தமிழ் சினிமா மற்றும் இல்லாமல் இந்தியா சினிமாவில் முக்கிய பிரபலமாக இருந்து வருகின்றார் நடிகர் ரஜினிகாந்த். இந்திய பிரதமர் முதல் மலேசியா பிரதமர் வரை ரஜினிகாந்தை நேரில் சந்திக்க அவரிடம் அனுமதி பெற்று போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்தை சந்தித்து வரும் அளவுக்கு மிக பெரிய உச்சத்தில் இருக்கிறார். ஆனால் இப்படி உச்சத்தில் இருக்கும் ரஜினிகாந்தை நேரில் அழைத்து அசிங்கப்படுத்தி அனுப்பிய சம்பவம் என்று வெளியாகியுள்ளது.
1778ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் ஆயிரம் ஜன்னல்கள், இந்த படத்தில் ரஜினிகாந்த் நடித்து கொண்டிருந்த போது, அந்த படத்தின் நாயகி லதா உடன் காதல் கிசு கிசுவில் சிக்கினார் ரஜினிகாந்த் இந்த தகவல் அறிந்த அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் தனது சகாக்கள் மூலம் ரஜினிகாந்தை கண்டித்துள்ளார், ஆனால் ரஜினிகாந்த் லதாவை விட்டு பிரிவதாக இல்லை, இதன் பின்பு முள்ளும் மலர் படத்தில் ரஜினிகாந்த் – லதா ஜோடி மீண்டும் இணைந்தது.
முள்ளும் மலர் படப்பிடிப்பு சுமார் மூன்று நாட்கள் முடிவடைந்த நிலையில், இந்த தகவல் எம்ஜிஆர் கவனத்துக்கு சென்றுள்ளது. உடனே ஆர்.எம்.வீரப்பனை அனுப்பி லதா ரஜினிகாந்த் உடன் ஜோடியாக நடிக்க கூடாது என தெரிவிக்க. முள்ளும் மலர் படத்தின் தயாரிப்பாளரிடம் பேசி நடந்து முடிந்த மூன்று நாட்கள் படப்பிடிப்புக்காக செலவு செய்த பணத்தை கொடுத்து அந்த படத்தில் இருந்து லதாவை வெளியேற்றிவிட்டு மற்ற நடிகையை நடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் பின்பும் தொடர்ந்து நெருங்கி பழகி வந்த ரஜினிகாந்த் – லதா ஜோடியை பிரிப்பதற்காக பல்வேறு நெருக்கடியை ரஜினிகாந்துக்கு கொடுத்து வந்துள்ளார் எம்ஜிஆர். ஒரு கட்டத்தில் தமிழகத்தில் இருந்தால் தானே பிரச்சனை என கர்நாடகாவுக்கு சென்று அங்கே திருமணம் செய்து கொள்வோம் என தப்பித்து ஓடிய ரஜினிகாந்த் – லதா ஜோடியை ஓசூர் அருகே எம்ஜிஆர் ஆட்களை விட்டு பிடித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஒரு கட்டத்தில் ரஜினிகாந்த் – லதா ஜோடி பிரிந்த பின்பு, தன்னை பேட்டி எடுக்க வந்த கல்லூரி மாணவி லதாவை காதலித்து திருமணம் செய்தார். அந்த திருமணம் அழைப்பிதழ் கொடுப்பதற்காக அப்போதைய முதல்வர் எம்ஜிஆரை சந்திக்க நேரம் கேட்டு, மாம்பலத்தில் உள்ள எம்ஜிஆர் வீட்டுக்கு சென்றுள்ளார் ரஜினிகாந்த், அப்போது முதல்வர் மேலே இருக்கிறார் நீங்கள் காத்திருங்கள் என ரஜினிகாந்த் காக்க வைக்கப்பட்டுள்ளார்.
காலை 10 மன்னிக்கு வந்த ரஜினிகாந்தை மாலை 4 மணி வரை காக்க வைத்து விட்டு. பத்திரிக்கையை கீழே கொடுத்து விட்டு போங்க, எம்ஜிஆர் இப்போது உங்களை பார்க்க முடியாது என ரஜினிகாந்தை அசிக்கப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். தான் அசிங்கப்பட விஷயத்தை பிரபல சினிமா பத்திரிகைக்கு பேட்டி மூலம் வெளியிட்டுள்ளார் ரஜினிகாந்த். இதன் பின்பு ரஜினிகாந்த் மீது செம்ம கடுப்பில் இருந்த எம்ஜிஆர்,
ஒரு முறை மது போதையில் பத்திரிகையாளர் ஒருவரை கார் ஏற்றி கொலை செய்ய முயற்சித்தாக ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட போது. இந்த வழக்கில் ரஜினிகாந்தை சிக்க வைத்து விட வேண்டும் என எம்ஜிஆர் காய் நகற்றியுள்ளார். ஆனால் அந்த வழக்கில் தொடர்புடைய பத்திரிகையாளர் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் சமாதானம் ஆனதை தொடர்ந்து எம்ஜிஆர் போட்ட திட்டம் தோல்வியை தழுவியதாக கூறப்படுகிறது.