கீர்த்தி சுரேஷ்காக பல கோடி இழந்த அட்லீ… காஃபி அடித்து சம்பாரித்த பணமெல்லாம் போச்சே..

0
Follow on Google News

விஜய் நடித்த தெறி படத்தில் ஹிந்தி ரீமேக்கில் பேபி ஜான் டிசம்பர் 25-ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இப்படத்தில் நடிகர் வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி, உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தில், அட்லியின் உதவி இயக்குனர்களில் ஒருவரான காலிஸ் என்பவர் இயக்கியயுள்ளார். இந்த படத்தில் விஜய் நடித்த வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்க, இந்த படத்தின் நாயகிகளாக கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்தில் சல்மான் கான் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். ஜாக்கி ஷ்ராஃப் வில்லனாக நடிக்க தமன் இசையமைத்திருந்தார். இந்த படத்துக்கு பெரிய அளவில் ப்ரமோஷன் செய்யப்பட்டாலும் ரிலீஸுக்குப் பிறகு மோசமான விமர்சனங்களையே இந்த படம் பெற்று வருகிறது. அது மட்டும் இல்லாமல் இந்த படம் ரசிகர்களையும் பெரியளவில் தியேட்டர்களுக்குள் இழுக்கவில்லை என சொல்லப்படுகிறது.

புஷ்பா 2′ படத்தின் வசூல் குறையாத சூழலில், ‘பேபி ஜான்’ படத்தின் வசூல் பின்தங்கியுள்ளது. இந்தியில் ‘புஷ்பா 2’ படத்தின் வசூல் குறையாமல் தொடர்ச்சியாக முதல் இடத்திலேயே இருக்கிறது.அங்கு மட்டும் 700 கோடி ரூபாய்க்கு அதிகமாக வசூல் செய்திருக்கிறது. மேலும், உலகளவில் ‘புஷ்பா 2’ படத்தின் வசூலில் 1,700 கோடியை கடந்துவிட்டதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதனிடையே, கிறிஸ்துமஸ் விடுமுறையை கணக்கில் கொண்டு பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான பேபி ஜான்’. ‘புஷ்பா 2’ படத்தின் வரவேற்புக்கு முன்னால் பின்தங்கியிருக்கிறது. முதல் நாளில் ரூ.11.25 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது. இது மூன்றாவது வாரத்தில் இருக்கும் ‘புஷ்பா 2’ படத்தின் அன்றைய தினத்தின் வசூலை விட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ‘பேபி ஜான்’ படத்துக்கும் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. அதுமட்டுமன்றி ‘தெறி’ படத்தில் இருந்த ஈர்ப்பு இப்படத்தில் இல்லை என்று பலரும் தெரிவித்துள்ளனர். வார இறுதி நாட்களில் இதன் வசூல் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு. முதல் நாளில் ரூ. 11 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ள இப்படம் 2வது நாளில் சுத்தமாக குறைந்து ரூ. 3.90 கோடி வரை மட்டுமே வசூலித்துள்ளது.

டிக்கெட் புக்கிங் முதல் வசூல் வரை பேபி ஜான் படத்திற்கு 3வது நாள் முதல் சுத்தமாக குறைந்துள்ளது. இப்படியே போனால் படத்தின் வசூல் நஷ்டத்தில் முடியும் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் அட்லீ உடன் சினிமா துறையில் நெருங்கிய நட்பில் இருப்பவர்களில் விஜய் எப்படியோ அதே போன்று கீர்த்தி சுரேஷ்ம் நெருங்கிய நல்ல நட்பில் இருந்து வருகிறார்.

அந்த வகையில் கீர்த்தி சுரேசை பாலிவூட் ஸ்டாராக கொண்டு வரவேண்டும் என்கிற முயற்சியில் இறங்கிய அட்லீ, கீர்த்தி சுரேஷ் ஹிந்தியில் நடிக்கும் படத்தை தன்னுடைய சொந்த பணத்தை போட்டு தயாரித்தது தான் பேபி ஜான், ஆனால் படம் படு தோல்வி அடைந்து அட்லீக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ள நிலையில், இது மாதிரி அட்லீ 3 படம் தயாரித்தால் போதும், இதுவரை பல திரைப்படங்களில் காப்பியடித்து சம்பாரிச்ச மொத்த பணத்தையும் இழக்க நேரிடும் என பலரும் கருத்து தெரிவித்து வருவது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.