நடு தெருவில் நிற்கும் கே.எஸ்.ரவிகுமார்..! நன்றி மறந்து கண்டுகொள்ளாத ரஜினிகாந்த்..! மனசாட்சி வேண்டாமா.?

0
Follow on Google News

இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் 1990ஆம் ஆண்டு புரியாத புதிர் திரைப்படத்தின் மூலம் அறிமுக இயக்குனரானவர், தொடர்ந்து ஆனந்த் பாபு, சரத்குமார் போன்ற அப்போது உச்ச நட்சத்திரம் அல்லாத நடிகரை வைத்து தனது கதை மூலம் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்த கே.எஸ்.ரவிக்குமார், 1994ம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் அவர் இயக்கத்தில் வெளியான நாட்டாமை படம் மெகா ஹிட் அடித்து பட்டி தொட்டி எங்கும் நாட்டாமை படத்தின் கதை வசனமும் பாடலும் ஒலித்தது.

நாட்டாமை படத்துக்கு பின்பு உச்ச நடிகர்கள் கே.எஸ் ரவிக்குமாரை தேடி வர தொடங்கினர். பாட்ஷா படம் வெளியாகி மிக பெரிய ஹிட் கொடுத்து யாரும் எட்டமுடியாத உச்சத்தில் இருந்த ரஜினிகாந்த், நாட்டமை படம் பார்த்துவிட்டு இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரை அழைத்து தனக்கு ஒரு கதை தயார் செய்ய கேட்டுக்கொண்டதை தொடர்ந்து முத்து படத்தில் இணைந்தனர் கே.எஸ்.ரவிக்குமார்- ரஜினிகாந்த் கூட்டணி.

இந்த படம் மிக பெரிய ஹிட் கொடுத்தது, மேலும் அந்த கலக்கட்டத்தில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், முத்து படத்தில் இடம் பெற்ற அரசியல் வசனங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பபை பெற்றது, மேலும் முத்து படம் ஜப்பானில் மிக பெரிய வரவேற்பை பெற்று, ரஜினிகாந்துக்கு ஜப்பானில் ரசிகர்கள் உருவாக காரணமாக இருந்தவர் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்.

இதன் பின்பு கமல்ஹாசன் நடித்த அவ்வை சண்முகி உட்பட இரண்டு வருடத்தில் 6 படங்களை இயக்கிய கே.எஸ்.ரவிக்குமார் வெற்றி பட இயக்குனராக வலம் வந்தவர். இந்நிலையில் மீண்டும் கே.எஸ்.ரவிக்குமாரை அழைத்து அடுத்த படத்துக்கான கதையை தயார் செய்யுங்கள் என ரஜினிகாந்த் கேட்டு கொண்டதை தொடர்ந்து, இவர்கள் கூட்டணியில் உருவானது படையப்பா. இந்த படம் மிக பெரிய ஹிட் கொடுத்து உலக தமிழர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றது, இந்த படத்துக்கு பின்பு தான் கே.எஸ்.ரவிக்குமாருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உருவானார்கள்.

அதன் பின்பு அஜித், விஜய், கமல் , சூர்யா என முன்னனி நடிகர்களை வைத்து வெற்றி படம் கொடுத்த இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் சுமார் 13 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடிகர் ரஜினிகாந்த் உடன் கூட்டணி அமைத்தார், ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா இயக்கத்தில் வெளியான அனிமேஷன் படமான கோச்சடையான் படத்தின் கதையை தயார் செய்து கொடுத்தவர் கே.எஸ் ரவிக்குமார், இந்த படம் தோல்வியை தழுவினாலும் படத்தின் கதையை அனைவரும் பாராட்டினார்கள்.

இதன் பின் ரஜினிகாந்த் நடிப்பில் படையப்பா போன்றே உருவான படம் லிங்கா, இந்த படம் மக்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றாலும், படத்தின் கிளைமஸ் காட்சியில் வரும் பாராசூட் காட்சிகள் மற்றும் ரஜினிகாந்த் ஒபெனிக் சாங் வரவேற்பை பெறவில்லை, ஆனால் படத்தின் கதை மற்றும் திரைக்கதைகள் பாராட்டை பெற்றது, இதன் பின்பு ரஜினிகாந்த் தனது ரூட்டை மாற்றி சிறிய பட்ஜெட் படத்தில் நடிக்க தொடங்கினர்.

லிங்கா படத்துக்கு பின்பு கே.எஸ்.ரவிக்குமார் எந்த ஒரு படமும் இயக்கவில்லை, இந்நிலையில் மீண்டும் ரஜினிகாந்துடன் இனைந்து பணியாற்ற அருமையான கதை ஒன்றை தயார் செய்து ரஜினிக்காக காத்திருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார், ஆனால் ரஜினிகாந்த் கண்டு கொள்ளவில்லை என கூறபடுகிறது, மேலும் ரஜினிகாந்த் தனது மகள்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இரண்டாவது மகள் சௌதர்யாவை தொடர்பு கொண்டு இது குறித்து கே.எஸ்.ரவிக்குமார் பேசியதாக கூறபடுகிறது.

ஆனால் தகுந்த பதில் ஏதும் வராத காரணத்தினால் ரஜினிகாந்துக்காக அருமையான கதையை தயார் செய்து அனைத்தையும் இழந்து நாடு ரோட்டில் நிற்பது போன்று காத்துக்கொண்டிருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார், அவருக்கு வாய்ப்பு அளித்து மனசாட்சியுடன் ரஜினிகாந்த் நடந்து கொள்ள வேண்டும் என பரிதாபத்துடன் சினிமா வட்டாரதத்தில் பேசி வருவது குறிப்பிடதக்கது. இந்நிலையில் கே.எஸ்.ரவிக்குமார் தொலைக்காட்சி தொடர்களில் தற்போது நடித்து வருவது குறிப்பிடதக்கது.