சில ஆயிரத்தில் தொடங்கி.. 50 கோடியை தொட்ட லோகேஷ் கனகராஜ் வாழ்க்கையில் நடந்த அதிசயம்..

0
Follow on Google News

பட்ட படிப்பை முடித்துவிட்டு வங்கியில் வேலை பார்த்து கொண்டிருந்த லோகேஷ் கனகராஜ், காத்திக் சுப்புராஜ் நடுவராக பங்கேற்ற குறும்படம் போட்டியில் கலந்து கொண்டார் லோகேஷ் கனகராஜ். இவருடைய குறும்படத்தை பார்த்து ஆச்சரிய பட்ட கார்த்திக் சுப்புராஜ், அடுத்தடுத்து லோகேஷ் குறும்படங்கள் இயக்க உதவி செய்தார், இதனை தொடர்ந்து தான் வங்கியில் பார்த்த வேலையை ராஜினாமா செய்து விட்டு தன்னுடைய முழு கவனத்தையும் சினிமா பக்கம் திருப்பினார் லோகேஷ் கனகராஜ்.

மாநகரம் படத்தில் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் முதல் படத்திலே மிக பெரிய ஹிட் கொடுத்து, அடுத்து நடிகர் கார்த்திக் நடிப்பில் கைதி படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார்,அடுத்தடுத்து நடிகர் விஜய் நடிப்பில் மாஸ்டர், கமல் நடிப்பில் விக்ரம் தற்பொழுது மீண்டும் விஜய் நடிப்பில் லியோ என மிக குறுகிய காலத்தில் இன்று தமிழ் சினிமாவில் முன்னனி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதல் முதலில் வெளியான மாநகரம் படத்தை எடுத்து முடிக்க சுமார் மூன்று வருடங்கள் அந்த படத்திற்காக இயக்குனராக பணியாற்றிய லோகேஷ் கங்காராஜுக்கு வெறும் 5 லட்சம் மட்டுமே சம்பளமாக கொடுக்கப்பட்டது,மூன்று வருடம் 5 லட்சம் என்றால் மாதம் சில ஆயிரம் மட்டுமே சம்பளமாக லோகேஷ் கனகராஜ் சம்பளமாக பெற்றுள்ளார்.

அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படத்திற்காக 75 லட்சம் சம்பளம் வாங்கியவர், மாஸ்டர் படத்தில் 2.5 கோடியாக உயர்ந்தது, இன்று விஜய் நடிக்கும் லியோ படத்திற்கு சுமார் 30 கோடி சம்பளம் வாங்கி வரும் லோகேஷ் கனகராஜ், அடுத்து அவர் இயக்க இருக்கும் படத்திற்கு 50 கோடி வரை சம்பளம் கொடுக்க பலர் வரிசை கட்டி காத்திருக்கிறார்கள், அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் வாழ்க்கையில் இப்படி ஒரு அதிசயம் நிகழ்வதற்கு முக்கிய காரணம், அவர் பங்கேற்ற குறும்படம் போட்டியில் கார்த்திக் சுப்புராஜ் நடுவராக பங்கேற்றது தான் என்பது குறிப்பிடத்தக்கது.