்டத்தையே ஆட்சி புரிந்தது. மற்றும் அவர் கட்டிய தஞ்சை பெரிய கோவில் ஆகியவை பார்ட் 3ல் இடம்பெறும் என்றும்.
மேலும் ராஜா ராஜா சோழனின் மகன் ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்தில் நடந்த சம்பவங்களை தொகுத்தும் பொன்னியின் செல்வன் பார்ட் 3 படத்தை எடுக்கும் முடிவில் இயக்குனர் மணிரத்தினம் மற்றும் தயாரிப்பாளர் லைக்கா பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் பொன்னியின் செல்வன் பார்ட் 2க்கு மக்கள் கொடுக்கும் வரவேற்பபை பொறுத்தே பொன்னியின் செல்வன் பார்ட் 3 குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.