காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட போண்டாமணி… இரக்கமே இல்லாமல் எட்டி உதைத்த வடிவேலு…

0
Follow on Google News

இலங்கைத் தமிழரான நடிகர் போண்டாமணி, இலங்கையிலிருந்து தமிழகத்தில் தஞ்சம் அடைந்து, தமிழ் சினிமா வாய்ப்புகள் தேடி சிறுசிறு நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று, சுமார் 25 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வரும் போண்டா மணி, பெரும்பாலும் நடிகர் வடிவேலுவின் காமெடி காட்சிகளில் இணைந்து நடித்துள்ளார்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சுவாச பிரச்சனை காரணமாக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் போண்டா மணி,

சிறுநீரக மாற்று சிகிச்சை செய்வதற்கு தனக்கு உதவும்படி வேண்டுகோள் விடுத்து கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டு இருந்தார் போண்டாமணி. இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ், விஜய் சேதுபதி போன்ற பல நடிகர்கள் அவருக்கு பண உதவி செய்து வந்தனர். அந்த காலகட்டத்தில் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்ற நடிகர் வடிவேலுவை பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டு, போண்டாமணி மருத்துவமனையில் இருப்பது குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் இருக்கும் செய்தி அறிந்தேன். அவருக்கு நிச்சயம் உதவி செய்வேன் என்று வடிவேலு தெரிவித்தார். இதனை தொடர்ந்து வடிவேலுவின் பேட்டியை பார்த்த போண்டாமணி மிகுந்த எதிர்பார்ப்புடன் வடிவேலு தனக்கு உதவி செய்வார் என ஆவலுடன் இருந்துள்ளார். ஆனால் எந்த ஒரு உதவியும் வடிவேலு செய்யாததால் போண்டாமணி மிகுந்த ஏமாற்றம் அடைந்ததாக கூறப்பட்டது.

மேலும் வடிவேலு தொலைபேசியில் தொடர்பு கொண்டு போண்டாமணியிடம் நலம் கூட விசாரிக்கவில்லை. இது வடிவேலுவின் மனிதாபிமான அற்ற செயலை காட்டுவதாக விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, உடல்நலம் பெற்று வீடு திருப்பிய போண்டாமணி சமீபத்தில் உயிர் இழந்தார், அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு வடிவேலு குறித்து கண்ணீர் மல்க பேசிய பேட்டியை பார்த்தவர்களுக்கு, வடிவேலு இந்த அளவுக்கு படு மோசமானவரா என தோன்றும் அளவுக்கு இருந்தது.

போண்டாமணி அந்த பேட்டியில் பேசுகையில், வடிவேலு கூட்டணியில் இணைந்து பல படங்கள் நடித்தேன், ஆனால் வடிவேலு தன்னுடன் இருக்கும் யாரையும் முன்னேற விடமாட்டார். அவருடன் இருப்பவர்களை அவரின் காலடியில் தான் இருக்க வேண்டும் என்று நினைப்பவர். அவருடன் இருக்கும்போது பல அவமானங்களை சந்தித்துள்ளேன் என வேதனையை வெளிப்படுத்திய போண்டா மணி.

தொடர்ந்து அவருடன் 5 சீசன்களில் நடிக்க முடியாது. திறமைசாளிகளை முன்னேற விடாமல் தடுத்துவிடுவார். நடிகர் சிங்கமுத்து தான் எனக்கு திருமணம் செய்து பல வகையில் உதவி செய்தவர். இன்னும் என்னை அவர்தான் கவனித்து வருகிறார். ஒருமுறை பாண்டிச்சேரியில் வடிவேலு சிங்கமுத்து இருவரும் சேரவது குறித்து கேட்டார்கள். நான் இருவரும் சேர்ந்தால் நன்றாக இருக்கும என்று சொன்னேன்.

அது பேப்பரில் ஹெட்லைனாக வந்தது. இதை பார்த்த வடிவேலு நள்ளிரவு 2 மணிக்கு போன் செய்து கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டிவிட்டு ஆபீஸ் பக்கம் வராதே என்று சொல்லிவிட்டார். ஆனாலும் மறுநாள் அவரின் ஆபீஸ்க்கு சென்றேன். கண்டபடி பேசினார். அவர் காலை பிடித்து கெஞ்சி மன்னிப்பு கேட்டேன். ஆனால் அவர் என் நெஞ்சில் மிதித்து வெளியே போ என்று சொல்லிவிட்டார். அதோடு சரி அதன்பிறகு இன்னமும் அந்த ஆபீஸ் பக்கம் நான் போகவில்லை. திறமைசாளிகள் வளர்ந்துவிடக்கூடாது என்பதில் வடிவேலு தெளிவாக இருப்பார் என வடிவேலுவின் யாரும் அறியாத குணத்தை பற்றி வேதனையுடன் மரணம் அடைவதற்கு சில நாட்களுக்கு முன்பு போண்டா மணி பேசியது குறிப்பிடதக்கது.