பல படங்களில் கதைகளில் இருந்து சுட்டும், தமிழ் சினிமாவில் மட்டுமில்லை உலக சினிமாவை வரை அதில் வரும் காட்சிகளை சுட்டு படம் எடுத்து மாட்டி கொண்டாலும் கூட சற்றும் கவலைப்படாமல். எப்படி இசையில் ஏழு ஸ்வரங்கள் இருக்கிறதோ அதே மாதிரி தான் கதையிலும் காதல், ஆக்சன், சென்ட்டிமென்ட், காமெடி என சில வகையான கதைகள் தான் உள்ளது. அதில் தான் பயணித்தாக வேண்டும். இதை காப்பி என்று சொல்ல முடியாது.தெரிவிக்கும் அட்லீ
மேலும் நான் இயக்கும் படங்களின் சாயல் எனக்கு பிறகு வரும் இயக்குனர்களின் படங்களில் வெளிப்படலாம். இது யதார்த்தம். அதனால் நான் முந்தைய ஹிட் படங்களை காப்பியடிக்கிறேன் என்று சொல்வதை என்னால் ஏற்க முடியாது என காப்பி அடித்து படம் எடுப்பதை கூட ஏழு ஸ்வரங்களை உதாரணம் காட்டி குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போன்று சமாளித்து விடுவார் அட்லீ.
அட்லீ இன்றைய வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் நடிகர் விஜய். தொடர்ந்து தன்னுடைய நடிப்பில் மூன்று படங்கள் இயக்கும் வாய்ப்பை கொடுத்து மிக பெரிய உயரத்தில் அட்லீ அமர்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் விஜய். அதே போன்று நடிகர் விஜய்க்கு ஜால்ரா போடும் வகையில் பேசி விஜய்யை மட்டுமில்லை, விஜய் ரசிகர்களையும், அட்லீ தளபதி தம்பிப்பா என விஜய் ரசிகர்கள் அட்லீயை தூக்கி வைத்து கொண்டாடும் வகையில் விஜய்க்கு ஜால்ரா போட்டவர் அட்லீ.
அந்த பிகில் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் பேசிய அட்லீ, அண்ணனே சொல்லுவார் டேய் நீ எல்லாருடனும் படம் பண்ண வேண்டும் என்று. எல்லாரோடையும் நான் பட பண்ண வேண்டும் தான் சத்தியமாக எனக்கும் அந்த ஆசை உண்டு. ஆனா என்ன பண்றது இந்தியாவின் சிறந்த டான்சர். சிறந்த நடிகர் அப்படி ஒருவரிடம் நான் பயணிக்கும் பொழுது என்ன யோசித்தாலும் நினைவுக்கு அண்ணன்தான் வராரு.
வேறு யாரும் வரமாட்டேன் என்கிறார்கள் நான் என்ன செய்வது.என மறைமுகமாக அஜித்துக்கு நடனம் ஆட தெரியாது என்று அஜித் ரசிகர்களை சீண்டி விஜய் ரசிகர்களை குளிர்விக்கும் வகையில் பேசிய அட்லீ. நான் தளபதி ரசிகன் தளபதி வெறியன் என்பதை தாண்டி எங்க அண்ணனுக்கு நான் தாண்டா பண்ணுவேன் அப்படிதாண்டா பண்ணுவேன் என்னடா பண்ண முடியும் என அட்லீ பேசியதை பார்த்தவர்களுக்கு காது கிளியும் அளவுக்கு விஜய்க்கு அட்லீ ஜால்ரா அடிப்பது போன்று அமைத்தது.
இந்த நிலையில் தற்பொழுது விஜய் நடிக்கும் லியோ படத்தை முடித்துவிட்டு மீண்டும் விஜய் நடிக்கும் படத்தை அட்லீ இயக்குவதாக பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்த நிலையில், தற்பொழுது ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்குவதால், தான் இப்போது பேன் இயக்குனர் அதனால் தனக்கு 50 கோடி சம்பளம் வேண்டும் தயாரிப்பாளரிடம் உறுதியாக இருந்துள்ளார் அட்லீ, எவ்வளவோ பேசியும் அட்லீ இறங்கி வருவதாக தெரியவில்லை.
இதனை தொடர்ந்து தயாரிப்பு தரப்பு விஜய்யிடம் முறையிட்டதை தொடர்ந்து, ஏற்கனவே அட்லீ ஹிந்தி சினிமா பக்கம் போன பின்பு அவருடைய நடவடிக்கைகளில் பல மாற்றங்களை கண்டு அதிருப்தியில் இருந்த விஜய் பரவாயில்லை வேறு இயக்குனரை பார்க்கலாம் என தெரிவிக்க. விஜய் படத்தில் இருந்து அட்லீ வெளியேற்ற பட்டார். ஒரு படத்தில் கமிட்டாகி பின்பு வெளியேற்றப்பட்டதை அவமானமாக கருதும் அட்லீ.
விஜய் நடிப்பில் லியோ படம் வெளியாக இருக்கும் அதே காலகட்டத்தில் ஜாவான் படத்தை வெளியிட்டு நேரடியா மோதுவதற்கு தயாராகிவிட்டாராம். இது வளர்த்த கிடா மார்பில் பாய்ந்த கதையாக விஜய்க்கு நேர்ந்துள்ளது என்கிற விமர்சனமும் எழுந்துள்ளது . மேலும் விஜய் பட வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் என்ன.? இனி நோ தமிழ் சினிமா, ஒன்லி பாலிவூட் சினிமா தான் என மும்பையில் பல முன்னனி ஹிந்தி நடிகர்களை சந்தித்து கதை தெரிவித்து வருகிறாராம் அட்லீ.