பெரும் குழப்பத்தில் ஹெச்.வினோத்… கமல்ஹாசனுக்கு நாள் குறித்த ஹெச்.வினோத்..

0
Follow on Google News

சதுரங்க வேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமான ஹெச் வினோத், முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை கொடுத்து தனக்கான முத்திரையை பதித்து விட்டார். அடுத்து அவருடைய இயக்கத்தில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் இடம்பெற்ற ஆக்சன் காட்சிகள் அனைத்தும் பல அனுபவம் வாய்ந்த இயக்குனர்களையும் முன்னணி நடிகர்களையும் வியந்து பார்க்க வைத்தது.

தன்னுடைய மூன்றாவது படத்திலேயே அஜித்துடன் இணைந்து பணியாற்றிய நடிகர் இயக்குனர் ஹெச்.வினோத். அடுத்தடுத்து அஜித்தை வைத்து தொடர்ந்து மூன்று படங்கள் இயக்கும் வாய்ப்பை பெற்றார். சமீபத்தில் ஹெச். வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு படம் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது. இந்த நிலையில் துணிவு படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் பொழுதே ராஜ்கமல் ஃபிலிம்ல் நடிகர் கமலஹாசனை வைத்து புதிய படம் ஒன்று கமிட் ஆகி இருந்தார் ஹெச் வினோத்.

இதேபோன்று நடிகர் தனுஷிடம் கதை சொல்லி ஒரு புதிய படத்தில் கமிட் செய்துள்ளார் ஹெச்.வினோத்.
இந்த கதையை கேட்ட தனுஷ் நீங்க எப்ப இந்த படப்பிடிப்பை தொடங்கினாலும், மற்ற படத்தை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு உங்களுக்கு நான் கால்ஷீட் கொடுக்க தயார் என்று தனுஷ் தெரிவித்துள்ளார், அந்த அளவுக்கு ஹெச். வினோத் சொன்ன கதையில் ரொம்ப இம்ப்ரஸ் ஆகி உள்ளார் தனுஷ்.

ஆனால் துணிவு படத்தை முடித்துவிட்டு கமல்ஹாசனை வைத்து தான் படம் இயக்குவதாக இருந்த நிலையில், கமல் எந்த ஒரு தகவலும் சொல்லாமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார், அந்த வகையில் பிப்ரவரி மாதம் தொடங்க இருந்த படபிடிப்பு இன்னும் தொடங்கவில்லை, இருந்தாலும் பிப்ரவரி மாதம் இறுதி வரை கமலஹாசனினுக்காக காத்திருக்க முடிவு செய்த ஹெச்.வினோத். அப்படி பிப்ரவரி மாதத்திற்குள் தரப்பிலிருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை என்றால் தனுஷை வைத்து புதிய படத்தை இயக்குவது என்ற முடிவில் இருக்கின்றார்.