கோடி கோடியாக வாங்கும் நடிகர்களுக்கு தரமான சவுக்கடி கொடுத்த கிரிக்கெட் வீரர் நடராஜன்..

0
Follow on Google News

சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் சாதாரன குடும்பத்தில் பிறந்த கிரிக்கெட் விளையாட்டில் மீது இருந்த ஆர்வம், உள்ளூர் கிரிக்கெட் விளையாட்டில் பங்கேற்று தன்னுடைய திறமையை வளர்த்து கொண்ட நடராஜன், தன்னுடைய கடுமையான முயற்சியில், பல்வேறு போராட்ட்டங்களுக்கு மத்தியில், கிரிக்கெட் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்கிற வைராக்கியம் நடராஜனை டிவிசன் கிரிக்கெட் பிறகு டி.என்.பிஎல் என கொண்டு சேர்த்தது.

இந்த நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா சென்ற இந்திய கிரிக்கெட் அணியில் வலை பயிற்சி பந்துவீச்சாளராக இடம்பெற்று இருந்தார் நடராஜன், ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் ஒருவர் காயம் காரணமாக விலகியதைத் தொடர்ந்து, யாரை அவருக்கு பதிலாக விளையாட வைப்பது என்கிற ஆலோசனையில், வலை பயிற்சி பந்துவீச்சாளராக இடம்பெற்று இருந்தார் நடராஜனை இறக்கிவிட முடிவு செய்யப்பட்டது.

ஆஸ்திரேலியா நடத்த டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அணைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணியில் இடம்பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நடராஜனை உலகம் உற்று பார்க்க தொடங்கியது. நடராஜன் வீசிய ஓவ்வொரு பந்தும் உலக கிரிக்கெட் சாம்பியன் கவனத்தை ஈர்த்தது மட்டுமில்லாமல், ஒவ்வொரு தமிழனும் நடராஜனை கொண்டாட தொடங்கினார்கள்.

மேலும் ஐபிஎல் போட்டியில் போட்டி போட்டு கொண்டு நடராஜனை ஒப்பந்தம் செய்யப்பட்டார், இதனால் பல கோடி ஐபிஎல் போட்டிகள் மூலம் சம்பளம் வாங்கும் நடராஜன், தான் கடந்து வந்த பாதையை மறக்கவில்லை, கடுமையான போராட்டம், தந்தை நெசவு தொழில், தாய் உணவகம் நடத்தி வந்தவர், அவ்வ போது தாய்க்கு உணவகத்தில் உதவியாகவும், தந்தைக்கு நெசவு தொழில் உதவியாக இருந்து கடுமையாக போராடி தன்னுடைய லட்சியத்தை அடைந்தார் நடராஜன்.

தன்னுடைய கிராமத்தில் கிரிக்கெட் தொடர்பான எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் தான் பட்ட கஷ்டம் போல் பல கிராமத்தில் இருக்கும் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாட்டில் திறமை இருந்தும், அவர்களின் திறமையை வெளிகொண்டு வருவதற்கு வாய்ப்பு கிடைக்காமல், அவர்களில் திறமையை, அவர்களின் கிராமத்தின் உள்ளேயே புதைந்து விடுகிறது,

இந்த நிலையில் நடராஜன் தன்னுடைய சொந்த ஊரான சேலம் சின்னப்பம்பட்டி கிராமத்தில் கிரிக்கெட் அகாடமியை உருவாக்கி தன்னை போல் ஏழ்மையில் உள்ள கிரிக்கெட் விளையாட்டில் திறமை வாய்ந்த இளைஞர்கள் உலக அரங்கில் ஜொலிக்க வேண்டும் என்பதற்காக ஐபிஎல் போட்டியின் மூலம் தனக்கு கிடைக்கும் கோடி கணக்கான பணத்தில், தனது சொந்த கிராமமான சின்னப்பம்பட்டியில் கிரிக்கெட் மைதானம் ஒன்றை உருவாக்கி, அதில கிரிக்கெட் அகாடமியை தொடங்க முயற்சிகளை மேற்கொண்டவர் இது தன்னுடைய கனவு திட்டம் என்று தெரிவித்து அதற்க்கான வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.

இதற்க்காக நடராஜன் நேரடியாக களத்தில் இறங்கி சொந்தமாக கிரிக்கெட் மைதானம் ஒன்றை உருவாக்கி அதில் ,நான்கு செண்டர் பிட்ச்சுகள், இரண்டு பயிற்சி தடங்கள், ஜிம், கேண்டீன் மற்றும் 100 பார்வையாளர்கள் தங்கக்கூடிய ஒரு மினி கேலரி ஆகியவை இடம்பெறும் வகையில் உருவாக்கி திருப்பு விழாவும் நடத்தி தன்னுடைய கனவை நனவாகியுள்ளார் நடராஜன்.

இந்நிலையில் இனி வரும் காலங்களில் நடராஜன் உருவாக்கிய இந்த மைதானத்தில் பயிற்சி பெற்ற வீரர்கள் பலர் இந்திய அணியில் இடம் பெறுவார்கள் என்பது குறிப்பிடதக்கது, அந்த வகையில் தனக்கு கிடைத்த பணத்தில் ஏக போக வாழ்கை வாழ்ந்தால் போதும் என நினைக்காமல், நடராஜனின் இந்த செயல் கோடி கோடியாக சம்பளம் வாங்கிக்கொண்டு சமுதாய வளர்ச்சிக்கு எதுவுமே செய்யாமல் இருக்கும் நடிகர்களுக்கு விழுந்து சவுக்கடி என்பது குறிப்பிடத்தக்கது.