ஏழு ஆண்டுகளில் ஆறு முறை ட்ரான்சர் …. கடும் மனஉளைச்சல்.. டிஜஜி விஜயகுமார் பற்றிய தகவல்..

0
Follow on Google News

கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. தேனி மாவட்டம் அணைக்கரைப்பட்டியை சேர்ந்த டிஜஜி விஜயகுமார் அப்பா செல்லையா கிராம நிர்வாக அதிகாரி, அம்மா ராஜாத்தி, பள்ளி ஆசிரியை. ப்ளஸ் டூ வரை தமிழ் வழிக் கல்வியில் படித்த விஜயகுமாரை, டாக்டர் அல்லது இஞ்சினியராக ஆக்கி பார்க்க அவர்களின் பெற்றோர்களுக்கு ஆசை.சாதாரண கடைநிலை ஊழியரான அப்பாவைப் பார்த்துப் பார்த்தே வளர்ந்த விஜயகுமாருக்கு, மாவட்ட அளவில் அதிகாரம் படைத்த ஓர் அரசு அதிகாரி ஆகணும்னு என்கிற ஆசை அவர் மனதில் ஆழமாக பதிந்தது.

போடி கலவரம், தேவாரம் கலவரம், கஞ்சா விவசாயம்னு அவர் பகுதியில் எல்லாப் பக்கமும் க்ரைம்தான். போலீஸ் அதிகாரியானால் நம்மால் முடிஞ்ச உதவியை மக்களுக்குச் செய்யலாம் என ‘மாவட்ட அளவிலான போலீஸ் அதிகாரி என்கிற ஆசைகளையும் பூர்த்திசெய்வது ஐ.பி.எஸ்., பதவி மட்டும்தான் என்பதை உணர்ந்து அதை நோக்கி பயணிக்க தொடங்கினார் விஜயகுமார்.

கல்லூரிப் படிப்பு முடிஞ்சதும் சரியான வேலை எதுவும் அவருக்கு அமையவில்லை. சென்னையில் தங்கி சிவில் சர்வீஸ் பரீட்சைகளுக்குப் படிக்கிற அளவுக்கு வசதியும் இல்லை. ஏதாவது வேலையில் சேர்ந்து சின்னதா சம்பாதிச்சுட்டே படிக்கலாம் என முடிவு செய்து ஆயிரம் ரூபா சம்பளத்துக்கு ஜெராக்ஸ் எடுக்கிற வேலையில் சேர்ந்துள்ளார் விஜயகுமார்.

ஆனால் 12 மணி நேர வேலைப் பளுவுக்குப் பிறகு அவரால் படிப்பதற்கு நேரம் கிடைக்கவில்லை. இதன் பின்பு அரசு வேலையில் இணைந்து, படிக்கலாம் என முடிவு செய்த விஜயகுமார். 1999-ல் குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பித்து,தோல்வி அடைந்துள்ளார், அதன் பின்பு குரூப்-2 தேர்வுக்கும் விண்ணப்பித்து சுமார் ஆறு மாசம் தீவிரமாப் படித்து 2000-ஆண்டு இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையில் ஆடிட் இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்துள்ளார் விஜயகுமார்.

அதன் பின்பு குரூப்-1 தேர்வும் எழுதிய விஜயகுமார் 2002ம் ஆண்டு தேர்ச்சி பெற்று டி.எஸ்.பி.யாகி உள்ளார். தொடர்ந்து சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்த விஜயகுமார், ஆறு தடவை முயற்சி செய்து, நான்கு முறை மெயின் தேர்வு வரையிலும், மூன்று முறை நேர்முகத் தேர்வு வரையும் சென்று, வாய்ப்பை நழுவ விட்டார் விஜயகுமார்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் முறை தேர்வு எழுத முடியும் என்பதால், கடைசி வாய்ப்பான ஏழாவது முறை தேர்வு எழுதி வெற்றி பெற்றார் விஜயகுமார். தேர்வு எழுதும் காலத்தில் டி.எஸ்.பி-யாக பணிபுரிந்த ஏழு ஆண்டுகளில் ஈரோடு, திருவள்ளூர், சி.பி.சி.ஐ.டி., சென்னை கமிஷனர் அலுவலகம், ஆவடி என ஆறு முறை டிரான்ஸ்ஃபர் செய்யப்ட்டுள்ளார் விஜயகுமார், இதனால் கடும் மனஉளைச்சலுக்கு தான் அப்போது ஆளானதாக இதற்க்கு முன்பு விஜயகுமார் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

டி.எஸ்.பி-யாக பணியாற்றி பொது இன்டர்வியூ போகணும்… மெயின் எக்ஸாமுக்குப் படிக்கணும்… ஒரு மாசம் லீவு வேணும்’னு கேட்டால், உடனே ஒரு டிரான்ஸ்ஃபர் மட்டுமே விஜயகுமாருக்கு பரிசாகக் கிடைத்துள்ளது, வேறு எந்த வேலைக்கும் செல்லாமல் முழு நேரமும் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு மட்டுமே விஜயகுமார் முயற்சி செய்திருந்தால் முதல் முயற்சியிலே வெற்றி பெற்று இருப்பார்.

சிவில் சர்வீஸில் தேர்ச்சி பெற்று ஐ.பி.எஸ்., பணி உறுதியானாலும் டி.எஸ்.பி., பணியில் இருந்து உடனடியாக விஜயகுமார் விலகவில்லை. தமிழக முதல்வரிடம் சிறப்பு அனுமதி பெற்று, ஓர் ஆண்டு விடுமுறையில் தான் பயிற்சிக்குச் சென்றுள்ளார்.. ஒரு வேளை பயிற்சி முடிந்த பிறகு, வேறு மாநிலத்தில் பணி அமர்த்தப்பட்டால், ‘ஐ.பி.எஸ். வேண்டாம்’ என தெரிவித்து விட்டு தொடர்ந்து தமிழகத்திலேயே டி.எஸ்.பி. ஆகப் பணிபுரியலாம் என்கிற திட்டத்தில் தான் விஜயகுமார் இருந்துள்ளார்.

ஆனால் அவருக்கு தொடர்ந்து காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளராக பணியாற்றியாற்றும் வாய்ப்பு கிடைத்து தமிழகத்தில் தொடர்ந்து பணியாற்றி வந்த கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது காவல்த்துறையினர் மத்தியில் மிக பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.