லோகேஷ் கனகராஜ் தற்பொழுது விஜய் நடிக்கும் லியோ படத்தை இயக்கி வருகிறார். அதேபோன்று நடிகர் ரஜினி தற்போது ஜெயிலர் படத்தின் இறுதி கட்டப்பட படிப்பில் உள்ளார். அதே போன்று அவர் கைவசம் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார், இதன் பின்பு ஒரு சிறிய பட்ஜெட் படத்தில் நடிக்கும் ரஜினிகாந்த் அதனை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கும் மிகப்பெரிய மாஸ் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இந்த படத்தை பல தயாரிப்பு நிறுவனங்கள் கைப்பற்றுவதற்கு போட்டி போட்ட நிலையில், இறுதியில் சன் பிக்சர்ஸ் ரஜினி – லோகேஷ் கனகராஜ் ப்ராஜெக்ட்டை கைப்பற்றியுள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்த் நடிப்பதற்கு 115 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு 40 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது.
ரஜினிக்கு குறைந்த சம்பளம் என்கின்ற ஒரு கேள்வி எழுந்து இருந்தாலும் ரஜினி தன்னுடைய சம்பளம் குறைந்தாலும் பரவாயில்லை இந்தப் படத்திற்கு இயக்குனருக்கான சம்பளத்தை அதிகப்படுத்தி கொடுங்கள், காரணம் நான் நடித்த பாட்ஷா படம் போன்று மாஸாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தவர்.
மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்யி டம் இதுதான் என்னுடைய கடைசி படம் அதனால் மாஸாக இருக்கணும். இதுவரை நான் நடித்த என்னுடைய நடிப்பில் வெளியான பாட்ஷா படம் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது தற்பொழுது நீங்கள் இயக்கப் போகும் படம் வெளியான பின்பு அந்த படம் தான் மிகப்பெரிய அளவில் பேசப்பட வேண்டும் அதனால் பாட்ஷா அளவுக்கு இந்த படம் இருக்க வேண்டும் என்று அன்பு கட்டளை போட்டு உள்ளாராம் ரஜினி.