இயக்குனர் ஹரி இயக்கத்தில், அவருடைய மைத்துனர் அருண் விஜய், நடிகை பிரியா பவானி சங்கர், யோகி பாபு, சமுத்திரக்கனி, ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கும் படம் யானை, இந்த படத்தில் முதலில் அருவா என தலைப்பிட்டு அதில் நடிகர் சூர்யா நடிப்பதாக இருந்தது, ஆனால் ஹரி உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த படத்தில் இருந்து வெளியேறினார் நடிகர் சூர்யா, இதன் பின்பு மைத்துனர் அருண் விஜய்யை வைத்து இந்த படத்தை தொடங்கினர் ஹரி.
அருவா என்கிற படத்தின் தலைப்பை யானை என மாற்றினார் ஹரி. வழக்கம் போல் உள்ள ஹரி படத்தில் இடம்பெறும் சண்டை காட்சிகள், காட்சிக்கு தகுந்தார் போன்று நான்கு பாடல், பரபரப்பான காட்சி அமைப்புகள் என இந்த படத்தை பார்ப்பவர்கள் இது ஹரி படம் தான் என்பதில் குழப்பம் இருக்காது. வேங்கை படத்தில் அப்பா ராஜ்கிரணை காப்பற்ற அவருடைய மகன் தனுஷ் போராடி வரும் பரபரப்பு காட்சிகள் இடம் பெற்றிருக்கும்.
அதே போன்று யானை படத்தில் அப்பா ராஜேஷை காப்பாற்ற மகன் அருண் விஜய் காட்சிகள் அமைத்துள்ளது, ராஜ்கிரண் நடிக்க வேண்டிய காட்சிகளில் ராஜேஷ் நடித்துள்ளார், இருந்தும் ராஜேஷ் இடம் பெரும் காட்சிகளில் அவருடைய நடிப்பு அபாரம் என்றே சொல்லலாம். பொதுவாக இதற்கும் முன்பு யோகி பாபு நடித்த படங்களில் சில நிமிடங்கள் மட்டுமே படத்தில் இடம்பெறுவார், ஆனால் யானை படத்தில் அருண் விஜய் உடன் படம் தொடங்கம் முதல் இறுதி வரை பயணிக்கிறார் யோகிபாபு.
பொதுவாக ஹரி படங்களில், வேங்கையில் தமன்னாவை விட்டு தனுஷ் பிரிவார், தாமிரபரணியில் பானுவை விட்டு விஷால் பிரிவார், தமிழ் படத்தில் சிம்ரனை விட்டு பிரசாந்த் பிரிவார், ஆறு படத்தில் திரிஷாவை விட்டு சூர்யா பிரிவார், ஐயா படத்தில் நயன்தாராவை விட்டு சரத்குமார் பிரிவது போன்று காட்சி இருக்கும் அதே போன்று யானை படத்தில் பிரியா பவானி சங்கரை விட்டு அருண் விஜய் பிரிகிறார், ஆனால் வழக்கம் போல் ஹரி படத்தில் பிரிந்தவர்கள் உடனே இணைவது போன்று இந்த படத்திலும் இணைந்து விடுகின்றனர்.
படத்தில் அருண் விஜய் ஒரு கிருஸ்துவ பெண்ணை காதலிக்கிறார், அவருடைய அண்ணன் முஸ்லிம் பெண்ணை காதலிக்கிறார் இதனால் பிரச்சனை ஏற்படுகிறது, இந்த காட்சிகள் அனைத்தும் ஏற்கனவே ஹரி இயக்கத்தில் வெளியான கோவில் படம் பார்ப்பது போன்று இருந்தது, கோவில் படத்தில் இந்து, முஸ்லீம், கிறிஸ்டியன் பிரச்சனை இடம்பெற்று இருக்கும், பெரும்பாலன சண்டை காட்சிகளில் இடம் பெற்ற இடங்கள், ஏற்கனவே ஹரி படத்தில் இடம் பெற்றது போன்று இருந்தது.
இந்நிலையில் ஏற்கனவே ஹரி இயக்கத்தில் வெளியான கோவில், வேங்கை, பூஜை போன்ற அவருடைய படங்களில் இருந்து ஒவ்வொரு கட்சியாக காப்பியடித்து ஒரு படத்தை எடுத்துள்ளார் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது, மேலும் அட்லீ போன்று அடுத்தவர் படத்தில் இருந்து காப்பியடிக்காமல் தன்னுடைய படத்தில் இருந்தே ஹரி காப்பியடித்துள்ளது அவருடைய நேர்மையை பாராட்டும் விதத்தில் உள்ளது என்கின்றனர் யானை படத்தை பார்த்தவர்கள்.