தமிழ் சினிமாவில் கதை மற்றும் பிற மொழி படங்களில் இருந்து காட்சிகளை திருடுவதில் மிக பிரபலமானவர் இயக்குனர் அட்லி. அவருடைய இயக்கத்தில் முதல் முதலில் வெளியான ராஜா ராணி படம் சுமார் 30 வருடங்களுக்கு முன்பு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான மௌன ராகம் படத்தின் கதையை தழுவியிருந்தது. அதேபோன்று அட்லீ இயக்கத்தில் அடுத்து வெளியான தெறி படம், சில வருடங்களுக்குமுன்பு விஜயகாந்த் நடிப்பில் வெளியான சத்ரியன் படத்தின் சாயலில் இருந்தது.
அடுத்தடுத்து மெர்சல் படம் அபூர்வ சகோதரர்கள் உட்பட பல தமிழ் சினிமாக்களை கலந்து எடுக்கப்பட்ட கதை என்கின்ற சர்ச்சை வெளியானது, மேலும் பொதுவாக அட்லி ஒரு படத்தின் கதையை மட்டும் திருடுவது கிடையாது. அவருடைய படங்களில் இடம் பெற்ற பல காட்சிகள் ஆங்கில படத்தில் இருந்து அப்படியே காப்பி அடித்து அட்லீ மாட்டிக்கொண்ட சம்பவமும் அரங்கேறி உள்ளது. இருந்தும் இதையெல்லாம் அட்லீ பெரிதுபடுத்துவது கிடையாது.
இந்நிலையில் நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது இந்தப் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். பெரும் பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் லியோ படத்தின் டைட்டில் கடந்த மாதம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படங்கள் அனைத்துமே தொடர் வெற்றியை பெற்று வருகிறது.
இதனால் லியோ படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் உள்ளது. அந்த வகையில் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் ஒவ்வொரு காட்சிகளையும் பிரமிக்கும் வகையில் எடுத்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்த நிலையில் லியோ படம் குறித்த ஒரு புதிய தகவல் ஓன்று கசிந்துள்ளது. சென்னையில் லியோ படத்தின் படப்பிடிப்பு நடந்த போது ஒரு காபி ஷாப் செட் அமைக்கப்பட்டது
அதே போன்று காஷ்மீரிலும் ஒரு காப்பி ஷாப் செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட வருவதாக தகவல் வெளியாகிறது. இந்த நிலையில் ஏற்கனவே வெளியான ஹிஸ்டரி ஆப் வைலன்ஸ் என்கின்ற ஒரு ஆங்கில படத்தின் காப்பி தான் விஜய் நடிக்கும் லியோ படத்தின் கதை என்கின்ற ஒரு தகவல் வைரலாகி வரும் நிலையில். அந்த ஆங்கில படத்தில் இடம்பெற்றுள்ள காபி ஷாப் காட்சிகள் போன்று லியோ படத்திலும் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும் ஹிஸ்டரி ஆப் வைலன்ஸ் படத்தில் இடம்பெற்றுள்ள பல காட்சிகள் சாயல் கொண்டது போன்றே லியோ படத்தின் காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில், அமேசான் பிரைமில் இருந்த ஹிஸ்டரி ஆப் வைலன்ஸ் படத்தை தற்பொழுது அந்நிறுவனம் இந்தியாவில் இருப்பவர் மட்டும் பார்க்க முடியாத அளவு நீக்கி உள்ளது. ஆனால் இந்தியாவில் அல்லாத பிற நாடுகளில் இருந்து இந்த படத்தை அமேசானில் பார்க்கலாம்.
இது குறித்து விசாரித்ததில், ஹிஸ்டரி ஆப் வைலன்ஸ் படத்தின் காப்பிரைட்ஸை லியோ பட இயக்குனர் லோககேஷ் கனகராஜ் வங்கியிருக்கலாம், அதனால் தான் அந்த படம் அமேசான் பிரைமில் இந்தியாவில் இருப்பவர்கள் பார்க்க முடியாத அளவுக்கு நீக்கப்பட்டுள்ளது என்கின்ற சந்தேகம் பலர் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.