வயதான ரஜினியால் நமக்கு எதற்கு வம்பு.. ரிஸ்க்கை விரும்பாத லோகேஷ்.. என்னடா ரஜினிக்கு வந்த சோதனை..

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான படம் அண்ணாத்தே, சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான அண்ணாத்தே படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆனது, ஆனால் படம் தோல்வியை சந்தித்து அந்த படத்தின் தயாரிப்பாளரான சன் பிச்சருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி தந்தது. இதனை தொடர்ந்து தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்வதற்காக தயாரிப்பாளர் தரப்பிலிருந்து ரஜினிகாந்த் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக மீண்டும் ஒரு படம் அதே தயாரிப்பு நிறுவனத்திற்கு கால்ஷீட் கொடுக்க ரஜினிகாந்த் முன் வந்தார்.

இதனை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு ரஜினிகாந்த் உடல்நிலையை கருத்தில் கொண்டு இடைவேளை விட்டு, இடைவேளை விட்டு ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. பொதுவாகவே ரஜினிகாந்த் ஓடுகின்ற குதிரையில் சவாரி செய்து வெற்றியடைய கூடிய ஃபார்முலாவை கடைப்பிடித்து வருகின்றவர். அந்த வகையில் ரஜினிகாந்த் சினிமா கேரியரில் மிக பெரிய ஹிட் படங்கள் கொடுத்த கே.எஸ்.ரவிக்குமார், பி.வாசு போன்றோர் ரஜினிகாந்தை வைத்து மீண்டும் கால் சீட் கேட்டு காத்திருந்தாலும்.

இன்றைய தலைமுறையினர் மத்தியில் கே எஸ் ரவிக்குமார், பி வாசு போன்றோருக்கு வரவேற்பு இல்லாத காரணத்தினால், தற்போதைய காலகட்டத்தில் ஓடுகின்ற குதிரையை தேடி பிடித்து அதன் மீது சவாரி செய்து வருகிறார் ரஜினிகாந்த், அந்த வகையில் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் தொடர் வெற்றியால் அவருடைய இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாகும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

அந்த வகையில் தற்போது சினிமா என்னும் பந்தயத்தில் முதல் குதிரையாக ஓடிக் கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜை நேரில் அழைத்த ரஜினிகாந்த், நம்ம ஒரு படம் பண்ணலாம் ஒரு கதை ரெடி பண்ணுங்க என ரஜினி தெரிவித்துள்ளார், அதற்கு லோகேஷ் கனகராஜ் தற்பொழுது விஜய் நடிக்கும் லியோ படத்தை முடித்துவிட்டு, கைதி 2, அதை முடித்துவிட்டு கமல் சார் உடன் ஒரு படம் என தனக்கு அடுத்தடுத்து கமிட் மென்ட் இருப்பதால் இப்போதைக்கு நம்ம சேர்ந்து படம் பண்ணுவதற்கு வாய்ப்பு இல்லை என ரஜினியிடம் நேரடியாக தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

லோகேஷ் கனகராஜை கன்வின்ஸ் செய்ய முயன்ற ரஜினிகாந்த் ஒரு கட்டத்தில் தன்னுடைய படத்தை இயக்க 30 கோடி சம்பளம் என மிக பெரிய தொகையை தெரிவித்துள்ளார் ரஜினி. அதற்கு லோகேஷ் கனகராஜ் யோசித்து சொல்கிறேன் என எந்த ஒரு உறுதியான தகவலும் தெரிவிக்காமல் விடைபெற்றுள்ளார் லோகேஷ். ஆனால் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்குவதற்கு லோகேஷ் கனகராஜுக்கு சிறிதும் விருப்பம் இல்லையாம்.

லோகேஷ் இயக்கும் படங்களில் பெரும்பாலும் டூப் இருக்காது, மேலும் லோகேஷ் இயக்கும் படங்களின் அவருடைய கதைக்கு ஏற்றார் போல் ஹீரோக்கள் உடல் கட்டமைப்புடன் இருப்பார்கள், அந்த வகையில் 70 வயதை கடந்து மேலும் உடல்நிலை சரியில்லாத ரஜினிகாந்தை வைத்து நான் எந்த மாதிரி கதையை உருவாக்க முடியும் என குழம்பி போய் உள்ளார் லோகேஷ் கனகராஜ்.

மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்களின் படப்பிடிப்பு இடைவிடாமல் தொடர்ந்து நடைபெறும், அந்த வகையில் தற்பொழுது அவர் இயக்கும் லியோ படத்தின் படப்பிடிப்பு 60 நாட்கள் திட்டமிட்டு இடைவிடாமல் தொடர்ந்து கடும் குளிருக்கு மத்தியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படி இருக்கையில் ரஜினிகாந்த் வைத்து படம் எடுக்கும்போது ரஜினிகாந்துக்கு அவருடைய உடல் நிலைக்கு ஏற்றார் போல் லொகேஷன் தேர்வு செய்ய வேண்டும்.

மேலும் தொடர்ந்து இடைவிடாமல் ரஜினிகாந்தால் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாது, அடிக்கடி அவருக்கு ஓய்வு தேவைப்படும், இப்படி ஒரு சூழலில் வயதான ரஜினிகாந்தை வைத்து, நான் என்ன படம் எடுக்க முடியும் என்பதால் தான் ரஜினிகாந்த் நேரில் அழைத்து வாய்ப்பு கொடுத்தாலும் லோகேஷ் கனகராஜ் வயதானவரை வைத்து நமக்கு எதற்கு இந்த ரிஸ்க் என அந்த வாய்ப்பை தவிர்த்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்தவர்கள், என்னடா இது சூப்பர் ஸ்டாருக்கு வந்த சோதனை என முணு முனுத்து வருவது குறிப்பிடதக்கது.