பழைய படத்தின் கதைகளை காப்பியடித்து படம் எடுப்பதில் பெயர் பெற்றவர் இயக்குனர் அட்லீ. பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் உதவி இயக்குனராக பணியாற்றிய அட்லீ முதல் படமான ராஜா ராணி படம், பல வருடங்களுக்கு முன்பு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான மௌனராகம் படத்தின் கதை என்கிற விமர்சனம் எழுந்தது. தொடர்ந்து அவர் இயக்கத்தில் வெளியான, தெறி, மெர்சல், பிகில் போன்ற அனைத்தும் தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு வெளியான படத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டது என்கிற விமர்சனம் உண்டு.
முதல் இரண்டு படங்களில் பழைய படத்தின் கதையை மட்டும் காப்பியடித்து வந்த அட்லீ இயக்கத்தில் கடைசியாக வெளியான மெர்சல் மற்றும் பிகில் படத்தில் பல காட்சிகள் ஹாலிவூட் படத்தில் இருந்து காப்பியடித்த சம்பவமும் அரங்கேறியது. அடுத்த படத்தின் கதை மற்றும் காட்சிகளை காப்பியடித்து மாட்டி கொண்டாலும், சிறிதும் வெட்கப்படாமல் தன்னுடைய படத்தின் கதைக்காகவும், அதில் இடம்பெற்ற கட்சிகளுக்காகவும், பல நாட்கள் இரவு பகல் பாராமல் கஷ்டப்பட்டது போன்று மேடைகளில் பேசுவார் அட்லீ.
அட்லீ மற்ற படங்களில் கதை திருடுவது குறித்து எழுந்த சர்ச்சைக்கு ஒரு முறை பதிலளித்தவர் . சினிமாவில் 7 ஸ்வரங்கள் தான் உள்ளது, அதனால் இந்த ஏழு ஸ்வரங்கள் சுற்றி சுற்றி மீண்டும் மீண்டும் வரும், அந்த ஏழு ஸ்வரங்களை தாண்டி எதுவும் செய்ய முடியாது என கதையை காப்பியடிப்பதை கூச்சமே இல்லாமல் நியாய படுத்தி பேசி இருந்தார் அட்லீ.
அட்லி பிற படங்களில் கதையை திருடி இருந்தாலும் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப காட்சிகளை வடிவமைத்து தன்னுடைய திறமையை நிரூபிக்க கூடியவர் அட்லீ. இந்நிலையில் அட்லீ இயக்கத்தில் முதல் இரண்டு படம் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய லாபத்தை பெற்று தந்தது. விஜய் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான மெர்சல் மற்றும் பிகில் ஆகிய இரண்டு படங்களுமே வியாபார ரீதியில் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் இதன் பின்பு பெரிய பட்ஜெட் படம் எடுப்பதை கைவிட்டு விட்டனர்.
அந்த அளவுக்கு தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய சேதாரத்தை ஏற்படுத்தும் வகையில், மெர்சல், பிகில் போன்ற படங்களில் நிர்ணயிக்கப்பட்ட பட்ஜெட்டை மீறி, பணத்தை வீண் விரையம் செய்தது தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியவர் அட்லீ. இந்நிலையில் தற்பொழுது ஷாருக்கான் நடிக்கும் ஜாவான் படத்தை இயக்கி வருகிறார் அட்லீ, இந்த படத்திலும் பட்ஜெட்டை மீறி அட்லீ செலவு செய்து வருவதால் ஷாருக்கான் கடும் அப்செட்டில் உள்ளார்.
மேலும் தமிழ் சினிமாவில் காப்பியடித்து படம் எடுத்து வந்த அட்லீ அதே பார்முலாவை ஹிந்தி சினிமாவிலும் பின்பற்ற தொடங்கியுள்ளார். தற்போது பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் சுமார் 35 வருடங்களுக்கு முன்பு வெளியான ஒரு கைதியின் டைரி படத்தின் கதையை சுட்டு, அதில் சில மாற்றங்களை செய்து தற்பொழுது ஷாருகான் நடிப்பில் ஜவான் படத்தை அட்லீ இயக்கி வருவதாக ஒரு தகவல் பரவி வரும் நிலையில், அது எந்த அளவுக்கு உண்மை என்பது அட்லீ இயக்கி வரும் ஜவான் படம் வெளியான பின்பு தான் தெரியவரும்.
மேலும் அட்லீ தற்பொழுது இயக்கி வரும் ஜவான் படத்தின் கதை ஒரு கைதியின் டைரி படத்தில் இருந்து காப்பி அடிக்கவில்லை என்றாலும் கூட, நிச்சயம் வேறு எதாவது ஒரு படத்தின் கதையை தான் சுட்டு காப்பி அடித்து படம் எடுத்து இருப்பார், அது எந்த படம் என்பது ஜவான் படம் வெளியான பின்பு அம்பலப்படும். இந்நிலையில் ஜவான் படத்தின் கதை டிஸ்கேஷன் செய்வதற்கு மட்டும்,சுமார் 4 கோடி வரை இயக்குனர் அட்லீக்கு செலவு செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் தயாரிப்பு தரப்பில் இருந்தும் அட்லீ மீது செம்ம கடுப்பில் இருந்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் காப்பி அடித்து கேலி கிண்டலுக்கு உள்ளான அட்லீ, இந்தி சினிமாவுக்கு சென்றும் அதே பார்முலாவை பின்பற்றியுள்ளது தெரியவந்துள்ளது. இந்த தகவல் அறிந்த தயாரிப்பு நிறுவனம் காப்பியடித்து படம் எடுக்க எதற்கு கதை டிஸ்கஷன் என்று 4 கோடி வரை செலவு செய்ய வேண்டும் என இயக்குனர் அட்லீ மீது செம்ம டென்ஷனில் இருப்பதாக கூறப்படுகிறது.