விஜய்யை நம்பி நடு தெருவுக்கு வர இருக்கும் கிரிக்கெட் வீரர் தோனி… எச்சரித்த முக்கிய பிரமுகர்.. எதனால் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் விஜய் நடித்த படங்களை இயக்கிய பல தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து படம் தயாரிப்பதை கைவிட்டு போகும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அந்த வகையில் பல வெற்றி படங்களை இயக்கி கொடிகட்டி பறந்த தேனான்டாம்பல் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில் பணியாற்றிய மேஜிக் மேன் சம்பள பாக்கியை கொடுக்க முடியாத அளவுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்தது மெர்சல் படம்.

இதன் பின்பு படம் தயாரிப்பதையே சில காலம் நிறுத்தி இருந்த தேனாண்டாம்பால் பிலிம்ஸ் தற்பொழுது மீண்டும் சிறிய பட்ஜெட் படங்களை தயாரித்து வருகின்றனர். அதேபோன்று தற்பொழுது முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான பிகில் படம் வசூல் ரீதியாக நஷ்டத்தை ஏற்படுத்திய அந்த தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது. பிகில் படத்திற்கு பின்பு ஏஜிஎஸ் நிறுவனம் படம் தயாரிப்பதை குறைத்துக் கொண்டனர்.

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான தெறி படம் மட்டுமே அதன் தயாரிப்பாளருக்கு லாபத்தை பெற்று தந்தது.அதன் பின்பு விஜய் நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே படத்தின் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் வெற்றி பெற்று விட்டது என்கின்ற ஒரு போலியான பிம்பத்தை உருவாக்கி அந்த படத்தின் வெற்றி விழாவை கொண்டாடி வந்தனர், விஜய் உட்பட படக்குழுவினர்.

அதேபோன்று தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் மட்டுமின்றி நடிகர் அஜித்தை வைத்து படம் தயாரித்து மிகப் பெரிய நஷ்டத்தில் இருக்கிறார் போனி கபூர் தமிழ். இப்படி சினிமாவில் முன்னணி நடிகரை வைத்து படம் தயாரித்த பல தயாரிப்பாளர்கள் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில், விஜய் தற்பொழுது நடிக்கும் வாரிசு படத்தை முடித்துவிட்டு அதன் பின்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார்.

அதனை தொடர்ந்து விஜயின் 70-வது படத்தை பிரபல முன்னாள் இந்தியன் கிரிக்கெட் டீம் கேப்டன் மகேந்திர சிங் டோனி தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகிறது. இந்த படத்தை தெலுங்கு, மலையாளம், தமிழ் கன்னடம் என்று பல மொழிகளில் தயாரிக்க இருக்கும் மகேந்திர சிங் டோனி, இதை பேன் இந்தியா படமாக எடுக்க திட்டமிட்டுள்ளார். அதற்கான கால் சீட்டு விஜயிடம் இருந்து பெற்றுள்ளார் கிரிக்கெட் வீரர் தோனி.

இந்நிலையில் தோனிக்கு நெருக்கமான சிலர் அறிவுரை இந்த விபரீதமான முடிவை எடுக்க வேண்டாம் என்று தோனிக்கு அறிவுறுத்தி வருகிறார்கள். விஜயை வைத்து படம் எடுத்தால் பின்பு பணத்தை இழந்து நடுரோட்டில் தான் நிற்க வேண்டும் என்று அவர்கள் அறிவுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் தமிழ் சினிமா என்பது ஒரு சூதாட்டம் போன்றது இதில் பலர் பணத்தை தான் இழந்து உள்ளார்கள் என்றும்,

குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டுமே லாபத்தை பெற்றுள்ளார்கள் என்கின்ற பல உதாரணங்களை மகேந்திர சிங் தோனிக்கு நெருக்கமானவர்கள் பலர் தெரிவித்து வருகின்றனர்.இதனால் சினிமா தயாரிக்கும் முடிவில் சற்று பின்வாங்கியுள்ளார் தோனி. மிக பெரிய குழப்பத்தில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் தோனி உறுதியாக படம் தயாரிக்க தமிழ் சினிமாவுக்கு வந்தால், போனி கபூர் போன்று பணத்தை இழக்க நேரிடும் என பரிதாப படுகிறார்கள் மற்ற தயாரிப்பாளர்கள் என்பது குறிப்பிடதக்கது.