நடிகர் விஜய்யின் பயணம் அரசியலை நோக்கி தான் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்பதில், உறுதியான நிலைப்பாட்டை விஜய் எடுத்துள்ளதால், இன்றைய அரசியல் தேவைக்கு விஜய்க்கு ஒரு அரசியல் சார்ந்த ஒரு திரைப்படத்தை கொடுக்க வேண்டும் என்கின்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் தன்னுடைய ஒவ்வொரு நடவடிக்கைகளும் அது எப்படி தனக்கான வாக்குகளாக மாற்றுகிறது என்பதை பொறுத்து நடிகர் விஜயின் சமீப கால நடவடிக்கைகள் இருந்து வருகிறது.
அந்த வகையில் தான் நடிக்கும் படத்தில் இடம்பெறும் காட்சிகள், தான் பேசும் வசனங்கள் அது மக்கள் மத்தியில் எதிரொளித்து, அது தனக்கான வாக்கு வங்கியாக உருவாக வேண்டும் என்பதற்காக இன்றைய காலகட்டத்தில் ஒரு அரசியல் சார்ந்த படத்தில் நடிக்கும் முடிவுக்கு வந்துள்ளார் நடிகர் விஜய். அந்த வகையில் எந்த ஒரு இயக்குனரும் செய்ய துணியாத ஒரு செயலை மாநாடு படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு துணித்து செய்து காட்டியவர்.
எங்கே நமக்கு எதாவது சிக்கல் ஏற்பட்டு விடுமோ என்கிற அச்சத்தில் பல இயக்குனர்கள் அரசியல் சார்ந்த கதைகளை தவிர்த்து வரும் இன்றைய சினிமாவில், மாநாடு படத்தின் மூலம் தன்னுடைய துணிச்சலை வெளிப்படுத்தி இருந்தார் வெங்கட்பிரபு. மாநாடு படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு காட்சிகளும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டதற்கு முக்கிய காரணம் அந்தப் படத்தில் இடம்பெற்ற வசனங்களை எழுதிய லியாகத் அலிகான் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜயகாந்த அரசியலுக்கு அவர் நடித்த படத்தில் இடம்பெற்ற வசனங்கள் முக்கிய காரணமாக அமைத்தது, அந்த வகையில் விஜய்காந்த் நடித்த பல படங்களுக்கு வசனம் எழுதியவர் லியாகத் அலிகான் என்பது குறிப்பிடதக்கது. அந்த வகையில் மீண்டும் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் அரசியல் சார்ந்த புதிய படத்திற்கும் லியாகத் அலிகான் தான் வசனம் எழுத இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் விஜய் லியோ படத்தை முடித்துவிட்டு அட்லியுடன் இணைந்து மீண்டும் ஒரு படம் பண்ணுவதாக தான் இருந்தது. அதற்காக அட்லீயிடம் கதை கேட்ட விஜய், அந்த கதையின் முழு ஸ்கிரிப்ட்டை தயார் செய்யவும் அட்லீயிடம் வலியுறுத்தி இருந்தார்.அட்லீயும் ஜவான் படத்தை முடித்துவிட்டு தயார் செய்துவிடுகிறேன் அண்ணா என தெரிவிக்க, அட்லீ – விஜய் கூட்டணி உறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் ஏற்கனவே விஜய் – அட்லீ கூட்டணியில் பிகில் படத்தை தயாரித்து பெரும் நஷ்டத்தை சந்தித்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு அப்போது மீண்டும் உங்கள் தயாரிப்பில் ஒரு படம் நடித்து தருகிறேன் என உறுதியளித்து இருந்தார் விஜய். இந்த நிலையில் மீண்டும் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் படத்தை ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு கொடுக்க முன் வந்துள்ளார் விஜய்.
ஆனால் ஏற்கனவே பிகில் படத்தில் எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு அட்லீ தான் காரணம், அதனால் மீண்டும் அட்லீ வேண்டாம் என விஜய்யிடம் ஏஜிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இருந்தும் முறை அட்லீயை அழைத்து கதை கேட்டு பாருங்க என அட்லீக்காக விஜய் சிபாரிசு செய்ய, ஏஜிஎஸ் நிறுவனம் வேண்டவே வேண்டாம், என அட்லீயிடம் கதை கேட்க கூட அவர்கள் விரும்பவில்லை.
இதன் பின்பு ஏற்கனவே வெங்கட் பிரபுவிடம் ஒரு கதை கேட்டு வைத்துள்ளோம் அந்த கதையை நீங்களும் கேளுங்கள் என வெங்கட் பிரபுவை விஜய்யிடம் அனுப்பி வைத்துள்ளது ஏஜிஎஸ் நிறுவனம். இதன் பின்பு வெங்கட் பிரபுவிடம் விஜய் கதை கேட்க, தன்னுடைய அரசியல் வருகைக்கு ஏற்ப படம் இது தான் என உடனே கதையை ஓகே செய்துள்ளார் விஜய். இப்படி தான் அட்லீ விஜய் படத்தில் இருந்து வெளியேற்ற படுவதர்க்கும், வெங்கட்பிரபு என்ட்ரி கொடுக்கவும் காரணம் என கூறப்படுகிறது.