விஜய் நடிக்கும் லியோ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று முடித்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக, பட குழுவினர் தனி விமானத்தில் காஷ்மீர் சென்றனர், இதில் இந்த படத்தில் நடிக்கும் விஜய் , திரிஷா , லோகேஷ் கனகராஜ் உட்பட பலரும் காஷ்மீர் சென்றனர் .சுமார் 14 வருடங்களுக்கு பிறகு விஜய் உடன் லியோ படத்தில் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைத்தில் எல்லையற்ற மகிழ்ச்சியில் உள்ளார் திரிஷா.
இந்நிலையில் லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு தற்பொழுது சென்னை திரும்பியுள்ள லியோ பட குழு, சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் சில காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதை முடித்துவிட்டு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் 20 நாட்கள் தொடர்ந்து படபிடிப்பு நடத்துவதற்காக பிரம்மாண்ட செட் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் ஏற்கனவே காஷ்மீரில் பெரும்பகுதி வெளியில் எடுக்கப்பட்டு வந்ததால், மீண்டும் வெளியே சென்று படப்பிடிப்பு நடத்த வேண்டாம் சென்னையில் படப்பிடிப்பு நடக்கட்டும் என நடிகர் விஜய் இயக்குனரிடம் தெரிவிதித்துள்ளார், இதற்கு காரணம் காஷ்மீரில் கடும் குளிரில் விஜய் உட்பட பட குழுவினர் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.
இந்நிலையில் விஜய் விருப்பப்படி சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் சில காட்சிகள் எடுக்கப்பட்டு அதில் லோகேஷ்க்கு திருப்தி இல்லை என கூறப்படுகிறது. உடனே நேரடியாக விஜய்யிடம், சார் எனக்கு திருப்தி இல்லை,, இந்த காட்சியை அவுட் டோரில் தான் எடுக்க வேண்டும் என, நீங்க சொல்வது போன்று செட் அமைத்து எடுக்க முடியாது என லோகேஷ் தெரிவித்துள்ளார்.
இதன் பின்பு லோகேஷ் விருப்பப்படி பையனுரில் தற்பொழுது சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. சித்திரை மாதம் கடும் வெயிலில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே காஷ்மீரில் கடும் குளிரில் அவதிப்பட்டு வந்த விஜய் தற்பொழுது கடும் வெயிலில் வெப்பம் தாங்க முடியமால் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.