ஜி தமிழ்டிவியில் கரு பழனியப்பன் வெளியேற்ற பட்டதற்கு என்ன காரணம் தெரியுமா.? அட அவரே சொன்ன தகவல்…

0
Follow on Google News

ஜீ தொலைக்காட்சியில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சி வெற்றிகரமாக இரண்டு சீசன்களைக் கடந்து இப்போது மூன்றாவது சீசனில் பயணித்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை முதலில் இயக்குனரும் நடிகருமான கரு பழனியப்பன் அவர்கள் தொகுத்து வழங்கினார். இரு தரப்பு இடையே அனல் பறக்கும் விவாதம், கரு பழனியப்பனின் கருத்து என விறுவிறுப்பாக நகரும் தமிழா தமிழா நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் இருந்தது.

இப்படியான நிலையில், தமிழா தமிழா நிகழ்ச்சியில் இருந்து கரு பழனியப்பன் திடீரென்று வெளியேறியிருக்கிறார். அவர் விலகியதைத் தொடர்ந்து, சில மாதங்களுக்கு அந்த நிகழ்ச்சி ஜீ தொலைக்காட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டது. இப்போது அந்த நிகழ்ச்சியை பிரபல பத்திரிக்கையாளர் ஆவுடையப்பன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த சூழலில் கரு பழனியப்பன் முதல் முறையாக தான் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதற்கு காரணம் இதுதான் என்று பகீர் தகவல் ஒன்றை சோஷியல் மீடியாக்களில் போட்டுடைத்துள்ளார். அவர் கொடுத்துள்ள விளக்கம் பலரையும் சிந்திக்க வைத்துள்ளது. அவர் என்ன கூறினார் என்பது பற்றி இங்கு பார்க்கலாம். சினிமாவில் இயக்குனரராக இருந்து அடுத்து நடிகராக களமிறங்கிய கரு பழனியப்பனுக்கு ஜீ தமிழில் தொடங்கப்பட்ட தமிழா தமிழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய கரு. பழனியப்பன் தமிழா தமிழா நிகழ்ச்சியை நன்றாக தொகுத்து வழங்கி வந்தார். ஒரு பக்கம் விஜய் டிவியில் கோபிநாத் அவர்கள் தொகுத்து வழங்கும் நீயா நானா விவாத நிகழ்ச்சி பட்டிதொட்டி எங்கும் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், நேயர்களின் கவனத்தை தமிழா தமிழா நிகழ்ச்சிக்கு இழுத்ததில் இவரது பங்கு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

என்னதான் தமிழா தமிழா நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும், இது நீயா நானா நிகழ்ச்சியின் காப்பி என்றும் பலர் விமர்சித்து வந்தனர். அதற்கு கரு பழனியப்பன் ஆமாம் உண்மைதான் என்று துணிச்சலாக தெரிவித்தார். இப்படி தமிழா தமிழா நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கி வந்த கரு. பழனியப்பன், சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் ‘ஜீ தமிழ் உடனான நான்கு வருட தமிழா தமிழா பயணம் இனிதே முடிவுக்கு வந்தது.

சமூக நீதி, சுயமரியாதை, திராவிடம் என்ற சொல்லாடல்கள் கசப்பா இருக்கும் எனில் அந்த பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது’ என்று பதிவிட்டிருந்தார். அவரது பதிவு நேயர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. கரு. பழனியப்பன் வெளியேறியதால், சில மாதங்களுக்கு அந்த நிகழ்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டது. இப்போது மீண்டும் அந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டிருக்கிறது. அதை பத்திரிக்கையாளர் ஆவுடையப்பன் தொகுப்பு வழங்கி வருகிறார்.

இந்த நிலையில், கரு பழனியப்பன் தனியார் ஊடகம் ஒன்றில் பேட்டி அளித்திருந்தார. அந்த பேட்டியில், தான் எதனால் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினேன் என்பது பற்றி பேசி இருக்கிறார். இது பற்றி அவர் விவரிக்கையில், “தமிழா தமிழா நிகழ்ச்சியில் எனக்கும் சேனல் தரப்பினருக்கும் ஒரு இடத்தில் முரண்பாடுகள் ஏற்பட்டது. ஒன்று நான் விட்டுக் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் அவர்கள் விட்டுக் கொடுக்க வேண்டும்.

ஆனால் ஒருவரே எப்போதும் விட்டுக்கொடுத்து கொண்டு இருக்க முடியாது. என்னால் எப்போதும் விட்டுக் கொடுத்துக் கொண்டே இருக்க முடியாது. மனான நிலை ஏற்படவில்லை. அதனால் நான் விலகினேன்” என்று கரு பழனியப்பன் கூறி இருக்கிறார். தொடர்ந்து பேசுகையில், “நான் நிகழ்ச்சியில் இருந்து விலகினாலும் இப்போதும் தமிழா தமிழா நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

நிகழ்ச்சி நல்லபடியாக தான் போய்க்கொண்டிருக்கிறது. இப்போதைய ஜெனரேஷன் என்ன செய்கிறார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நம்முடைய அறிவு வளர்ந்து கொண்டே இருக்கும். அதனாலேயே நான் சமூக வலைத்தளத்தை முழுமையாக பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று அந்த பேட்டியில் இயக்குனர் கரு. பழனியப்பன் பேசியிருக்கிறார்.