கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் படம் ‘மகான்’. மேலும், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்த தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
ஆரம்பத்தில் இப்படத்தில் விக்ரம் லுக்கை மட்டும் பர்ஸ்ட் லுக் போஸ்டராக வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய படக்குழு, சமீபத்தில் இப்படத்தில் துருவ் விக்ரமின் லுக்கையும் பர்ஸ்ட் லுக் போஸ்டராக வெளியிட்டு இணையதளத்தை பரபரப்பாக்கியது. இந்த போஸ்டரில் மூலம் விக்ரமுக்கு மகனாக தாதா என்ற கதாபாத்திரத்தில் துருவ் விக்ரம் நடிப்பதும் உறுதியானது.
இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில், சூறையாட்டம் என்று தொடங்கும் அந்த பாடலை வருகிற செப்டம்பர் 22-ந் தேதி வெளியிடப்போவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். சோனி மியூசிக்கின் அதிகாரப்பூர்வ யூடியுப் தளத்தில் இந்த சிங்கிள் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளது.
‘ஆதித்யா வர்மா’ படத்திற்கு பிறகு துருவ் விக்ரம் நடித்து வரும் படம், விக்ரமும், துருவ் விக்ரமும் இணைந்து நடிக்கும் படம் என பல வெற்றிப்படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படம் என பல சக்சஸ் விஷயங்களை உள்ளடக்கிய படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு இப்போதே நிறைய எதிர்பார்ப்புகள் எழத் தொடங்கியுள்ளது. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் லலித்குமார் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.