கர்ணன் படத்தின் முக்கிய கதாபாத்திரம் திடீர் மரணம்: சோகத்தில் படக்குழு

0
Follow on Google News

இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கிய ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ ஆகிய இரண்டு படங்களும் வித்தியாசமான கதைக்களத்தால் ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்டது. கதைக்களம் மட்டுமின்றி கதாபாத்திரங்களையும் வித்தியாசமாக காட்டுவதில் மாரிசெல்வராஜ் தனித்துவமானவர்.

இவர் இயக்கிய இரண்டு படங்களிலுமே விலங்குகளையும் ஒரு கதாபாத்திரமாக, அதையும் ஒரு பேசும்பொருளாக உருவாக்கியிருப்பார். ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் கருப்பி என்ற நாயை ஒரு கதாபாத்திரமாக உருவாக்கி, அதற்கும் நாயகனுக்கும் உண்டான உறவை மிகவும் நேர்த்தியாக காட்டியிருப்பார்.

அதேபோல், ‘கர்ணன்’ படத்தில் கழுதை, குதிரை இரண்டையும் கதையின் ஓட்டத்திற்கு தகந்தாற்போல் அழகாக காட்சிப்படுத்தியிருப்பார். குறிப்பாக, இறுதிக்கட்டத்தில் தனுஷ் குதிரையில் ஏறிவரும் காட்சியை ரசிகர்கள் கொண்டாடியிருப்பார்கள். இந்த நிலையில் ‘கர்ணன்’ படத்தில் நடித்த அந்த ‘அலெக்ஸ்’ என்ற குதிரை இறந்துவிட்டதாக மாரி செல்வராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.