இயக்குனர் பாலா இயக்கத்தில் கடைசியாக வெளியான படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து, மேலும் அவருடைய குடும்பத்திலும் பிரச்சினையின் காரணமாக அவருடைய மனைவியை சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்தார். இப்படி சினிமா மற்றும் குடும்ப வாழ்க்கை இரண்டிலும் தோல்வியை தழுவி மிகப்பெரிய விருக்தியில் இருந்த பாலா தன்னுடைய முழு கவனத்தையும் சினிமாவில் செலுத்த தொடங்கியவர், நடிகர் சூர்யாவை வைத்து வணங்கான் படத்தை தொடங்கினார்.
படத்தின் கதை மீனவர்கள் தொடர்பானது என்பதால், கன்னியாகுமரியில் முதல் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த படம் தொடங்கியது முதல் பாலா – சூர்யா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு, ஒரு கட்டத்தில் உச்சக்கட்டம் அடைந்ததை தொடர்ந்து. முதல் கட்ட படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருக்கிய நிலையில், படத்தின் படப்பிடிப்பில் இருந்து பாதியிலே வெளியேறி சென்னை திரும்பினார் சூர்யா.
இதன் பின்பு சூர்யா – பாலா இருவருக்கு ஏற்பட்ட பிரச்சனையை சரி செய்ய தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது. இருந்தும் பாலா பிடிவாதம் பிடிக்க, படத்தின் தயாரிப்பாளர் என்கிற முறையில் ஒரு கட்டத்தில் இறங்கி வந்தார் சூர்யா. இதனை தொடர்ந்து சூர்யா – பாலா இருவருக்கும் இடையில் சுமூக முடிவு எட்டப்பட்ட நிலையில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போனது.
வணங்கான் படத்தின் படப்பிடிப்பு கைவிடப்படுகிறது என இயக்குனர் பாலா மற்றும் சூர்யா இருவரும் அறிவித்தனர். இதனை தொடர்ந்து, அதே கதையில் வேறு ஒரு நடிகரை நடிக்க வைத்து தன்னுடைய சொந்த தயாரிப்பில் மிகக் குறைந்த பட்ஜெட்டில் வணங்கான் படத்தை தயாரிக்க முடிவு செய்து, நடிகர் அருண் விஜய் நடிப்பில், ஏற்கனவே சூர்யாவை வைத்து கன்னியாகுமரியில் படப்பிடிப்பு நடத்திய அதே இடத்தில் வணங்கான் படத்தின் படப்பிடிப்பை நடத்தி வருகிறார் பாலா.
இந்த நிலையில் அருண் விஜய் நடிப்பில் வணங்கான் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு 25 நாட்கள் கன்னியாகுமரி பகுதியில் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஹீரோ மட்டுமே மாற்றம் செய்யப்பட்டுள்ளது மற்றபடி இதற்கு முன்பு சூர்யாவை வைத்து எடுக்கப்பட்ட இடங்களில் அதே காட்சியில் அதே பகுதிகளில் நடிகர் அருண் விஜயை வைத்து 25 நாட்கள் முதல் கட்ட படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார் இயக்குனர் பாலா.
ஆனால் இயக்குனர் பாலாவின் நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லை என்றும் பாலா படப்பிடிப்பு தளத்திற்கு உள்ளே வந்தாலே மற்ற ஆர்டிஸ்ட்கள் அனைவரும் ஒரு வித பயத்துடனையே வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு அருண் விஜய் நடித்த படத்தின் இயக்குனர்களிடம் மிக நட்புடன் பழகு பழகி பழகக் கூடியவர், அந்த வகையில் ஒவ்வொரு காட்சிகளிலும் சில திருத்தங்களை தாமாக முன்வந்து அந்த சம்பந்தப்பட்ட இயக்குனர்களிடம் அருண் விஜய் தெரிவிப்பார்.
ஆனால் வணங்கான் படத்தில் பாலா என்ன சொல்கிறாரோ.? அதை மட்டும் செய்துவிட்டு தனியாக சென்று அமர்ந்து விடுகிறார் அருண் விஜய் என்றும், மேலும் ஒவ்வொரு சார்ட்டுக்கு இடையில் மேக்கப்மேன் மற்றும் உதவியாளர்கள் அருண் விஜய் இடம் நெருங்கினால் கூட அவர்களை வேண்டாம் கிட்ட வராதீர்கள், இயக்குனர் பாலா சொல்லாமல் என்கிட்ட நெருங்க வேண்டாம் என்று உத்தரவு போட்டு விட்டாராம் அருண் விஜய்.
அந்த விதத்தில் பாலா மிக கடுமையாக நடந்து கொண்டாலும் கூட அவருக்கு முழு ஒத்துழைப்பை கொடுத்து முதல் கட்ட படப்பிடிப்பை மூச்சே விடாமல் முடித்துவிட்டு எஸ்கேப் ஆகி திரும்பி உள்ளார் அருண் விஜய். விரைவில் வணங்கான் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.