ரஜினி, விஜய் லெவலுக்கு டீல் பேசிய அட்லீ… அடேகப்பா.. ப்ரோபிட் ஷேர் மட்டும் இத்தனை கோடியா.?

0
Follow on Google News

பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் பெற்ற இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அட்லி, ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அட்லி இயக்கத்தில் வெளியான பல படங்களை காப்பியடித்து எடுக்கப்படும் படம் என்கின்ற ஒரு விமர்சனம் அவர் மீது இருந்தாலும் கூட ஆனால் அவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் கமர்சியலாக தொடர் வெற்றியை பெற்று விடும்.

அட்லி எடுக்கும் அனைத்து படங்களிலும் ஏதாவது ஒரு படத்தின் கதையின் சாயல் இருக்கும், அதே போன்று பல ஆங்கிலப் படத்தில் இடம்பெற்ற காட்சிகளை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் அப்படியே காப்பி அடிக்கக்கூடிய வல்லமை பெற்றவர் அட்லி என்பது பல இடங்களில் நிரூபணம் ஆகி உள்ளது. இந்த நிலையில் அட்லி தற்பொழுது இந்தியில் ஜவான் படத்தை இயக்கி வருகிறார் இந்த படத்திற்கு அட்லி 30 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார்.

அதுபோக இவருக்கு பிராஃபிட் சேரும் வழங்கப்படுகிறது. இந்தப் படத்தை முடித்துவிட்டு அடுத்து விஜய் நடிக்கும் புதிய படத்தில் கமிட்டாகி உள்ள இயக்குனர் அட்லி. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. விஜய் நடிக்கும் புதிய படத்திற்கு அட்லி 50 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளார். இதற்கு சன் பிக்சர்ஸ் தற்பொழுது வாங்கும் 30 கோடி ரூபாய் சம்பளத்தை தருவதாக தெரிவித்துள்ளனர்.

அதற்கு அட்லி நான் தற்பொழுது தான் இயக்கம் ஜவான் படத்தின் பிராஃபிட் ஷேர் மட்டும் தனக்கு 20 கோடி ரூபாய் என்றும் அது போக சம்பளம் 30 கோடி ஆக மொத்தம் 50 கோடி ஒரு படத்தில் கிடைக்கிறது. அப்படியானால் நீங்கள் எனக்கு முப்பது கோடி சம்பளம் கொடுத்து அந்தப் படத்தின் பிராபிட் ஷேரும் எனக்கு கொடுத்து விடுங்கள் என அட்லி கேட்க,

தலைசுற்றிப் போன தயாரிப்பு நிறுவனம் அட்லி கேட்ட சம்பளம் 50 கோடியை தருகிறோம் பிராபிட் சேர் வேண்டாம் என்று அட்லீ பிராஃபிட் சாருக்கு பதில் அட்லீ கேட்ட 50 கோடி சம்பளத்தை தருகிறோம் என்று அட்லீயை 50 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து விஜய் நடிக்கும் புதிய படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.