தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் பெற்ற இயக்குனர் சங்கர், தன்னுடைய பெரும்பாலான படங்களில் சமூக அக்கறையை தன்னுடைய கதை மூலம் வெளிப்படுத்தி இருப்பார். இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான முதல் படம் ஜெண்டில்மேன். இந்த படத்தில் லஞ்சம், ஊழலால் தகுதி இருந்தும் கல்வி மறுக்கப்பட்டுவதை கோபமாக சங்கர் ஜெட்டில்மேன் படத்தில் வெளிப்படுத்தி இருப்பதை பார்க்க முடியும்.
இந்தியாவிற்கு பின்னால் சுதந்திர வாங்கிய நாடுகள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தும், எல்லா வளமும் இந்தியாவில் இருந்து வளர்ச்சி அடையாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் இந்தியாவில் புற்று நோய் போன்று பரவி கிடக்கும் லஞ்சம் தான், ஒரு குழந்தை பிறந்து பிறப்பு சான்றிதழ் பெறுவதில் இருந்து, ஒருவர் இறந்த பின்பு இறப்பு சான்றிதழ் வாங்கும் வரை எதெற்கெடுத்தால் லஞ்சம், லஞ்சம் என சமூக அக்கறையுடன் உச்சக்கட்ட கோபத்தை இந்தியன் படத்தில் வெளிப்படுத்தி இருப்பார் சங்கர்.
பிற நாடுகளில் கடமையை தவறுவதற்கு தான் லஞ்சம், ஆனால் இந்தியாவில் கடமையை செய்வதற்கே லஞ்சம். போன்ற சங்கர் படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு வசனமும் சமூக அக்கறையுடன் இருக்கும். சங்கர் இயக்கத்தில் 1996ம் ஆண்டு இந்தியன் படம் வெளியான பின்பு இயக்குனர் சங்கர் படம் என்றாலே சமூகம் அக்கறை கொண்ட தேசத்தின் வளர்ச்சிக்கான படமாக இருக்கும் என்கிற பார்வை மக்கள் மத்தியில் ஏற்பட்டது.
அந்த வகையில் ஒரு முதல்வர் எவ்வாறு செயல்பட வேண்டும் என சங்கர் இயக்கத்தில் வெளியான முதல்வன் படம், அப்போதைய திமுக ஆட்சியில் வெளியாகி, ஆளும் திமுக தரப்பில் இருந்து கடும் எதிர்வினைகளை முதல்வர் படம் சந்திக்க நேரிட்டது, இருந்தும் மக்களின் பேராதரவுடன் திரையரங்கில் மிக பெரிய ஹிட் அடித்து சாதனை படைத்தது முதல்வன் திடரைப்படம்,
இப்படி,ஜெட்டில் மேன், இந்தியன், முதல்வன், அந்நியன், சிவாஜி,என சமூக அக்கறையுடன் படம் எடுத்து வந்த இயக்குனர் சங்கர் சிவாஜி படத்திற்கு பின்பு, அவருடைய படத்தில் சமூக சார்ந்த சாயல் குறைய தொடங்கியது. இந்நிலையில் 1996ல் வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை தற்பொழுது சங்கர் இயக்கி வருகிறார், இந்த படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார், லைக்கா மற்றும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட்ஸ் மூவிஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார்கள்.
இந்த படத்தின் கதை பற்றி சில ஸ்வாரசியமான தகவல் வெளியாகியுள்ளது, இதற்கு முன்பு சங்கர் எடுத்த திரைப்படங்களில் இந்தியா ஏன் வளரவில்லை என்கிற தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தி இருப்பார்,ஆனால் தற்பொழுது சங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 படத்தின் கதையில் இந்தியா வளர்ந்துள்ளது பற்றியும், மேலும் கதையில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை குறித்த முக்கியத்துவம் கதையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியாவை பெருமை படுத்தும் விதத்தில் சங்கர் இயக்கும் இந்தியன் 2 படம் கதை இருக்கும் என்கிற தகவல் வெளியாகியுள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் பணத்தில் பிரதமர் மோடியை, குறிப்பாக மத்திய பாஜக அரசை புகழ்வது போன்று சங்கர் படம் எடுப்பதற்கு உதயநிதி எப்படி அனுமதிப்பார் என்கிற குழப்பமும் சினிமா வட்டாரத்தில் நீடித்து வரும் நிலையில்,
இந்த படம் லைக்கா தயாரிப்பில் தொடங்கப்பட்டு படப்பிடிப்பு தொடங்கிய பாதியில் தான் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் உள்ளே வந்தது, அதனால் முன்பே கதையில் எந்த ஒரு மாற்றமும் செய்ய மாட்டேன் என உதயநிதியிடம் சங்கர் தெரிவித்திருப்பார் என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் இந்த படத்தை அரசியல் ரீதியாக அணுகாமல், வியாபார ரீதியில் உதயநிதி அணுகியிருக்கலாம், அதனால் இயக்குனர் சங்கர் கதை விவகாரத்தில் உதயநிதி தலையிடுவதை தவிர்த்து இருப்பார் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.