லிங்குசாமி வாழ்க்கையில் விளையாடியது இவர்கள் தான்… லிங்குசாமி 6 மாத சிறை தண்டனைக்கு காரணம் தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் லிங்குசாமி திருப்பதி பிரதர்ஸ் என்கின்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அவருடைய சகோதரருடன் இணைந்து சினிமா படங்களை தயாரித்து வந்தார். மேலும் பல சினிமா படங்களை வாங்கி வெளியிடும் செய்து வந்தார். ஆரம்பத்தில் இவருடைய தயாரிப்பில் வெளியான படங்கள் லாபத்தை கொடுத்து வந்தது.

இந்நிலையில் 2013ஆம் வருடம் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான கடல் படத்தை லிங்குசாமி தலையில் கட்டிவிட்டு அதிக விலைக்கு விற்று லாபம் பார்த்தார் மணிரத்தினம். ஆனால் கடல் படத்தை இருந்து வாங்கி விநியோகம் செய்த இயக்குனர் லிங்குசாமி மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்தார். இருந்தும் இந்த நஷ்டத்தை சரி செய்ய மணிரத்தினத்திடம் லிங்குசாமி அணுகியுள்ளார்.

ஆனாலும் மணிரத்தினம் அதெல்லாம் எனக்கு தெரியாது என ஒதுங்கி கொண்டார். லிங்குசாமி முதல் முதலில் பெரும் தொகையை இழந்தது மணிரத்தினத்தின் கடல் படத்தில் இருந்து தான். இதன் பின்பு சூர்யாவை வைத்து அஞ்சான் படத்தை சொந்தமாக தயாரித்து இயக்கி இருந்தார் லிங்குசாமி. இந்த படம் மேலும் அவருக்கு நஷ்டத்தை கொடுத்தது.

அதனைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உத்தமன் வில்லன் படத்தை தயாரித்த லிங்குசாமி, கமலஹாசனின் ஒரு ரசிகனாக இந்த படத்தை தயாரித்து, கமல்ஹாசன் என்ன கேட்கிறாரோ அதை தயாரிப்பு தரப்பில் இருந்து செய்து கொடுத்தார் லிங்குசாமி. ஆனால் இந்த படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. உத்தம வில்லன் படம் வெளியாவதற்கு முன்பு பண சிக்கலை சந்தித்து படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட தொகையை பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுவனத்திடம் கடனாக பெற்று உத்தமவில்லன் படத்தை வெளியிட்டுள்ளார் லிங்குசாமி. ஆனால் உத்தமவில்லன் படம் தோல்வியை தழுவி மேலும் லிங்குசாமிக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கடனை அடைக்க முடியாமல் காலம் தாமதம் செய்து வந்த லிங்குசாமிக்கு எதிராக கடன் கொடுத்த பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பிவிபி நிறுவனத்திடம் பெற்ற கடனை திரும்பச் செலுத்த இயக்குநர் லிங்குசாமிக்கு உத்தரவிட்டிருந்தது.இதனை தொடர்ந்துலிங்குசாமி, ரூ.1 கோடியே 3 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுனத்திற்கு வழங்கினார். ஆனால் அந்த காசோலைகள் வங்கியில் போதிய பணம் இல்லாமல், திரும்பி வந்தன.

இதையடுத்து, இயக்குநர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர்களுக்கு எதிராக பிவிபி நிறுவனம் செக் மோசடி வழக்கு தொடர்ந்தது, இந்த வழக்கில், இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து கடந்த ஆகஸ்டில் தீர்ப்பளித்த நிலையில் தற்பொழுது இத்தீர்ப்பை தற்போது சென்னை முதன்மை அமர்வு நீதி மன்றம் உறுதி செய்துள்ளது.