கடந்த மார்ச் மாதம் தொடங்கிய 2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி இந்த சீசன் உடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு சீசனில் சென்னை அணியின் கேப்டனாக ருத்ராஜ் செயல்பட்டு வரும் நிலையில், தோனி விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் செய்து வருகிறார்.
தமிழக மக்களால் தல என்று அழைக்கப்படும் தோனி, இதுவரை சென்னை அணிக்கு ஐந்து ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் கேப்டன் பதவியில் இருந்து விலகிய தோனி, ருத்ராஜை சிஎஸ்கே வின் கேப்டனாக கொண்டு வந்தார். இருப்பினும் சென்னை அணியை பொருத்தவரை தோனியும் அணியின் பயிற்சியாளர் பிளமிங்கும் தான் இறுதி முடிவை எடுப்பார்கள்.
குறிப்பாக தோனி தான் அனைத்து விவகாரங்களிலும் முடிவுகளை எடுப்பார். அந்த அளவிற்கு சென்னை அணி நிர்வாகத்தில் தோனிக்கு மதிப்பும் மரியாதையும் வழங்கப்படுகிறது. விரைவில் தோனி ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சச்சின் டெண்டுல்கர், கௌதம் கம்பிரை போலவே தோனியும் சென்னை அணியின் ஆலோசகராக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
ஆனால், ஓய்வுக்குப் பின் தோனி சென்னை அணியின் முக்கிய பதவிக்கு வரப்போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. சென்னை அணியின் சிஇஓஆக செயல்பட்டு வருபவர் காசி விஸ்வநாதன் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. கூடிய விரைவில் சென்னை அணியின் சிஇஓ ஆக தோனியை நியமிக்க சென்னை அணி நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக பேசப்படுகிறது.
அவ்வாறு சென்னை அணியின் சிஇஓவாக தோனி பதவியேற்றால், ஐபிஎல் போட்டியில் வீரர்களை எடுப்பதற்கான ஏலம் தொடங்கி, அனைத்து செயல்பாடுகளிலும் தோணி முடிவெடுக்க முடியும்.
இத்தனை நாட்களாக கிரவுண்டில் இறங்கி ரசிகர்களை உற்சாகமூட்டி வந்த தோனி, ஓய்வுக்கு பின்னரும் சென்னை அணியுடன் கெத்தாக பயணிப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அதே நேரத்தில் மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது. சிஎஸ்கே அணியை தோனி விலைக்கு வாங்க இருப்பதாகவும், இது குறித்து சென்னை அணியின் நிர்வாகத்திடம் தோனி சென்னை அணியை வாங்குது குறித்து விலை பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது, ஆனால் எத்தனை கோடி கொடுத்தாலும் சிஎஸ்கே அணியை விற்பனை செய்ய மாட்டோம் என்பதில் தங்கள் நிலைப்பாட்டை மிக தெளிவாக தற்போது உள்ள சிஎஸ்கே நிர்வாகம் தோனியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும் எப்படி சிஎஸ்கே அணியை எத்தனை கோடி கொடுத்தாலும் விலைக்கு விற்க மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறார்த்தோ, அதே போன்று தோனி விளையாட்டில் ஓய்வு பெற்றாலும் அவரை சிஎஸ்கே அணியில் இருந்து ஓய்வு பெற விடமாட்டோம். அந்த வகையில் சென்னை அணியின் சிஇஓஆக டோனியை நியமித்து அந்த அணியின் ஓனருக்கு என்ன அதிகாரம் உள்ளதோ அதே அதிகாரத்தை தோனிக்கு சென்னை அணியின் உரிமையாளர் வழக்கு உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.