நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 9ம் தேதி மகாபலிபுரத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. முதலில் இவர்கள் திருமணம் திருப்பதியில் நடைபெறும் என தகவல் வெளியானது. ஆனால் திருப்பதியில் திருமணம் நடந்த பல கட்டுப்பாடுகளை கோவில் நிர்வாகம் விதித்ததால், திருப்பதிக்கு பதில் மகாபலிபுரத்தில் படப்பிடிப்பு போன்று செட் அமைத்து பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த அரங்கில் 500 நபர்கள் மட்டுமே அமரும் வகையில் இருந்தது.
சினிமாவில் மிக பெரிய உச்சத்தில் இருந்த நடிகை நயன்தாரா தற்பொழுது ஒரு படத்துக்கு 10 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார்,அடுத்து அவர் நடிக்கும் படத்திற்கு 15 கோடி வரை சம்பளம் பேசப்பட்டு வந்தது. இந்த நேரத்தில் தீடிரென திருமணம் செய்து கொண்டது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், தன்னுடைய திருமணத்தை 25 கோடி ரூபாய்க்கு OTT தளத்தில் வெளியிட நெட் பிலிக்ஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளார்.
இதனால் நயன்தாரா திருமணம் முழுவது நெட் பிலிக்ஸ் கட்டுப்பாட்டில் தான் நடைபெற்றது. செட் அமைப்பது, அலங்கார தோரணை அமைப்பது, எப்படி தாலி கட்டுவது, தாலி கட்டிய பின்பு எந்த காமேராவை பார்த்து போஸ் கொடுக்க வேண்டும், என திருமணத்துக்கு முதல் நாள், நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் ஒரு முறை ரிகர்சல் பார்த்ததாக கூறப்படுகிறது. திருமணம் நடை பெற்ற மணடபத்தில் பல கோணத்தில் சினிமா படப்பிடிப்பு போன்று கேமரா பொருத்தப்பட்டிருந்தது.
மேலும் திருமணத்திற்கு வரும் பிரபலங்கள் உள்ளே அழைத்து வரப்படவேண்டியது, மற்றும் பௌண்சர் எனப்படும் பாதுகாவலர்கள், அனைத்துமே நயன்தாரா திருமணத்தை விலைக்கு வாங்கிய நெட் பிலிக்ஸ் கட்டுப்பாட்டில் தான் இருந்தது, தமிழ் சினிமாவில் முன்னனி நடிகரான ரஜினிகாந்த் கார் கூட உள்ளே வருவதற்க்கு அனுமதியில்லை, வெளியில் இறக்கி விடப்பட்டு அங்கிருந்து உள்ளே பேட்டரியில் இயங்கும் காரில் அழைத்து வரப்பட்டார்.
மேலும் உள்ளே செல்ல தொலைபேசி அனுமதி மறுக்கப்பட்டது, இதனால் சில முக்கிய சினிமா பிரபலங்கள் சண்டையிட்டு தொலைபேசி அனுமதியில்லை என்றால், நான் திருமணத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என திருமணத்துக்கு வந்தவர்கள் திரும்பி சென்றனர். ஆனால் திரும்பி சென்றாலும் பரவாயில்லை தொலைபேசியுடன் அனுமதிக்கமாட்டோம் என திட்டவட்டமாக அங்கே பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் தெரிவித்து விட்டனர்.
இது போன்ற கடும் கட்டுப்பாடுகள் இருப்பதை அறிந்து தான், இப்படி ஒரு திருமணத்துக்கு போக வேண்டுமா என நடிகர்கள் விஜய், அஜித், சிவகார்த்திகேயன், விக்ரம், கமலஹாசன் போன்ற நடிகர்கள் புறக்கணித்ததாகவும், மேலும் நயன்தாரா நெருக்கிய தோழியான சமந்தா, த்ரிஷா போன்றவர்கள் கூட நயன்தாரா திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை, 300 அழைப்பிதழ் மட்டுமே கொடுத்த நிலையில் அதில் முக்கியமானவர்கள் பலர் திருமணத்துக்கு வரவில்லை மேலும் திருமணத்துக்கு வராதவர்கள் டிவீட்டரில் வாழ்த்து கூட தெரிவிக்காமல் நயன்தாரா திருமணத்தை புறக்கணித்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.