ஆண் நண்பர்களுடன் காருக்குள் நடந்தது என்ன.? விபத்தில் சிக்கிய நடிகை யாஷிகா ஆனந்த்….. தோழி உயிரிழப்பு.! விபத்துக்கு காரணம் மது போதையா.?

0
Follow on Google News

ஜீவா நடிப்பில் வெளியான ‘கவலை வேண்டாம்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். அதனைத் தொடர்ந்து ‘துருவங்கள் பதினாறு’, ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’, ‘ஜோம்பி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானார். தொடர்ந்து சமூக வலைதளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் யாஷிகா ஆனந்த் தற்போது நடிகர் SJ சூர்யாவுக்கு ஜோடியாக புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் யாஷிகா ஆனந்த் நலம் தோழியான வள்ளிச்செட்டி பவணி மற்றும் இரண்டு ஆண் நண்பர்களுடன் புதுச்சேரி சென்று இருந்தனர். அங்கே புதுச்சேரியில் நடந்த இரவு பார்ட்டியில் நண்பர்களுடன் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக இருந்துள்ளார். இதன் பின்பு நள்ளிரவு புதுச்சேரியில் இருந்து சென்னையை நோக்கி தனது டாடா ஹேரியர் காரில் பயணம் சென்றுள்ளார், இந்த காரை யாஷிகா ஆனந்த் ஓட்டி வந்துள்ளார். உடன் தோழி மற்றும் இரண்டு ஆண் நண்பர்கள் பயணித்து வந்துள்ளனர்.

சென்னை கிழக்கு சாலை வழியாக யாஷிகா ஆனந்த் தனது நண்பர்களுடன் காரில் வரும்போது காரில் பாடல் போட்டு டான்ஸ் ஆடி வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நள்ளிரவு 1 மணியளவில் மகாபலிபுரம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்துள்ளது. இதனைக் கண்ட சக வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு நெடுஞ்சாலையில் அருகே இருந்த, பூஞ்சேரியில் உள்ள விபத்து சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த நடித்த நடிகை யாஷிகா ஆனந்த், மற்றும் அவரது இரு ஆண் நண்பர்கள் படுகாயத்துடன் சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் யாஷிகாவின் தோழியான ஹைதராபாத் பகுதியை சேர்ந்த வள்ளிச்செட்டி பவணி என்பவர் பூஞ்சேரி விபத்து சிகிச்சை மையத்தில் முதலுதவி செய்து கொண்டிருக்கும் பொழுதே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் கார் விபத்து வழக்கில், யாஷிகா காரை ஓட்டி வந்ததாக காவல்துறையினர் 3 பிரிவு வழக்குப்பதிவு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.279 337 304 A ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் காரை ஓட்டி வந்த யாஷிகா ஆனந்த் மது அருந்திவிட்டு காரை ஓட்டி வந்தாரா என காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் விபத்துக்கான முழு விவரம் தெரியவரும் என தகவல் வெளியாகியுள்ளது.